- Home
- Astrology
- ஜனவரியில் இரண்டு முறை உருவாகும் யுதி திருஷ்டி யோகம்.! 2026 முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் தொடங்கும்.!
ஜனவரியில் இரண்டு முறை உருவாகும் யுதி திருஷ்டி யோகம்.! 2026 முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் தொடங்கும்.!
சூரியன், புதன், சுக்கிரனால் உருவாகும் யுதி திருஷ்டி யோகம் 2026 ஆம் ஆண்டில் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தர இருக்கிறது. ஜோதிடத்தின்படி யுதி திருஷ்டி யோகம் சிறப்பு வாய்ந்தது. இது 2026 ஜனவரியில் இருமுறை உருவாகிறது.

யுதி திருஷ்டி யோகம் 2026
2026-ன் முதல் மாதமான ஜனவரி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த மாதத்தில் யுதி திருஷ்டி யோகம் இருமுறை உருவாகிறது. முதலில், ஜனவரி 21, 2026 அன்று இரவு 9 மணியளவில், கிரகங்களின் ராஜாவான சூரியன் மற்றும் இளவரசனான புதன் 0° டிகிரியில் இணைவதால் யுதி திருஷ்டி யோகம் உருவாகிறது. பின்னர், ஜனவரி 29, 2026 அன்று மாலை 4 மணியளவில், செல்வம், ஆடம்பரம், கலை மற்றும் அழகை வழங்கும் சுக்கிரன் மற்றும் புதன் 0° டிகிரியில் இணைவதால் இந்த யோகம் மீண்டும் உருவாகிறது.
ரிஷபம்
யுதி திருஷ்டி யோகத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும். மாணவர்கள் படைப்பாற்றல் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களை எதிர்பாராத வெற்றிகளைப் பெறுவார்கள். திருமணமானவர்களின் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவார்கள். படித்த படிப்புக்கு ஏற்ற வேலையில்லாமல் தவித்து வருபவர்களுக்கு இந்த நேரத்தில் புதிய வேலை வாய்ப்பும் கிடைக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வியாபாரத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவீர்கள்.
துலாம்
2026 ஜனவரியில், யுதி திருஷ்டி யோகத்தால் துலாம் ராசியினரின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். மாணவர்களின் அறிவுத்திறன் மேம்படும், பெற்றோருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி, உறவ வலுப்படும். பணியில் இருப்பவர்கள் தங்கள் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தி பாராட்டுக்களைப் பெறுவார்கள். தொழில் செய்து வருபவர்களின் பிரச்சனைகள் தீரும். நஷ்டத்தில் இருந்து வந்த தொழில் மீண்டும் சிறக்கும். லாபம் அதிகரிப்பதால் நிதி நிலைமை வலுப்பெறும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை சேரும். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.
மீனம்
ரிஷபம், துலாம் ராசியினருடன், மீன ராசியினரின் அதிர்ஷ்டமும் 2026 ஜனவரியில் யுதி திருஷ்டி யோகத்தால் பிரகாசிக்க இருக்கிறது. திருமணமானவர்கள் பேச்சில் சமநிலையை கடைப்பிடித்து உறவுகளை வலுப்படுத்துவார்கள். வீட்டில் அமைதியான சூழல் நிலவும். இந்த நேரத்தில் புதிய சொத்து அல்லது வாகனம் வாங்கவும் முடிவு செய்யலாம். நீண்ட கால போராட்டங்கள் முடிவுக்கு வரத் தொடங்கும். திருமண விஷயங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். தந்தை வழி சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். வருமானம் பெருகும். பழைய கடன்கள் வசூலாகும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

