- Home
- Astrology
- Astrology: நவம்பரில் நடக்கும் 5 கிரக பெயர்ச்சிகள்.! 4 ராசிக்காரர்களுக்கு அடிக்கும் டபுள் ஜாக்பாட்.!
Astrology: நவம்பரில் நடக்கும் 5 கிரக பெயர்ச்சிகள்.! 4 ராசிக்காரர்களுக்கு அடிக்கும் டபுள் ஜாக்பாட்.!
November 2025 rasi palangal: நவம்பர் 2025ல் நடக்க இருக்கும் முக்கிய கிரக பெயர்ச்சிகள் குறித்தும், அதனால் பலன் பெறும் ராசிகள் குறித்தும் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

நவம்பரில் நடக்கும் கிரக பெயர்ச்சிகள்:
சுக்கிரன்: சுக்கிர பகவான் நவம்பர் 2 ஆம் தேதி கன்னி ராசியிலிருந்து பெயர்ந்து, தனது சொந்த வீடான துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது சுபமான பெயர்ச்சியாக கருதப்படுகிறது.
புதன்: நவம்பர் 10 ஆம் தேதி புதன் பகவான் விருச்சிக ராசியில் பின்னோக்கிய நிலையில் அதாவது வக்ர நிலையில் பயணிக்க தொடங்குகிறார்.
குரு: குரு பகவான் நவம்பர் 11 ஆம் தேதி கடக ராசியில் வக்ர நிலையை அடைகிறார். பொதுவாக குரு பகவானின் வக்ரப் பெயர்ச்சி என்பது சுபமான பலன்களை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் கடக ராசி குரு பகவான் உச்சம் பெறும் ராசி என்பதால் இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சூரியன்: நவம்பர் 16 ஆம் தேதி சூரிய பகவான் துலாம் ராசியில் இருந்து வெளியேறி விருச்சிக ராசிக்குள் நுழைகிறார்.
சனி: இதுவரை பின்னோக்கிய நிலையில் பயணித்து வந்த சனி பகவான் மீன ராசியில் நவம்பர் 28 அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார்.
இந்த கிரக பெயர்ச்சிகள் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் மூன்று ராசிக்காரர்கள் நல்ல பலன்களை அனுபவிக்க உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
1.துலாம்
சுக்கிரன் தனது ஆட்சி வீடான துலாம் ராசியிலேயே ஆட்சி பெற்று அமர்வதால் துலாம் ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவடையும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுடன், புதிய திட்டங்களை தொடங்குவீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். உங்களின் ஆளுமை, செல்வாக்கு உயரும். நிதி நிலைமை மேம்படும். உங்கள் கனவு இல்லத்தை வாங்குவதற்கான பணிகள் வேகமெடுக்கும். நீண்ட காலமாக நீதிமன்ற வழக்குகள் நடந்து வந்தால் அதில் வெற்றியை பெற வாய்ப்பு உள்ளது. நவம்பரில் எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
2. விருச்சிகம்
செவ்வாய் பகவான் உங்களின் ராசியில் ஆட்சி பெற்று அமர்வது, சூரியன் உங்கள் ராசிக்குள் வருவது, குருவின் அமைப்பு மற்றும் சுக்கிரனால் இந்த மாதம் உங்களுக்கு யோகமான மாதமாக அமையும். புதிய வருமானத்திற்கான வழிகள் கிடைக்கும். செல்வம் பெருகுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பொருளாதார ரீதியாக நல்ல வளர்ச்சியையும், வருமானத்தையும் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணை சார்ந்த விஷயங்களில் அதிர்ஷ்டம் உண்டாகும். தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். இதன் மூலம் பல பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். உங்களின் தலைமைத்துவம் மற்றும் செல்வாக்கு அதிகரிக்கும். நினைத்த காரியங்களை சாதிக்க முடியும்.
3.மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் சாதகமான மாதமாக இருக்கும். நவம்பரில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் தொழில் ரீதியான முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். தொழிலில் குறிப்பிடத் தகுந்த முன்னேற்றத்தைக் காண்பீர்கள். சிறியாதாக தொழில் நடத்தி வருபவர்கள் தொழிலை விரிவாக்கம் செய்வீர்கள். புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கும் இந்த காலகட்டம் சாதகமாக இருக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். வேலை பார்த்து வருபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கலாம். சமூகத்தில் உங்களின் நற்பெயர் அதிகரிக்கும். தைரியத்துடனும், துணிச்சலுடனும் முடிவுகளை எடுத்து வெற்றியைப் பெறுவீர்கள். சகோதரர்களுடனான உறவு வலுவடையும். சொத்துப் பிரச்சனைகள் தீரும்.
4.மேஷம்
நவம்பர் மாத கிரக பெயர்ச்சிகள் காரணமாக மேஷ ராசிக்காரர்கள் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். உங்களின் திருமண வாழ்க்கையில் இருந்து வந்த குழப்பங்கள் சண்டை சச்சரவுகள் அனைத்தும் விலகும். எதிர்பாராத பணவரவால் பணத்தை சேமிப்பீர்கள். திருமணமாகாமல் இருந்து வருபவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் கிடைக்கும். இந்த மாதம் வாழ்வில் எதிர்பாராத உயரங்களை அடைவீர்கள். தொழில் செய்து வருபவர்கள் புதிய உச்சங்களை தொடுவீர்கள். பல வழிகளில் சிக்கி இருந்த பணம் கைக்கு வந்து சேரலாம். உங்களின் நிதி நிலைமை உயர்வதோடு, சமூகத்தில் உங்கள் அந்தஸ்தும் அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)