MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Shani Vakra Peyarchi: ஜூலை முதல் டிசம்பர் வரை சனியின் அதிரடி ஆட்டம்! கடன்கள் தீர்ந்து கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 3 ராசிகள் இதுதான்!

Shani Vakra Peyarchi: ஜூலை முதல் டிசம்பர் வரை சனியின் அதிரடி ஆட்டம்! கடன்கள் தீர்ந்து கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 3 ராசிகள் இதுதான்!

Astrology: பலரும் நினைப்பது போல சனி பகவான் ஒரு கெடுதல் செய்யும் கிரகம் அல்ல. ஒருவருடைய முற்பிறவி மற்றும் இப்பிறவி கர்ம வினைகளுக்கு ஏற்ப மட்டுமே அவர் பலன்களை வழங்குகிறார்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 17 2026, 07:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சனி பகவான்
Image Credit : Gemini AI

சனி பகவான்

சனி பகவான் நவகிரகங்களில் மிக முக்கியமான, அதே நேரத்தில் மக்களால் அதிகம் அஞ்சப்படும் மற்றும் மதிக்கப்படும் ஒரு சக்திவாய்ந்த கிரகம் ஆவார். ஜோதிட சாஸ்திரத்தில் அவர் 'கர்ம காரகன்' மற்றும் 'ஆயுள் காரகன்' என்று அழைக்கப்படுகிறார். பலரும் நினைப்பது போல சனி பகவான் ஒரு கெடுதல் செய்யும் கிரகம் அல்ல. ஒருவருடைய முற்பிறவி மற்றும் இப்பிறவி கர்ம வினைகளுக்கு ஏற்ப மட்டுமே அவர் பலன்களை வழங்குகிறார். நற்செயல்கள் செய்பவர்களுக்கு அசுர வளர்ச்சியையும், தீய செயல்களில் ஈடுபடுபவர்களுக்குத் தகுந்த தண்டனையையும் வழங்கி அவர்களை நல்வழிப்படுத்துகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
 இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்
Image Credit : Getty

இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

இந்நிலையில் சனி பகவான், பொதுவாக ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயர இரண்டரை ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார். இந்த சஞ்சாரத்தின் போது அவர் சில காலங்கள் வக்ர நிலைக்கும் செல்வதுண்டு. அந்த வகையில், வரும் ஜூலை 27ம் தேதி முதல் டிசம்பர் மாதம் வரை சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்க உள்ளார். சனியின் இந்த வக்ர கால கட்டம் ஒட்டுமொத்த ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், கீழே உள்ள 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் மற்றும், நேர்மறை ஆற்றலையும் வாரி வழங்கப்போகிறது.

Astrology: கிரகங்களின் இளவரசன் புதன் வக்ர பெயர்ச்சி 2026! இந்த 4 ராசிகளுக்கு தலைவிதி மாறப்போகுது! பணமழை கொட்டப்போகுது!

Related Articles

Related image1
இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்? 17.06.2026 புதன்கிழமை ராசி பலன்கள்
Related image2
ஆண்களே கவனிங்க! இந்த 5 ராசி பெண்கள் மனைவியாக வந்தால் நீங்கதான் கிங்!
35
ரிஷபம்
Image Credit : Pixabay

ரிஷபம்

ரிஷப ராசியின் 11-வது வீடான லாப ஸ்தானத்தில் சனியின் வக்ர பெயர்ச்சி நிகழ்கிறது. உங்கள் வாழ்நாளின் நீண்ட கால கனவு அல்லது லட்சியம் ஒன்று இந்த காலகட்டத்தில் நிறைவேறும். நினைத்த காரியங்களை தடையின்றி வெற்றிகரமாக முடிப்பீர்கள். இந்த காலகட்டத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்குத் தொட்டதெல்லாம் பொன்னாகும். நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல விஷயங்கள் அனைத்தும் சுமுகமாக கைகூடும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு தகுந்த அங்கீகாரமும், மதிப்பும், மரியாதையும் தேடி வரும். எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் கணிசமான சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

45
மிதுனம்
Image Credit : Pixabay

மிதுனம்

மிதுன ராசியின் 10-வது வீடான கர்ம ஸ்தானத்தில் சனி பகவான் வக்ரமாக அமைகிறார். இதுவரை உங்கள் காரியங்களில் முட்டுக்கட்டையாக இருந்த அனைத்து தடைகளும் விலகி, வேலைகள் மின்னல் வேகத்தில் நடக்கும். முன்னேற்றத்திற்கான புதிய கதவுகள் திறக்கும். புதிய வீடு, மனை அல்லது வாகனம் வாங்கும் யோகம் கைகூடி வரும். சனி பகவானின் பேராசியால் உங்கள் வாழ்க்கையில் வசதிகளும், ஆடம்பரங்களும் தேடி வரும். மாணவர்கள் கல்வியில் பெரிய சாதனைகளைப் படைப்பார்கள். கழுத்தை நெரித்துக் கொண்டிருந்த பழைய கடன்களை அடைத்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.

Kalatmak Yog 2026: ஜூன் 17 முதல்.. இந்த 4 ராசிகளுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் ஜாக்பாட் அடிக்கப்போகிறது.!

55
விருச்சிகம்
Image Credit : Pixabay

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 5-வது வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனியின் வக்ர இயக்கம் அமைகிறது. உங்களை நீண்ட நாட்களாக வாட்டி வதைத்து வந்த மன உளைச்சல்களும், சிறு சிறு ஆரோக்கிய மற்றும் குடும்பப் பிரச்சினைகளும் முற்றிலும் முடிவுக்கு வரும். உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். திருமணப் பேச்சுகளில் இருந்த தடைகள் நீங்கி சுப காரியம் கைகூடும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்கள் தகுதிக்கு ஏற்ற நல்ல வேலை அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுப நிகழ்ச்சிகளும் அமைய வாய்ப்புகள் அதிகம். புதியதாக தொழில் அல்லது வியாபாரம் தொடங்க நினைப்பவர்களுக்கு இது ஒரு பொன்னான காலகட்டமாகும். தொட்ட முதலீட்டில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
ராசி பலன்
சனி பெயர்ச்சி பலன்கள் (தமிழ்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்? 17.06.2026 புதன்கிழமை ராசி பலன்கள்
Recommended image2
Kalatmak Yog 2026: ஜூன் 17 முதல்.. இந்த 4 ராசிகளுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் ஜாக்பாட் அடிக்கப்போகிறது.!
Recommended image3
உங்களுக்கு இந்த கனவு வருதா? அப்படின்னா 'பணமழை' பொழியப்போகுது!
Related Stories
Recommended image1
இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்? 17.06.2026 புதன்கிழமை ராசி பலன்கள்
Recommended image2
ஆண்களே கவனிங்க! இந்த 5 ராசி பெண்கள் மனைவியாக வந்தால் நீங்கதான் கிங்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved