- Home
- Astrology
- 250 ஆண்டுகளுக்குப் பின் சுக்கிரன் உருவாக்கும் அரிய ராஜயோகம்.! 3 ராசிகளுக்கு பம்பர் பரிசு கிடைக்கப்போகுது.!
250 ஆண்டுகளுக்குப் பின் சுக்கிரன் உருவாக்கும் அரிய ராஜயோகம்.! 3 ராசிகளுக்கு பம்பர் பரிசு கிடைக்கப்போகுது.!
Dwi Dwadash Yog 2025: சுமார் 250 ஆண்டுகளுக்குப் பிறகு டிசம்பர் இறுதியில் சக்திவாய்ந்த ராஜயோகம் உருவாக இருக்கிறது. இதனால் பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

த்வி துவாதச யோகம் 2025
ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. அப்போது அவை மற்ற கிரகங்களுடன் இணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில் சுக்கிர பகவான் மாதம் ஒருமுறை ராசியை மாற்றி சுப யோகங்களை உருவாக்குகிறார். தற்போது தனுசு ராசியில் பயணித்து வரும் சுக்கிர பகவான் ப்ளூட்டோவுடன் சிறப்பு சேர்க்கையை உருவாக்கியுள்ளார்.
டிசம்பர் 26, 2025 அன்று இந்த இரண்டு கிரகங்களும் த்வி துவாதச யோகத்தை உருவாக்குகிறார். சக்தி வாய்ந்த இந்த யோகமானது சுமார் 250 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படுகிறது. சுக்கிரன் ப்ளூட்டோ சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் த்வி துவாதச யோகத்தால் சிறப்பான நன்மைகளை அனுபவிக்க உள்ளனர். அவர்களுக்கு பொன், பொருள் வசதிகள் சேரும். வாழ்க்கையில் நிலவி வந்த கஷ்டங்கள் அனைத்தும் புத்தாண்டு முதல் தீரும். அதிர்ஷ்ட காற்று வீசத் தொடங்கும். குறைவான ஊதியத்தில் வேலை பார்த்து வருபவர்களுக்கு கை நிறைய ஊதியத்துடன் புதிய வேலை கிடைக்கும் வாடகை வீட்டில் வசித்து வருபவர்களுக்கு புதிய வீடு வாங்கும் யோகம் உருவாகும் சமூகத்தில் உங்களின் மதிப்பு கௌரவம் அதிகரிக்கும் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெரும் திருமண வாழ்க்கை இனிமையானதாக அமையும் வாழ்க்கை துணையுடனான உறவு வலுப்பெறும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் த்வி துவாதச யோகத்தால் சிறப்பான நன்மைகளைப் பெறுவார்கள். நிதி நிலைமையில் எதிர்பாராத வகையில் முன்னேற்றம் உருவாகும். புதிய வருமானத்திற்கான கதவுகள் திறக்கப்படும். நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறத் தொடங்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து லாபம் பெருகும். தொழில் ரீதியாக நன்மைகளை அனுபவிப்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் அல்லது ஊதிய உயர்வு வழங்கப்படலாம். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தினரின் ஆசைகள் மற்றும் தேவைகளை நிறைவேற்றி மகிழ்ச்சியடைவீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு டிசம்பர் இறுதி முதல் நல்ல காலம் தொடங்க இருக்கிறது. மீன ராசியினருக்கு வசதிகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். பொன், பொருள், வசதிகள் இன்பங்கள் அதிகரிக்கும். எடுக்கும் அனைத்து விஷயங்களிலும் நன்மைகளைப் பெறுவீர்கள். அனைத்து துறைகளிலும் வெற்றி பெறும் வாய்ப்பு உருவாகும். வெளிநாட்டில் படிக்க அல்லது வேலை பார்க்க வேண்டும் என்ற கனவு நனவாகும். மாணவர்கள் கல்வியில் வெற்றியைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி, அன்பும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். திருமண பேச்சுக்கள் தொடர்பான சுப செய்திகள் புத்தாண்டு முதல் கிடைக்கக்கூடும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

