- Home
- Astrology
- Maha Sanyog 2026: 2026-ல் குரு மற்றும் சனி பகவானின் அரிய இணைவு.! இந்த ராசிகளுக்கு தங்க புதையல் கிடைக்கப்போகுது.!
Maha Sanyog 2026: 2026-ல் குரு மற்றும் சனி பகவானின் அரிய இணைவு.! இந்த ராசிகளுக்கு தங்க புதையல் கிடைக்கப்போகுது.!
Saturn Jupiter Conjunction 2026: 2026 ஆம் ஆண்டில் குரு மற்றும் சனி பகவானின் மிகப்பெரிய இணைவு நிகழ இருக்கிறது. இது சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை தர இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மகா சம்யோகம் 2026
வேத ஜோதிடத்தின்படி 2026 ஆம் ஆண்டில் பல சிறிய மற்றும் பெரிய கிரகங்கள் தங்கள் ராசிகளை மாற்ற இருக்கின்றன. அப்போது அவை மற்ற கிரகங்களுடன் இணைந்து சிறப்பான யோகங்களை உருவாக்க இருக்கின்றன. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு சனி மற்றும் குரு பகவானின் மிகப்பெரிய இணைவு நிகழ இருக்கிறது.
2026 ஆம் ஆண்டு குரு பகவான் சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாக இருக்கிறார். அப்போது அவர் மீன ராசியில் இருக்கும் சனி பகவானுடன் இணைந்து மகா சம்யோகத்தை உருவாக்குகிறார். இதன் காரணமாக அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் குருவின் சேர்க்கை நன்மை பயக்கும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நிலுவையில் இருந்த பணிகள் ஒவ்வொன்றாக நிறைவேறத் தொடங்கும். புது வீடு கட்டும் யோகம் கைகூடும். சொத்து தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக வரும். உங்கள் இலக்குகளை எளிதாக அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். வீட்டில் சுப அல்லது மங்களகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும். நீங்கள் உள்நாடு அல்லது வெளிநாடுகளுக்கு பயணம் செல்லும் வாய்ப்புகளும் கைகூடும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் குருவின் சேர்க்கை மிகவும் சாதகமாக இருக்கும். இந்த காலக்கட்டத்தில் உங்கள் வேலை மற்றும் தொழிலில் எதிர்பாராத வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் காணப்படும். நிதி ஆதாயத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படும். உங்கள் ஆளுமைத்திறன் மேம்படும். வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் உங்கள் அடையாளத்தை நிலை நாட்டுவதற்கு ஏற்ற வாய்ப்புகள் உருவாகும். வேலை அல்லது தொழிலில் வெற்றிகளும், நேர்மறையான மாற்றங்களும் காணப்படும். தொழில் செய்து வருபவர்கள் குறிப்பிடத்தக்க நிதி ஆதாயங்களை அனுபவிப்பீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு குரு மற்றும் சனி பகவானின் சேர்க்கை சுப பலன்களை அளிக்கும். இந்த நேரத்தில் உங்கள் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கப்படுவதால் அதிக பணத்தை சம்பாதிப்பீர்கள். புதிய சொத்துக்கள் அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்புகள் உருவாகும். வேலை செய்பவர்களுக்கு சம்பள உயர்வு, போனஸ் அல்லது பதவி உயர்வு பற்றிய நல்ல செய்திகள் கிடைக்கும். தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்து இருந்த அரசு ஒப்பந்தங்கள், புதிய ஆர்டர்கள், கூட்டாளிகள் கிடைக்கலாம். லாபம் கிடைப்பதற்கான சூழல் உருவாகும். நிதி நிலைமை மேம்படும். வங்கி இருப்பு உயரும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

