- Home
- Astrology
- Astrology: சனி பகவானை சந்திக்கும் சுக்கிரன்.! இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்படப் போறீங்க.!
Astrology: சனி பகவானை சந்திக்கும் சுக்கிரன்.! இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்படப் போறீங்க.!
Shadashtak yog: சனி மற்றும் சுக்கிர பகவான் இருவரும் 150° கோணத்தில் சந்திப்பதால் உருவாகும் ஷடாஷ்டக யோகம் மூன்று ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களை தரும் என்று கூறப்படுகிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சனி-சுக்கிரன் சந்திப்பு
வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெயர்ச்சியாகி சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகின்றன. இதன் விளைவுகள் அந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிரொலிகின்றன. அந்த வகையில் செப்டம்பர் 18, 2025 அன்று மாலை 5:01 மணிக்கு சிம்மத்தில் சுக்கிரனும், மீனத்தில் சனிபகவானும் 150 டிகிரி கோணத்தில் சந்திக்கின்றனர். இதன் காரணமாக ஷடாஷ்டக யோகம் உருவாகிறது. இந்த யோகம் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு நிதி இழப்பு, ஆரோக்கியத்தில் குறைபாடு, மன அழுத்தம் போன்றவை ஏற்படலாம். அந்த ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
ஷடாஷ்டக யோகம் உருவாவது மேஷ ராசிக்காரர்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தலாம். இந்த சமயத்தில் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். இது உங்கள் நிதி நிலைமையை சீர்குலைக்கும். நீதிமன்ற வழக்குகள் மற்றும் உடல் நலக்கோளாறுகளுக்காக அதிக பணத்தை செலவிட நேரிடலாம். எதிரிகள் உங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தக்கூடும். எனவே அடுத்த சில தினங்களுக்கு நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். முதலீடுகள் செய்வதற்கு முன்னர் கவனமாக சிந்தித்து செயல்பட வேண்டும். இந்த யோகத்தின் தாக்கங்களை குறைப்பதற்கு சனி பகவானை வழிபடுவது நன்மை தரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு ஷடாஷ்டக யோகம் உருவாவது தீங்கு விளைவிக்கலாம். தனுசு ராசியில் சுக்கிரன் ஒன்பதாவது வீட்டிலும், சனி நான்காவது வீட்டிலும் சஞ்சரிக்க உள்ளனர். இந்த யோகம் குடும்பம் மற்றும் வீடு தொடர்பான விஷயங்களில் பதற்றத்தை அதிகரிக்கலாம். குடும்ப உறுப்பினர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். வார்த்தைகளை பேசும் பொழுது கவனத்துடன் பேச வேண்டும். சிறு தவறான புரிதலின்மை கூட பெரிய பிரச்சனையை ஏற்படுத்தலாம். தாயின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். இந்த நேரத்தில் உடல் நலம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். தொழில்களில் மந்தமான சூழல் ஏற்படலாம். முக்கியமான வேலைகளை முடிக்க முடியாமல் போகலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஷடாஷ்டக யோகம் அசுப பலன்களைத் தரவுள்ளது. சிம்ம ராசியின் சுக்கிரன் முதல் வீட்டிலும், சனி எட்டாவது வீட்டிலும் சஞ்சரிப்பார். இது ஆளுமை மற்றும் தன்னம்பிக்கையை பாதிக்கும். உங்கள் ஆரோக்கியத்திலும் பிரச்சனைகள் ஏற்படலாம். உடல்நிலை சற்று பின்னடைவை சந்திக்கும். உங்கள் துணைவருடனான உறவு மோசமடையக்கூடும். இந்த நேரத்தில் தேவையற்ற பிரச்சனைகள் காரணமாக மன அழுத்தம் ஏற்படலாம். கூட்டாக தொழில் செய்து வருபவர்களுக்கு தொழிலில் தொய்வு ஏற்படலாம். நிதி இழப்புகளும் ஏற்படலாம். மகாலட்சுமி தாயாருக்கு வெள்ளைப் பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட எதிர்மறை விளைவுகள் குறையும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)