- Home
- Astrology
- Chanakya Niti: இந்த 4 குணமுள்ளவங்க உங்க மனைவி கூட பழகினா குடும்பமே சீரழிஞ்சிடும்! கணவர்களே உஷார்!
Chanakya Niti: இந்த 4 குணமுள்ளவங்க உங்க மனைவி கூட பழகினா குடும்பமே சீரழிஞ்சிடும்! கணவர்களே உஷார்!
Chanakya Niti: சிலரின் நட்பு பெண்களின் மனதையும் சிந்தனையையும் கெடுத்துவிடும். இதனால் தான் ஒவ்வொரு கணவனும் தன் மனைவியை சிலரிடம் இருந்து தள்ளி வைக்க வேண்டும் என சாணக்கியர் கூறுகிறார். இது குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.

Chanakya Niti Tips For Happy Married Life
குடும்பங்களில் கணவன்-மனைவிக்குள் சண்டை சச்சரவு வருவது மிகவும் இயல்பான ஒரு விஷயமாகும். ஆனால், மனைவி தேவையில்லாத ஆசைகளால் வீட்டில் பிரச்சனை வருவதாக பல கணவன்மார்கள் புலம்புகிறார்கள். இதற்காக வீட்டை விட்டு வெளியே சுற்ற வேண்டியதில்லை.
உங்கள் மனைவியை சிலருடன் பழக விடாமல் தடுத்தாலே போதும் என்கிறார் சாணக்கியர். பெண்களின் மனம் சீக்கிரம் மாறிவிடும். எல்லோரும் இல்லை என்றாலும், பல பெண்கள் மற்றவர்களின் பேச்சால் எளிதில் ஈர்க்கப்படுவார்கள். இதனால்தான் பிரச்சனையே வருகிறது. அப்படி நடக்காமல் இருக்க, பெண்கள் யாரிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும் என்று இப்போது பார்க்கலாம்.
இதையும் படிங்க:Chanakya Niti: கணவன் முன்னாடி மனைவி இந்த 4 விஷயங்களை செய்யவே கூடாதாம்.. ஏன் தெரியுமா?
ஒழுக்கமற்ற பெண்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி கெட்ட பழக்கங்கள் உள்ள பெண்களிடமிருந்து உங்கள் மனைவியை தள்ளி வைக்க வேண்டும். குறிப்பாக, ஒழுக்கம் இல்லாதவர்களிடமிருந்து இன்னும் தள்ளி இருக்க வேண்டும். ஏனென்றால், அப்படிப்பட்ட பெண்கள் குடும்ப உறவுகளையோ, மற்றவர்களின் மரியாதையையோ பெரிதாக மதிக்க மாட்டார்கள். அவர்களின் நட்பு உங்கள் குடும்பத்திற்கு சிக்கலைக் கொண்டு வரும்.
அகம்பாவம் கொண்ட பெண்கள்
சில பெண்களுக்கு பணம் இருக்கிறது என்ற அகம்பாவம் அதிகமாக இருக்கும். அந்தப் பணத்தை எல்லாரிடமும் காட்டிக்கொண்டே இருப்பார்கள். தங்களிடம் பணம் இருக்கிறது, மற்றவர்களிடம் இல்லை என்று குத்திக் காட்டி காயப்படுத்துவார்கள். இவர்களுடன் உங்கள் மனைவி பழகினால், அவரின் எண்ணங்களும் மாறிவிடும். தேவையற்ற ஆசைகள் அதிகமாகும். அது உங்கள் வாழ்க்கையில் பிரச்சனையை உருவாக்கும். அதனால், இவர்களை எவ்வளவு தள்ளி வைக்கிறோமோ, அவ்வளவு நல்லது.
இதையும் படிங்க:Numerology: இந்த தேதிகள்ல பிறந்தவங்க உங்க கூட இருந்தா எப்போதும் ஹேப்பிதான்! இவங்க அழகான ஆன்மாக்கள்!
கோபக்கார பெண்கள்
சில பெண்கள் சின்ன விஷயத்துக்கே பயங்கரமாக கோபப்படுவார்கள். சுற்றியிருப்பவர்களுடன் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள். இவர்களுடனும் பழகக் கூடாது. ஏனென்றால், அவர்களின் பழக்கம் உங்கள் மனைவியையும் பாதிக்க வாய்ப்புள்ளது. இதனால் உங்கள் வீட்டில் சந்தோஷம், நிம்மதி போய்விடும்.
இதையும் படிங்க:சுக்கிர பெயர்ச்சி 2026: பண நஷ்டம், குடும்ப சண்டை! நிலைகுலையப் போகும் 4 ராசிகள்! தப்பிக்க பரிகாரங்கள்!
பொறாமை குணம் கொண்ட பெண்கள்
மற்றவர்கள் சந்தோஷமாக இருந்தாலோ, வாழ்க்கையில் கொஞ்சம் முன்னேறினாலோ சிலரால் தாங்கிக்க முடியாது. உடனே பொறாமைப்படுவார்கள். நேரில் சிரித்துப் பேசிவிட்டு, பின்னால் குழி பறிப்பார்கள். இப்படிப்பட்ட பொறாமை பிடித்த பெண்களிடம் இருந்தும் உங்கள் மனைவி தள்ளி இருப்பது நல்லது. அவர்களுடன் பழகினால், உங்கள் வீட்டு ரகசியங்கள் அவர்களுக்குத் தெரிந்துவிடும்.
உங்கள் வளர்ச்சியைக் கண்டு அவர்கள் பொறுக்க மாட்டார்கள். கடைசியில் பிரச்சனைதான் வரும். எனவே, இவர்களைத் தள்ளி வைத்தால், உங்கள் வீட்டு விஷயங்கள் வெளியே போகாது. சாணக்கியர் சொன்ன இந்த விஷயத்தை ஃபாலோ செய்தால், கணவன்-மனைவிக்கு நடுவே மூன்றாவது நபரால் பிரச்சனையே வராது. சந்தோஷமாக இருக்கலாம்.

