- Home
- Astrology
- Shukra Peyarchi 2026: திசையை மாற்றும் சுக்கிர பகவான்.! 3 ராசிகள் வறுமை நீங்கி, ஆடம்பர வாழ்க்கை வாழப்போறீங்க.!
Shukra Peyarchi 2026: திசையை மாற்றும் சுக்கிர பகவான்.! 3 ராசிகள் வறுமை நீங்கி, ஆடம்பர வாழ்க்கை வாழப்போறீங்க.!
Shukra Peyarchi 2026 Palangal: பிப்ரவரி 6, 2026 அன்று சுக்கிரன் கும்ப ராசிக்குள் நுழைகிறார். சுக்கிரனின் கும்ப ராசி சஞ்சாரத்தால் மூன்று ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சுக்கிர பெயர்ச்சி 2026
வேத ஜோதிடத்தின்படி, ஒரு கிரகம் ராசி மாறும்போது அதன் தாக்கம் அனைவர் வாழ்விலும் எதிரொலிக்கும். அந்த வகையில் செல்வம், வசதி, அழகு, உறவுகளின் காரகரான சுக்கிர பகவான், பிப்ரவரி 6 ஆம் தேதி, கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் சில ராசிகளுக்கு நல்ல வாய்ப்புகள், நிதி வலிமை, உறவுகளில் முன்னேற்றம் ஏற்படும். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இது முன்னேற்றத்திற்கான நேரமாகும். சுக்கிரனின் தாக்கத்தால் வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி வரும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு சுக்கிர பெயர்ச்சி வசதி, செல்வம் அதிகரிக்கும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் திட்டங்கள் நிறைவேறும். குடும்ப உறவுகள் வலுப்பெறும். தொழில் ரீதியாக எடுக்கும் தைரியமான முடிவுகள் எதிர்காலத்தில் நன்மை தரும். தாயின் ஆதரவுடன் செல்வம் பெருகும்.
கும்பம்
கும்ப ராசிக்கு இந்த சுக்கிர பெயர்ச்சி சாதகமாக இருக்கும். உங்கள் ஆளுமையில் ஈர்ப்பு மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திருமண உறவுகள் சிறப்பாக இருக்கும். கூட்டாண்மை தொழில் லாபம் தரும். துணையின் முன்னேற்றத்தால் மகிழ்ச்சி அடைவீர்கள். தொழில், வாழ்வில் ஸ்திரத்தன்மை ஏற்படும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

