- Home
- Astrology
- Astrology: 500 வருடங்களுக்குப் பின் குரு-சனி நடத்தும் அற்புதம்.! 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை அடியோடு மாறப்போகுது.!
Astrology: 500 வருடங்களுக்குப் பின் குரு-சனி நடத்தும் அற்புதம்.! 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை அடியோடு மாறப்போகுது.!
shani vakra nivarthi and guru vakri: நவம்பர் 2025-ல் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைவதும், குரு பகவான் வக்ரம் பெறுவதும் இரண்டு முக்கிய கிரக நிகழ்வுகளாக கருதப்படுகின்றன. இந்த இவை அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் முக்கியமான மாற்றங்களை கொண்டு வரவுள்ளன.

சனி வக்ர நிவர்த்தி & குரு வக்ரம் பெறுதல்
சனி பகவான் கடின உழைப்பு, நீதி, கட்டுப்பாடு, கர்ம வினைகள் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். இவர் இத்தனை நாட்களாக வக்ர நிலை அதாவது பின்னோக்கிய நிலையில் பயணித்து வந்தார். அப்போது ஏற்பட்டிருந்த தடைகள், தாமதங்கள், உழைப்புக்கேற்ற பலன் கிடைக்காமல் இருத்தல், மனச்சோர்வு ஆகிய நிலைகள் நவம்பர் 28-க்குப் பிறகு மாற இருக்கிறது.
அதேபோல் ஞானம், செல்வம், அதிர்ஷ்டம், குழந்தைகள் ஆகியவற்றின் காரகராக விளங்கும் குரு பகவான் கடக ராசியில் நவம்பர் 11 ஆம் தேதி உச்சம் பெறுவது சுபமான நிலையாகும். இந்த இரண்டு கிரக நிலைகளும் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வர உள்ளன.
மிதுனம்
சனி: மிதுன ராசியின் பத்தாம் வீட்டில் சனி நிவர்த்தி அடைவதால் தொழில் மற்றும் உத்தியோகத்தில் ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும். வேலை செய்து வருபவர்களுக்கு பதவி உயர்வு, புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம்.
குரு: குரு பகவானின் வக்ர நிலை மிதுன ராசியின் இரண்டாம் இடத்தில் நடைபெறுகிறது. இதன் காரணமாக குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கலாம். நிதி விஷயங்களில் ஆழமான பரிசீலனை செய்வதற்கான காலமாகும். பழைய முதலீடுகள் குறித்து சிந்தித்து எதிர்காலத்திற்கான திடமான நிதி திட்டத்தை வகுப்பீர்கள்.
துலாம்
சனி: துலாம் ராசியின் ஆறாம் இடத்தில் சனி வக்ர நிவர்த்தி அடைய இருக்கிறார். இதன் காரணமாக துலாம் ராசிக்காரர்களின் பணப்பிரச்சினைகள் தீரும். எதிரிகள் பலவீனம் அடைவார்கள். நீண்ட நாட்களாக வாட்டி வதைத்து வந்த நோய் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். வழக்குகளில் சாதகமான திருப்பம் ஏற்படும்.
குரு: பத்தாம் இடத்தில் குரு வக்ரம் பெறுவது பணியிடத்தில் உங்கள் மதிப்பு மற்றும் நிலையை மறுபரிசீலனை செய்ய உதவும். இலக்குகளை அடைவதற்கான சரியான பாதையை தீர்மானிப்பதற்கான சாதகமான காலமாகும்.
மகரம்
சனி: மூன்றாம் இடத்தில் சனி நிவர்த்தி அடைவது மகர ராசிக்காரர்களுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும். தைரியம் மற்றும் துணிச்சல் அதிகரிக்கும். சகோதர உறவுகள் மேம்படும். குறுகிய பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். புதிய முயற்சிகளை தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் மேற்கொள்வீர்கள்.
குரு: ஏழாம் இடத்தில் குரு வக்ரம் பெறுவதன் மூலமாக திருமண வாழ்வில் மறுசீரமைப்பு தேவைப்படலாம். அதேபோல் கூட்டாக தொழில் செய்து வருபவர்கள் சில மாற்றங்களை மேற்கொள்ள நேரிடும். புதிய தொடக்கங்களை தொடங்குவதற்கு முன்னர் நன்கு சிந்திப்பது நல்லது.
மீனம்
சனி: மீன ராசியில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைவதன் காரணமாக உங்கள் சோதனையான காலகட்டங்கள் முடிவுக்கு வரவுள்ளது. சோர்வுகள் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
குரு: குரு பகவானின் வக்ர பெயர்ச்சியானது பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு தொடர்பான சுப செய்திகளை கொண்டுவரும். பணியிடத்தில் இருந்த மன அழுத்தங்கள் நீங்கி, நிம்மதி ஏற்படும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)