- Home
- Astrology
- Astrology: தனுசு ராசியில் இணையும் நண்பர்கள்.! 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.! டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுது.!
Astrology: தனுசு ராசியில் இணையும் நண்பர்கள்.! 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.! டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுது.!
Shukra Mangal Conjunction 2025: ஜோதிடத்தில் சுப கிரகங்களாக அறியப்படும் செவ்வாய் மற்றும் சுக்கிரன் இருவரும் விரைவில் தனுசு ராசியில் இணையுள்ளனர். இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் சிறப்பான நன்மைகளை அனுபவிக்க உள்ளனர்.

செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை
ஜோதிடத்தின்படி இந்த வருடத்தின் இறுதியில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெற உள்ளன. டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் செவ்வாய் பகவான் தனுசு ராசிக்கு பெயர்ச்சியாக இருக்கிறார். டிசம்பர் மாத இறுதியில் சுக்கிரனும் தனுசு ராசிக்குள் நுழைகிறார். இவர்கள் இருவரும் இணைந்து தனுசு ராசியில் பயணிக்க உள்ளனர். இதன் காரணமாக நான்கு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி, செல்வ செழிப்பு ஆகியவை கிடைக்க இருக்கிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தனுசு
- தனுசு ராசியில் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் செவ்வாய் சுக்கிரன் இணைவு நடைபெற இருக்கிறது.
- செவ்வாய் பகவான் தனுசு ராசிக்காரர்களுக்கு தைரியம் மற்றும் வீரத்தை அளிப்பார். இதன் காரணமாக சமூகத்தில் மரியாதை, கௌரவம் அதிகரிக்கும்.
- சுக்கிர பகவான் தனுசு ராசிக்காரர்களுக்கு செல்வம், ஆடம்பரம், பொன், பொருள், வசதிகளை அளிப்பார். மற்றவர்களுக்கு கடன் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். சிக்கிய பணங்கள் எளிதில் மீட்கப்படும்.
- புதிய வாகனம் வாங்குவீர்கள். சொத்துகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
- வணிகர்கள் புதிய ஒப்பந்தங்கள் மூலம் லாபத்தை அடைவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்தும் வாய்ப்புகளும் கிடைக்கும்.
கும்பம்
- கும்ப ராசியின் 11-வது வீட்டில் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை நடைபெற இருக்கிறது. பதினோராவது வீடு என்பது லாப ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது.
- எனவே கும்ப ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் அதிர்ஷ்டம் தேடிவரும். இந்த காலக்கட்டத்தில் வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளிலும் கும்ப ராசிக்காரர்கள் வெற்றியைக் குவிப்பீர்கள்.
- வாழ்க்கையில் இதுவரை சந்தித்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். வேலையில் இருந்து வந்த தடைகள் நீங்கி உயர்ந்த பதவிகளை அடைவீர்கள்.
- வணிகர்கள் இந்த காலக்கட்டத்தில் அதிக லாபத்தை ஈட்டுவீர்கள்.
- புதிய ஒப்பந்தங்களை பெறுவது, தொழிலை விரிவாக்கம் செய்வது போன்ற செயல்களால் உங்கள் நிதிநிலை கணிசமாக மேம்படும்.
துலாம்
- துலாம் ராசியின் மூன்றாம் வீட்டில் செவ்வாய் சுக்கிரன் இணைவு நடைபெற இருக்கிறது. மூன்றாம் வீடு என்பது தைரிய ஸ்தானம் என்ற அழைக்கப்படுகிறது.
- இந்த காலகட்டத்தில் உங்கள் முயற்சிக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.
- உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதன் காரணமாக துணிச்சலாக செயல்பட்டு வெற்றியை காண்பீர்கள்.
- குறுகிய பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கலாம். தகவல் தொடர்பு துறையில் இருப்பவர்களுக்கு இந்த காலகட்டம் சாதகமாக இருக்கும்.
- காதல் உறவுகளில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாய்ப்புகள் கைகூடும்.
- குழந்தை பாக்கியம் குறித்த நல்ல செய்திகள் வரலாம். கலை மற்றும் படைப்புத்திறன்கள் வெளிப்படும்.
மேஷம்
- மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் என்பதால் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த காலக்கட்டம் மிகவும் சாதகமாக இருக்கும்.
- மேலும் இந்த இணைவு மேஷ ராசியின் ஒன்பதாவது வீதான பாக்கிய ஸ்தானத்தில் நிகழ்வதால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். நீங்கள் இதுவரை சந்தித்து வந்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும்.
- பொருளாதார நிலை மேம்படும். நிதி ஸ்திரத்தன்மை ஏற்படும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றியைக் காண்பீர்கள்.
- வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களின் முயற்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள்.
- மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உயர் கல்வி படிக்க நினைப்பவர்களின் ஆசை நிறைவேறும்.
- போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் வெற்றியைப் பெறுவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)