MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • மேஷ ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி.! 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவுகள் திறக்கும்.! பொற்காலம் தொடங்கும்.! உங்க ராசி இருக்கா?

மேஷ ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி.! 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவுகள் திறக்கும்.! பொற்காலம் தொடங்கும்.! உங்க ராசி இருக்கா?

Shukra Peyarchi 2026 in Mesha Rasi : சுக்கிர பகவான் விரைவில் மேஷ ராசிக்கு பெயர்ச்சியாக இருக்கிறார். அவரின் இந்த மாற்றமானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை தர இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Mar 07 2026, 02:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Shukra Peyarchi 2026 in Mesha Rasi
Image Credit : Asianet News

Shukra Peyarchi 2026 in Mesha Rasi

வேத ஜோதிடத்தில் சுக்கிர பகவான் ஆடம்பரத்தின் காரகராக அறியப்படுகிறார். சுமார் 25 நாட்களுக்கு ஒரு முறை அவர் தனது ராசியை மாற்றுகிறார். அந்த வகையில் மார்ச் 26 ஆம் தேதி காலை 5:13 மணியளவில் அவர் மீன ராசியில் இருந்து வெளியேறி மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த ராசியில் ஏப்ரல் 19 பிற்பகல் 3:51 மணி வரை பயணிக்க இருக்கிறார். செல்வம், பொன், பொருள், வசதிகள் ஆடம்பரத்தின் காரகரான அவரின் இந்த பெயர்ச்சி சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்க இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
மேஷம்
Image Credit : Pinterest

மேஷம்

சுக்கிர பகவான் மேஷ ராசியின் முதல் வீட்டில் குடியேற இருக்கிறார். இதன் காரணமாக மேஷ ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி வரை சாதகமான சூழல் நிலவும். எடுக்கும் ஒவ்வொரு காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். கடினமான பணிகளையும் எளிதாக முடித்து வெற்றியைப் பெறுவீர்கள். நீண்ட காலமாக கிடப்பில் இருந்த பணிகள் முடிவடையும். 

அரசு வேலைக்காக காத்திருப்பவர்கள் இந்த மாத இறுதிக்குள் நல்ல செய்திகள் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு தனியார் துறையில் அல்லது வெளிநாட்டு நிறுவனங்களில் நேர்காணலுக்கான அழைப்பு வரும். வருமானத்திற்கான புதிய கதவுகள் திறக்கும். உபரி வருமானத்தால் வீட்டில் செல்வம், பொன், பொருள் சேர்க்கை நடைபெறும்.

Related Articles

Related image1
இன்று உருவாகும் புதாதித்ய ராஜயோகம்.! தொழிலில் அம்பானியாக மாறப்போகும் 4 ராசிகள்.! உங்க ராசி இருக்கா?
Related image2
மீன ராசியில் சந்திக்கும் 3 கிரகங்கள்.! மார்ச் 15-க்குப் பின் இந்த 4 ராசிகள் வாழ்க்கை அடியோடு மாறும்.!
35
துலாம்
Image Credit : Pinterest

துலாம்

சுக்கிரனின் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை தர இருக்கிறது. வேலை மற்றும் தொழிலில் எதிர்பாராத முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். வருமானம் அதிகரிப்பால் கடன் பிரச்சனைகள் குறையத் தொடங்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு வாய்ப்புகள் உருவாகும். 

தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிறிய அளவில் தொழில் செய்து வருபவர்கள் தொழிலை பெரிதாக விரிவாக்கம் செய்வீர்கள். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். நிதி நிலைமை மேம்படும். பல வழிகளில் இருந்து வருமானம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. முதலீடுகளில் இருந்து எதிர்பாராத லாபம் கிடைக்கும்.

45
தனுசு
Image Credit : stockPhoto

தனுசு

சுக்கிரனின் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமான சூழலை கொண்டுவரும். உறவினர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். குடும்பத்தில் நிலவிய மனக் கசப்புகள் தீரும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் சரி செய்யப்படும். நிதி சார்ந்த விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வருமானம் கணிசமாக உயரும். பழைய கடன்கள் அடைக்கப்படும். 

குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். திருமணம் குறித்த பேச்சு வார்த்தைகள் முன்னேற்றத்தை அடையும். பணியிடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்த மதிப்பெண்களைப் பெறுவார்கள். மேற்படிப்பு அல்லது வேலைக்காக வெளிநாடு செல்வதற்கு அதிக வாய்ப்புகள் உருவாகும்.

55
கும்பம்
Image Credit : Pinterest

கும்பம்

சுக்கிரன் பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்க இருக்கிறது. தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். கடின உழைப்புக்கு ஏற்ற வெற்றிகள் கிடைக்கும். தொழிலில் இருந்த போட்டியாளர்கள் எதிரிகள் விலகுவார்கள். அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக சதி செய்தவர்கள் தாமாக விலகிச் செல்வார்கள். 

நிலுவையில் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். தனிப்பட்ட பிரச்சனைகள் தீரும். மன ரீதியாக இருந்து வந்த அழுத்தங்கள் குறையும். சொத்து விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடக்கும். காதல் உறவில் இருப்பவர்களுக்கு திருமணம் கைகூடும். தனிமையில் இருப்பவர்களுக்கு பொருத்தமான துணையை கண்டறியும் வாய்ப்புகள் உருவாகும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Shani Amavasya 2026: மே 16 சனி அமாவாசை! சந்திரனின் இரட்டைப் பெயர்ச்சியால் பண மழையில் நனையப் போகும் 5 ராசிகள்!
Recommended image2
Vaikasi Matha Rasipalan 2026: வைகாசி மாத ராசிபலன் 2026.! மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்குமான துல்லியமான கணிப்புகள்.!
Recommended image3
Astrology: தனது அறிவால் புதிய உச்சத்தை தொடும் 3 ராசிகள்.! அரசாங்கத்தை வழிநடத்தும் ராஜகுருவாக இருப்பார்களாம்.!
Related Stories
Recommended image1
இன்று உருவாகும் புதாதித்ய ராஜயோகம்.! தொழிலில் அம்பானியாக மாறப்போகும் 4 ராசிகள்.! உங்க ராசி இருக்கா?
Recommended image2
மீன ராசியில் சந்திக்கும் 3 கிரகங்கள்.! மார்ச் 15-க்குப் பின் இந்த 4 ராசிகள் வாழ்க்கை அடியோடு மாறும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved