- Home
- Astrology
- Vinayagar Chathurthi: 500 ஆண்டுகளுக்குப் பிறகு விநாயகர் சதுர்த்தியில் உருவாகும் 6 ராஜயோகங்கள்..5 ராசிகளுக்கு பணம் கொட்டப் போகுது.!
Vinayagar Chathurthi: 500 ஆண்டுகளுக்குப் பிறகு விநாயகர் சதுர்த்தியில் உருவாகும் 6 ராஜயோகங்கள்..5 ராசிகளுக்கு பணம் கொட்டப் போகுது.!
500 ஆண்டுகளுக்குப் பிறகு விநாயகர் சதுர்த்தி அன்று அரிய நிகழ்வு நடக்க உள்ளது. ஒரே தினத்தில் 6 ராஜயோகங்கள் உருவாக உள்ளதால், 5 ராசிக்காரர்கள் மிகுந்த பலன்களை அடைய உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

விநாயகர் சதுர்த்தியில் உருவாகும் 6 ராஜயோகங்கள்
ஜோதிட சாஸ்திரங்களின்படி விநாயகர் சதுர்த்தி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தினமாகும். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 27 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விநாயகர் சதுர்த்தி தினத்தில் ஆறு அரிய ராஜ யோகங்கள் உருவாக உள்ளது.
1.கன்னி ராசியில் சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தால் உருவாக்கப்படும் தனயோகம்,
2. கடக ராசியில் புதன் மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் உருவாகும் லட்சுமி நாராயண யோகம்,
3. குரு - சந்திரன் உருவாக்கும் கஜகேசரி யோகம்,
4. சூரியன் தனது சொந்த ராசியான சிம்மத்தில் உருவாக்கும் ஆதித்த யோகம்,
5. ரவி யோகம்,
6. சுபயோகம் போன்ற ஆறு ராஜ யோகங்கள் விநாயகர் சதுர்த்தி தினத்தில் உருவாகின்றன. இந்த யோகங்கள் மிதுனம், கடகம் உட்பட ஐந்து ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பலன்களை தர உள்ளன. அந்த ராசிகள் குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.
1.கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த ஆறு அரிய ராஜ யோகம் அதிக மகிழ்ச்சியை தரவுள்ளது. உங்கள் வருமானம் இரட்டிப்பு லாபத்தை பெற இருக்கிறது. இதன் மூலம் உங்களுக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாக்கப்படும். முதலீடுகளில் இருந்தும் நீங்கள் நன்மைகளை பெறலாம். தொழில் முனைவோர்கள் தங்கள் திறன்களை வெளிப்படுத்தி உங்கள் தொழிலை பெரிய நிறுவனமாக மாற்றுவீர்கள். இந்த காலகட்டத்தில் தொழில் முனைவோர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். இதன் காரணமாக நீங்கள் புதிய முதலீடுகளில் பணத்தை முதலீடு செய்வீர்கள். சமூகத்திலும் உங்களுக்கு மரியாதை மற்றும் அந்தஸ்து கிடைக்கும். இதனுடன் பணத்தை சேமிப்பதிலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
2. கடகம்
விநாயகர் சதுர்த்தி அன்று உருவாக்கும் இந்த ஆறு சுபயோகத்தால் கடக ராசிக்காரர்கள் நல்ல பலன்களை அனுபவிக்க இருக்கிறார்கள். குடும்பத்தில் நிலவி வந்த அனைத்து பிரச்சனைகளையும் சரி ஆகி, குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். பல மகிழ்ச்சியான செய்திகள் உங்களைத் தேடி வரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு சுப செய்திகள் வந்து சேரலாம். வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றம் இருக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு இந்த காலகட்டம் நல்ல பலன்களைத் தரும். சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். ஏற்கனவே கடக ராசியில் புதன் மற்றும் சுக்கிரன் இணைந்து லட்சுமி நாராயண யோகம் உருவாகி இருப்பதால் கடக ராசியினர் கூடுதல் பலன்களை அனுபவிக்க உள்ளனர்.
3. சிம்மம்
விநாயகர் சதுர்த்தி அன்று உருவாகும் சுப யோகங்கள் சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை அள்ளி வழங்க உள்ளது. புதிய வேலைகளை தொடங்க நினைப்பவர்கள் இந்த நேரத்தில் அதைத் தொடங்கலாம். அரசு ஒப்பந்தங்களைப் பெற முயற்சிப்பவர்களுக்கு இந்த நேரத்தில் நல்ல செய்தி கிடைக்கும். தந்தை வழி அல்லது மாமனார் வழியில் இருந்து ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் உறவு சமூகமாக இருக்கும். அரசு தொடர்பான விஷயங்களிலும், சட்டரீதியான வழக்குகளிலும் வெற்றி பெறும் காலம் நெருங்கியுள்ளது. சட்டப் போராட்டங்களுக்காக நீதிமன்றத்தை நாடி இருப்பவர்கள் வெற்றியை உறுதி செய்வீர்கள். பரம்பரை சொத்துக்களை பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. ஆரோக்கியமும், உடல்நலமும் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
4. துலாம்
இந்த ஆறு சுபயோகங்கள் துலாம் ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்த உள்ளன. திருமணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல இடத்தில் திருமண வரன்கள் கைகூடிவரும். ஏற்கனவே திருமணம் ஆனவர்களின் திருமண வாழ்க்கை சுமூகமாக இருக்கும். வாழ்க்கையில் புதிய திருப்புமுனைகள் ஏற்படும். வியாபாரத்தில் நல்ல நிதி ஆதாயங்கள் ஏற்படும். இந்த நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும். நிலுவையில் இருக்கும் வேலைகள் நிறைவடையும். நீண்ட காலமாக தள்ளிக் கொண்டே வந்த பணிகள் சுமூகமாக முடிவடையும். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் நடத்தை மற்றும் இனிமையான தன்மையால் பிறரை ஈர்ப்பீர்கள். புதிய சொத்துக்கள், நிலம் அல்லது முதலீடுகள் செய்வதற்கான வாய்ப்புகள் கைகூடிவரும்.
5. மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு விநாயகர் சதுர்த்தி அன்று உருவாகும் ராஜயோகங்கள் சிறப்பான பலன்களை தர உள்ளது. இந்த சேர்க்கை உங்களுக்கு மிகுந்த நன்மைகளை தரும். இந்த நேரத்தில் உங்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். சிக்கிய பணங்கள் மீண்டும் கைக்கு வந்து சேரும். பல பிரச்சனைகள் தீர்க்கப்படும். குறுகிய அல்லது நீண்ட பயணத்தை மேற்கொள்ள நேரிடும். அதன் மூலம் நிதி ஆகாயம் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அதை நீங்கள் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இருப்பினும் இது உங்களுக்கு சாதகமான பலன்களே தரும். விநாயகரின் ஆசிர்வாதத்தால் அடுத்த சில தினங்கள் உங்களுக்கு மங்களகரமானதாக மாறும். தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டிலும் முன்னேற்றம் இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் வேத ஜோதிடத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை மற்றும் பொதுவான வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டவை. தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து தாக்கங்கள் மாறுபடலாம், எனவே கூடுதல் தகவல்களுக்கு அனுபவமிக்க ஜோதிடரை அணுகவும்)