- Home
- Astrology
- மீன ராசியில் சந்திக்கும் இரு சக்தி வாய்ந்த கிரகங்கள்.! 3 ராசிகளுக்கு வெற்றி மேல் வெற்றி குவியும்.! தொட்டதெல்லாம் பொன்னாகும்.!
மீன ராசியில் சந்திக்கும் இரு சக்தி வாய்ந்த கிரகங்கள்.! 3 ராசிகளுக்கு வெற்றி மேல் வெற்றி குவியும்.! தொட்டதெல்லாம் பொன்னாகும்.!
Saturn Mars Transit in Pisces Lucky Zodiac Signs : ஜோதிடத்தின்படி விரைவில் மீன ராசியில் சனி மற்றும் செவ்வாய் இணைவு நடைபெற இருக்கிறது. இதனால் பலன்பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Saturn Mars Transit in Pisces lucky zodiac signs
ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசியை மாற்றிக்கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் ஏப்ரல் 02 ஆம் தேதி கிரகங்களின் தளபதியான செவ்வாய், மீன ராசியில் சஞ்சரிக்க இருக்கிறார்.
அங்கு ஏற்கனவே சனி பகவான் நிலை கொண்டிருக்கும் நிலையில் சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை நடைபெற இருக்கிறது. இந்த சக்தி வாய்ந்த கிரக இணைவு காரணமாக சில ராசிக்காரர்கள் நல்ல நிதி ஆதாயங்கள், தொழில் வளர்ச்சி, புதிய வாய்ப்புகளைப் பெற உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தனுசு
தனுசு ராசியின் நான்காம் வீட்டில் சனி செவ்வாய் சேர்க்கை நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தொழில் முன்னேற்றம், அபரிமிதமான லாபம் மற்றும் சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் உருவாகும். வறுமையில் வாடி வந்தவர்களின் பொருளாதார நிலை கணிசமாக உயரும். எண்ணிய விஷயங்கள் ஈடேறும். உங்களைப் பற்றிய தவறான புரிதல்கள் முடிவுக்கு வரும்.
திருமணமான தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வேலையில்லாமல் இருந்து வருபவர்களுக்கு நல்ல இடத்தில் வேலைக்கான அழைப்புகள் வரும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்கான அங்கீகாரமும், பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவையும் எதிர்பார்க்கலாம்.
மகரம்
மகர ராசியின் மூன்றாம் வீட்டில் இந்த கிரக சேர்க்கை நடைபெற இருக்கிறது. இதனால் சாதகமான மாற்றங்கள் ஏற்படக்கூடும். தொழிலில் வளர்ச்சி, தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் உண்டாகும். பணியிடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும்.
வேலையை மாற்ற யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். புதிய சொத்துக்களில் முதலீடு செய்வீர்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். சனி பகவானின் சொந்த ராசி என்பதால் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் துலங்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
கும்பம்
கும்ப ராசியினருக்கு சனி மற்றும் செவ்வாய் சேர்க்கையானது இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் நடக்க இருக்கிறது. இந்த காலகட்டத்தில் பொருளாதார ரீதியான நன்மைகளை கும்ப ராசிக்காரர்கள் பெறுவீர்கள். சகல நன்மைகளும் வந்து சேரும். தொழில் செய்து வருபவர்கள் பெரிய வெற்றிகளைப் பெறுவீர்கள்.
வேலை தேடுபவர்களுக்கு இந்த காலகட்டத்தில் பொருத்தமான வேலை கிடைக்கும். பணம் சம்பாதிப்பதற்காக வாய்ப்புகள் உருவாகும். கடந்த கால முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். நேர்மை மற்றும் உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி நிலைமை சீராகும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

