- Home
- Astrology
- Astrology: குரு பகவானின் வீட்டில் குடியேறும் சுக்கிரன்.! மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்.!
Astrology: குரு பகவானின் வீட்டில் குடியேறும் சுக்கிரன்.! மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்.!
Shukra Gochar 2025: டிசம்பர் மாதத்தில் சுக்கிர பகவான் குரு பகவான் ஆளும் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார். ஜோதிடத்தின்படி சுக்கிரனின் இந்த பெயர்ச்சி சில ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
14

Image Credit : Asianet News
தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகும் சுக்கிரன்
ஜோதிடத்தின் படி சுக்கிரன் சுப கிரகமாக அறியப்படுகிறார். இவர் ஆடம்பரம், செல்வ வளம், இன்பங்கள், சுகபோக வாழ்க்கை, காதல் மற்றும் குடும்ப உறவுகளின் காரகராக விளங்குகிறார். இவரின் பெயர்ச்சி என்பது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நிலையில் டிசம்பர் 2025 அவர் குரு பகவானின் சொந்த ராசியான தனுசு ராசிக்கு பெயர்ச்சியாக இருக்கிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்களின் வாழ்வில் அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. அந்த ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
24
Image Credit : Asianet News
மேஷம்
- சுக்கிரனின் தனுசு ராசி பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். சுக்கிர பகவான் உங்கள் ராசியில் இருந்து ஒன்பதாவது இடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார்.
- இந்த இடம் அதிர்ஷ்டம், மதம் மற்றும் நீண்ட தூர பயணங்களைக் குறிக்கும் இடமாகும்.
- சுக்கிரன் தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகும் காலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த அல்லது தடைபட்டிருந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
- தொழில் அல்லது வியாபாரம் சம்பந்தமான பயணம் செல்ல நேரிடலாம். தர்ம காரியங்கள் மற்றும் ஆன்மீகப் பணிகளுக்காக செலவு செய்வீர்கள்.
- புதிய திட்டங்களில் முதலீடு செய்வதற்கு சிறந்த நேரமாகவும், வியாபாரத்தில் விரிவாக்கமும், லாபமும் கூடும். சமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதை அந்தஸ்து உயரும்.
34
Image Credit : Asianet News
தனுசு
- சுக்கிரன் உங்கள் ராசியிலேயே சஞ்சாரம் செய்வது மிகவும் சாதகமாக இருக்கும். சுக்கிர பகவான் உங்கள் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். இது ஆளுமை, தோற்றம், ஒட்டுமொத்த வாழ்க்கை ஆகியவற்றை குறிக்கும் இடமாகும்.
- இதன் காரணமாக உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கும்.
- வேலை செய்யும் பாணி மற்றும் ஆளுமையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
- திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண வாய்ப்புகள் கைகூடும். வருமானம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும்.
- குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகளைப் பெறுவீர்கள்.
44
Image Credit : Asianet News
மீனம்
- சுக்கிரனின் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரம் ரீதியாக அபாரமான வெற்றியை தேடித்தரும். சுக்கிர பகவான் உங்கள் ராசியில் இருந்து பத்தாம் வீடான கர்ம ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார்.
- இது தொழில், வேலை மற்றும் கௌரவத்தை குறிக்கும் இடமாகும். உத்தியோகம் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும், முன்னேற்றத்தையும் காண்பீர்கள். லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் திறக்கப்படும்.
- பெரிய லாபகரமான ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரும். பழைய முதலீடுகளில் இருந்தும் நல்ல வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
- வேலை பார்ப்பவர்களுக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இது உங்கள் தொழில் வாழ்க்கைக்கு ஒரு பொற்காலமாக அமையும்.
Latest Videos