- Home
- Astrology
- Astrology: சூரியன் தரும் ராஜயோகம்.. கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள்.. தொட்டதெல்லாம் பொன்னாகும்!
Astrology: சூரியன் தரும் ராஜயோகம்.. கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள்.. தொட்டதெல்லாம் பொன்னாகும்!
Astrology: சூரியனின் நட்சத்திர இடப்பெயர்ச்சியால் 3 ராசிகளுக்கு ராஜயோகம் கூடி வந்துள்ளது. தொட்டதெல்லாம் பொன்னாகும். அவை எந்தெந்த ராசிகள்? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

Sun Transit 2026
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் முதன்மையானவராகவும், ராஜாவாகவும் சூரிய பகவான் போற்றப்படுகிறார். இதனால், மற்ற கிரகங்களின் நகர்வுகளை விட சூரியனின் ராசி மற்றும் நட்சத்திர மாற்றங்கள் மனித வாழ்க்கையில் மிக முக்கிய திருப்புமுனைகளை ஏற்படுத்துகின்றன.
அந்தவகையில், இந்த ஜூலை மாதத்தில் நிகழப்போகும் சூரியனின் நட்சத்திர இடப்பெயர்ச்சி ஆன்மீக ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
வரும் ஜூலை 20 ஆம் தேதி சூரிய பகவான் பூச நட்சத்திரத்திற்குள் பிரவேசிக்க உள்ளார். வரவிருக்கும் ஆகஸ்ட் 03 ஆம் தேதி வரை அவர் இதே நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார். இந்த நட்சத்திர மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்பட்டாலும், குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் பொற்காலமாக அமையப்போகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று இங்கே காண்போம்.
இதையும் படிங்க:Chanakya Niti: இந்த 4 குணமுள்ளவங்க உங்க மனைவி கூட பழகினா குடும்பமே சீரழிஞ்சிடும்! கணவர்களே உஷார்!
மேஷம்
மேஷ ராசி நேயர்களுக்கு இந்த சூரிய நட்சத்திர பெயர்ச்சி அபரிமிதமான அதிர்ஷ்டத்தையும், நல்வாழ்வையும் அள்ளித்தரவுள்ளது. நிதிநிலை வலுவடையும். நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த காரியங்கள் மற்றும் தொழில் திட்டங்கள் இப்போது தடையின்றி மீண்டும் தொடங்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பதவிகளும், பொறுப்புகளும் தேடி வரும். ஆரம்பத்தில் சவாலாக இருந்தாலும், உங்களின் திறமையை மேலதிகாரிகளுக்கு நிரூபிக்க இதுவே சிறந்த வாய்ப்பு. புதிய முதலீடுகளைச் செய்ய நினைப்போருக்கு இது சாதகமான காலம்.
உடல்நலம் திருப்திகரமாக இருக்கும், இது உங்களை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஒத்துழைப்பு உங்களுக்குக் கிடைக்கும். நீண்ட நாள் மனக்கவலைகள் நீங்கி அமைதி உண்டாகும்.
இதையும் படிங்க: புதன் தரும் பத்ர ராஜயோகம் 2026: கடன் தீரும், காசு சேரும்.. அதிர்ஷ்டக் காற்றில் மிதக்கப்போகும் 3 ராசிகள்!
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதியே சூரியன் என்பதால், இந்த பூச நட்சத்திரப் பெயர்ச்சி உங்களுக்கு நேரடியாகவே பல நன்மைகளைத் தரப்போகிறது. உங்களின் பொருளாதார கிராஃப் உயரும். புதிய வணிக ஒப்பந்தங்கள் மூலம் எதிர்பாராத லாபமும், கூடுதல் வருமானமும் வந்து சேரும். வேலை செய்யும் இடத்தில் உங்களின் கடின உழைப்பிற்குப் பாராட்டும், சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்குத் தகுதியான நல்ல வேலை அமையும்.
கணவன்-மனைவி இடையே அன்யோன்யமும் புரிதலும் அதிகரிக்கும். குழந்தைகள் வழியில் மனதிற்கு மகிழ்வளிக்கும் நல்ல செய்திகள் வந்து சேரும். ஆரோக்கியம் சீராக இருப்பதால் தொட்ட காரியங்கள் யாவும் வெற்றியாகும்.
இதையும் படிங்க: Numerology: இந்த தேதிகள்ல பிறந்தவங்க உங்க கூட இருந்தா எப்போதும் ஹேப்பிதான்! இவங்க அழகான ஆன்மாக்கள்!
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியனின் இந்த நட்சத்திர மாற்றம் பல்வேறு நேர்மறை ஆற்றல்களையும், சுப பலன்களையும் அள்ளி வீசப் போகிறது. நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன்கள் வசூலாகும். இதனால் உங்களின் வங்கிச் சேமிப்பு கணிசமாக உயரும். தொழில் முதலீடுகளில் இருந்து எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாகக் கிடைக்கும்.
சமுதாயத்திலும், நீங்கள் பணிபுரியும் இடத்திலும் உங்களுக்கான மதிப்பும், மரியாதையும் பல மடங்கு உயரும். குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்கும் சூழல் அமையும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். உங்களின் நீண்ட கால ஆசைகள் மற்றும் லட்சியங்கள் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருக்கும்.

