- Home
- Astrology
- திருமணம் ஆனா பிறகு அடிக்கும் ராஜயோகம்.. எந்தெந்த ராசிக்காரர்களுக்கு தெரியுமா? - உங்க ராசி இருக்கா பாருங்க!
திருமணம் ஆனா பிறகு அடிக்கும் ராஜயோகம்.. எந்தெந்த ராசிக்காரர்களுக்கு தெரியுமா? - உங்க ராசி இருக்கா பாருங்க!
வசதி வாய்ப்புகளோடு வாழ வேண்டும் என்பதுதான் மனிதர்களாக பிறந்த அனைவருடைய எண்ணமாக இருக்கும். சிலருக்கு அந்த வசதி வாய்ப்பு, திருமணம் ஆன பிறகு தான் கிடைக்கின்றது, அது எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அப்படி அமையும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

பெண்ணொருத்தி வந்தால் தான் நீ ஒழுங்கான மனிதனாக மாறுவாய் என்று பலர் கூற கேட்டிருப்போம், கல்யாணம் மட்டும் முடிந்து விட்டால் போதும் உனக்கு ராஜயோகம் தான் என்றும் பலர் கூற கேட்டிருப்போம். அந்த வகையில் ஒரு சில ராசிக்காரர்களுக்கு அவர்களுக்கு திருமணம் முடிந்த பிறகு ஒரு நல்ல வசதியான வாழ்க்கை அமைந்துண்டு.
அந்த வகையில் மீன ராசியில் பிறந்தவர்களுக்கு அந்த யோகம் பெரிய அளவில் உண்டு. இவர்கள் இயல்பாகவே கற்பனை திறன் அதிகம் உள்ளவர்களாக இருப்பார்கள், அதேபோல பிறருக்கு உதவும் தன்மையும் அதிகம் கொண்ட இவர்களுக்கு வரும் வாழ்க்கை துணையின் மூலம், இவர்களது வாழ்க்கையில் மிகப்பெரிய செல்வ செழிப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
பாசிடிவ் எனர்ஜி, பணப்பிரச்சனை தீருவதற்கு சமையலறையில் இதை செய்தாலே போதும்!!
மகர ராசியில் பிறந்தவர்கள் புத்தி கூர்மை உடையவர்கள், எந்த செயலையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இல்லாமல், நின்று நிதானித்து செயல்படும் மகர ராசிக்காரர்களுக்கும் அவர்களுடைய வாழ்க்கை துணையின் மூலம் வசதி வாய்ப்புகள் அதிகரிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது
கன்னி ராசிக்காரர்கள் பொதுவாக இவர்கள் கையில் காசே தாங்காது என்று கூறுவார்கள் ஆனால் திருமணம் என்ற ஒன்று ஆன பிறகு மிகவும் பொறுப்பான மனிதர்களாக இவர்கள் மாறிவிடுகின்றனர். வசதி வாய்ப்புகள் அதிகரிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது
துலாம் ராசியில் பிறந்தவர்கள் வெளி தோற்றத்தில் உள்ளது போலவே அகத்திலும் மிக அழகானவர்கள் என்று தான் கூற வேண்டும். நேர்மையான குணமும் எதிலும் நேர்பட பேசும் பேச்சு கொண்ட இவர்களுக்கும் திருமணமான உடனேயே அதிக அளவிலான செல்வ செழிப்புகள் வந்து சேர்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இவர்களுடைய உயர்வுக்கு இவர்களுடைய சகாக்களும் உறுதுணையாக இருப்பார்கள்.