- Home
- Astrology
- Astrology: சிம்ம ராசியில் இணையும் புதன் - கேது.! 3 ராசிக்காரர்கள் வாழ்வில் நல்ல மாற்றம் வரப்போகுது.!
Astrology: சிம்ம ராசியில் இணையும் புதன் - கேது.! 3 ராசிக்காரர்கள் வாழ்வில் நல்ல மாற்றம் வரப்போகுது.!
சிம்ம ராசியில் புதன் மற்றும் கேது இணைவு காரணமாக மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

புதன் - கேது சேர்க்கை 2025
ஜோதிட சாஸ்திரங்களின்படி கிரகங்கள் அவ்வப்போது தங்கள் ராசிகளை மாற்றி பிற கிரகங்களுடன் இணைகின்றன. அந்த சமயத்தில் சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகி மக்களின் வாழ்க்கையில் தாக்கங்களை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் நிழல் கிரகமாக இருக்கும் கேது சிம்ம ராசியில் சுமார் 18 ஆண்டுகளுக்கு பின்பு நுழைந்து பயணித்து வருகிறார். வருகிற ஆகஸ்ட் 30 ஆம் தேதி புதன் கிரகம் சிம்ம ராசிக்குள் நுழைகிறார். சுமார் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை ஒரே ராசியில் நிகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அரிய சேர்க்கை காரணமாக ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் அடுத்த சில தினங்களுக்கு, சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்க உள்ளது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மகர ராசி
கேது மற்றும் புதனின் சேர்க்கை மகர ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களை தரவுள்ளது. இவர்களுக்கு திடீர் நிதி ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தை பெருக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், அன்புக்குரியவர்களுடன் பயணம் செல்லும் வாய்ப்புகள் உள்ளன. வெளிநாடு செல்ல காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கலாம். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு சுப செய்திகள் வந்து சேரலாம். நிலுவையில் உள்ள பணிகள் நிறைவடையும். வருமான ஆதாரங்கள் பெருகும். பெற்றோரின் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
சிம்ம ராசி
புதன் கேது சேர்க்கையானது, சிம்ம ராசியினருக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரும். இந்த சேர்க்கை உங்கள் ஜாதகத்தின் முதல் வீட்டில் நிகழவுள்ளது. இதனால் திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத பணவரவால் உங்கள் நிதி நிலைமை சீராகும். வாழ்வில் உங்களுக்கு மகிழ்ச்சியும், அதிர்ஷ்டமும் பெருகும். தொழில் ரீதியாக நல்ல நேரம் கைகூட உள்ளது. வணிகத்தில் கூட்டாளிகள் மூலமாக நன்மைகள் கிடைக்கும். திருமண வாழ்க்கை பாதுகாப்பானதாகவும், நிலையானதாகவும் இருக்கும். உங்கள் துணையுடன் நல்ல நேரத்தை செயல்படுவீர்கள். இதுவரை சந்தித்து வந்த உடல்நலப் பிரச்சினைகள் நீங்கி, ஆரோக்கியம் பெருகும். பிள்ளைகள் மூலமாக குடும்பத்தில் மகிழ்ச்சி வந்து சேரும்.
தனுசு ராசி
தனுசு ராசிக்காரர்களுக்கு கேது மற்றும் புதன் சேர்க்கை நேர்மறையான மாற்றங்களை கொண்டு வர உள்ளது. இந்த இணைப்பானது உங்கள் ராசியில் இருந்து ஒன்பதாவது வீட்டில் நிகழ்கிறது. தனுசு ராசிக்காரர்களுக்கு கேது புதன் சேர்க்கை பல்வேறு தொழில்களில் இருந்து லாபம் ஈட்ட சரியான நேரம் ஆகும். கடின உழைப்புக்கு வெகுமதி கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் இருந்து ஆதரவைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் மற்றும் வாய்ப்புகள் கிடைக்கலாம். சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறுவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஜோதிட கருத்துக்கள் பொதுவான பலன்கள் மட்டுமே. இதன் நம்பகத்தன்மைக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. ஒருவரின் ஜாதகம், கிரக நிலைகள், தசா புத்திகளுக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும். எனவே அனுபவமிக்க ஜோதிடரை அணுகி ஆலோசனை மேற்கொள்வது நல்லது)