- Home
- Astrology
- மீன ராசியில் சுக்ராதித்ய யோகம்.! மார்ச் 15 முதல் குபேர யோகத்தைப் பெற்று கோடீஸ்வரராகப் போகும் 4 ராசிக்காரர்கள்.!
மீன ராசியில் சுக்ராதித்ய யோகம்.! மார்ச் 15 முதல் குபேர யோகத்தைப் பெற்று கோடீஸ்வரராகப் போகும் 4 ராசிக்காரர்கள்.!
Shukraditya Rajayoga March 2026 : மார்ச் 15 ஆம் தேதிக்குப் பின்னர் சூரியனும் சுக்கிரனும் மீன ராசிக்கு பெயர்வதால் சக்திவாய்ந்த சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகிறது. இந்த ராஜயோகம் மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும். அது குறித்து இங்கு காணலாம்.

சுக்ராதித்ய ராஜயோகம் 2026
ஜோதிட சாஸ்திரப்படி, கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் சேர்க்கை அவ்வப்போது முக்கிய ராஜயோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில், வரும் மார்ச் 15, 2026 அன்று சூரியன் மீன ராசிக்குள் நுழைகிறார். அங்கு ஏற்கனவே சுக்கிரன் அமர்ந்திருப்பதால், சூரியனும் சுக்கிரனும் இணைந்து 'சுக்ராதித்ய ராஜயோகத்தை' உருவாக்குகின்றனர்.
பொதுவாக சூரியன் அதிகாரத்தையும், சுக்கிரன் செல்வம் மற்றும் ஆடம்பரத்தையும் குறிப்பவர்கள். இவர்களின் சேர்க்கை சில ராசிகளுக்கு அமோகமான பலன்களைத் தரப்போகிறது. இந்த யோகம் மீன ராசியில் நிகழ்வதால், கீழ்க்கண்ட ராசிக்காரர்களுக்குப் பொற்காலமாக அமைய வாய்ப்புள்ளது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு இந்த யோகம் 11வது வீடான லாப ஸ்தானத்தில் அமைகிறது. நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் கைக்கு வரும். வருமானம் பன்மடங்கு பெருகும். புதிய தொழில் முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். அரசு வழியில் ஆதாயம் உண்டாகும்.
மிதுனம்
மிதுன ராசிக்கு பத்தாம் வீடான கர்ம ஸ்தானத்தில் இந்த யோகம் உருவாகிறது. வேலையில் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் தேடி வரும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்கு ஏழாம் வீட்டில் இந்த யோகம் அமைவதால் திருமண மற்றும் கூட்டுத் தொழில் உறவுகள் மேம்படும். கணவன் மனைவி இடையே இருந்த கசப்புகள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். கூட்டாண்மை தொழிலில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும்.
மீனம்
மீன ராசியிலேயே இந்த யோகம் உருவாவதால், இந்த ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் பேச்சிற்கு மற்றவர்களிடம் மதிப்பு கூடும். ஆளுமைத் திறன் மேம்படும். தடைப்பட்ட சுப காரியங்கள் கைகூடும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

