- Home
- Astrology
- Kalatmak Yog 2026: ஜூன் 17 முதல்.. இந்த 4 ராசிகளுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் ஜாக்பாட் அடிக்கப்போகிறது.!
Kalatmak Yog 2026: ஜூன் 17 முதல்.. இந்த 4 ராசிகளுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் ஜாக்பாட் அடிக்கப்போகிறது.!
Astrology: ஜோதிட சாஸ்திரப்படி, சுக்கிரன் மற்றும் புதன் இணைவால் கலாத்மக் யோகம் உருவாகிறது. ஜூன் 17 அன்று கடக ராசியில் இந்த யோகம் உருவாவதால், மேஷம் உள்ளிட்ட 4 ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கப்போகிறது.

கலாத்மக் யோகம்
ஜோதிட சாஸ்திரப்படி, கலை மற்றும் அழகியலின் காரகனான சுக்கிரன் மற்றும் புத்தி கூர்மை, வித்தைகளின் காரகனான புதன் ஆகிய இரு கிரகங்களின் சுப நிலையைப் பொறுத்தே இந்த கலாத்மக் யோகம் தீர்மானிக்கப்படுகிறது. இந்த யோகம் உள்ளவர்கள் கலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் எப்போதும் மன அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் காணப்படுவார்கள். இந்நிலையில் ஜூன் 17 அன்று கடக ராசியில் கலாத்மக் யோகம் உருவாகிறது. இதனால் மேஷம் உள்ளிட்ட 4 ராசிக்காரர்களுக்கு தொழில் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கப்போகிறது.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு கலாத்மக் யோகம் மிகவும் பயனுள்ளதாக அமையப்போகிறது. வேலையில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். ரியல் எஸ்டேட் அல்லது சொகுசுப் பொருட்கள் வியாபாரத்தில் இருந்தால், பெரிய லாபம் பார்க்கலாம். வெளிநாட்டில் வேலை பார்க்கும் கனவு நனவாகும். ஆன்மீகப் பயணம் செல்வார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் சுபமாக இருக்கப்போகிறது. மார்க்கெட்டிங், மீடியா, எழுத்துத் துறையில் இருப்பவர்கள் அதிக லாபம் பெறுவார்கள். தொழில் வாழ்க்கையில் வெற்றிக்கு பல புதிய வழிகள் பிறக்கப்போகிறது. புதிய தொழில் தொடங்கலாம். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
கடகம்
உங்கள் ராசியிலேயே கலாத்மக் யோகம் உருவாவதால், உங்களுக்கு அதிகபட்ச பலன் கிடைக்கும். வேலை மாற்ற நினைப்பவர்களுக்கு விரும்பிய வேலை அமையும். தொழில் வல்லுநர்களுக்கு இது ஒரு நல்ல காலம். பழைய கடன்களிலிருந்து விடுபட வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு வருமானம் கணிசமாக உயரும். பழைய முதலீடுகள் மூலம் பெரிய லாபம் கிடைக்கும். அரசு வேலைகளில் இருப்பவர்களுக்கு இது நல்ல நேரம். வீடு அல்லது வாகனம் வாங்க சிறப்பான வாய்ப்புகள் அமையும்.

