- Home
- Astrology
- Numerology: இந்த தேதிகளில் பிறந்த ஆண்கள் தலைசிறந்த மருமகனாக இருப்பார்களாம்.! உங்க சொந்த மகன் மாதிரி நடந்துக்குவாங்களாம்.!
Numerology: இந்த தேதிகளில் பிறந்த ஆண்கள் தலைசிறந்த மருமகனாக இருப்பார்களாம்.! உங்க சொந்த மகன் மாதிரி நடந்துக்குவாங்களாம்.!
Name Numerology Calculator: எண் கணிதத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்த ஆண்கள் தலைசிறந்த மருமகனாகவும், குடும்பத்தை கட்டுக்கோப்பாக நடத்தும் பாங்குடனும் திகழ்வார்களாம். அந்த தேதிகள் குறித்து இங்கு காணலாம்.

Name Numerology Calculator
எண் கணிதத்தின் படி, ஒருவருடைய பிறந்த தேதி அவர்களின் குணாதிசயங்கள், பழகும் விதம் மற்றும் குடும்பத்தை வழிநடத்தும் திறன் ஆகியவற்றைத் தீர்மானிக்கிறது. அந்த வகையில், கூட்டுத் தொகை அல்லது பிறந்த தேதியின் அடிப்படையில் எந்தெந்த எண்களில் பிறந்த ஆண்கள் சிறந்த, பொறுப்பான மற்றும் அன்பான மருமகன்களாகத் திகழ்வார்கள் என்பதைப் பற்றி விரிவாகக் காண்போம்.
இதையும் படியுங்கள்: Numerology: உங்கள் பிறந்த தேதியை சொல்லுங்க.! நீங்க ராமாயணத்தில் எந்த கதாப்பாத்திரம்ன்னு சொல்றோம்.!
எண் 2 (தேதிகள்: 2, 11, 20, 29) – அன்பான மற்றும் அனுசரித்துச் செல்லும் மருமகன்
சந்திரனின் ஆதிக்கம் பெற்ற இந்த எண்களில் பிறந்த ஆண்கள் இயற்கையிலேயே அமைதியான மற்றும் மென்மையான குணம் கொண்டவர்கள். திருமணமான பின்னர், தனது மனைவி வீட்டார் அனைவரையும் தன் அன்பால் கட்டிப்போடுவார்கள். இவர்களிடம் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அதிகமாக இருக்கும். மாமனார், மாமியார் மற்றும் மனைவியுடன் எந்தவித சண்டையும் இன்றி, குடும்பத்தில் அமைதியை நிலைநாட்ட விரும்புவார்கள். இவர்கள் சிறந்த அமைதியாளர்களாக இருப்பார்களே தவிர, வீண் விவாதங்களில் ஈடுபட மாட்டார்கள்.
இதையும் படியுங்கள்: Numerology: முன் ஜென்மத்தில் நீங்கள் என்னவாக பிறந்தீர்கள்? பிறந்த தேதியை வைத்தே தெரிஞ்சிக்கலாம் வாங்க.!
எண் 5 (தேதிகள்: 5, 14, 23) – புத்திசாலி மற்றும் கலகலப்பான மருமகன்
புதனின் ஆதிக்கம் பெற்ற இந்த எண்களில் பிறந்த ஆண்கள் மிகவும் புத்திசாலியாகவும், எதையும் எளிதில் கையாளும் திறன் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் கலகலப்பான பேச்சும், நகைச்சுவை உணர்வும் வீட்டில் உள்ள இறுக்கமான சூழ்நிலையைக்கூட மாற்றிவிடும். மாறிவரும் சூழலுக்கு ஏற்ப எந்தவொரு புதிய சூழலையும், புதிய மனிதர்களையும் எளிதில் புரிந்துகொண்டு அவர்களுடன் பழகிவிடுவார்கள். நவீன சிந்தனைகள் இருந்தாலும், குடும்பப் பாரம்பரியத்தை மதித்து நடப்பார்கள். தனது மாமனாருடன் ஒரு தோழரைப் போலப் பழகும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு.
இதையும் படியுங்கள்: Chanakya Niti: 30 வயசுக்குள்ள இந்த 5 விஷயங்களை கத்துக்கோங்க.! சாணக்கியர் கூறும் அறிவுரை.!
எண் 6 (தேதிகள்: 6, 15, 24) – குடும்பத்தை நிர்வகிப்பதில் சிறந்த மருமகன்
சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற இந்த எண்களில் பிறந்த ஆண்கள், குடும்பத்தை அழகாகவும் நேர்த்தியாகவும் வழிநடத்துவதில் வல்லவர்கள். வீட்டைப் பராமரிப்பது, சமையல் கலை, விருந்தினர்களை உபசரிப்பது ஆகியவற்றில் இவர்களை மிஞ்ச ஆள் இல்லை. மனைவி மற்றும் அவரது பெற்றோர் மீது மிகுந்த மரியாதையும் பாசமும் வைத்திருப்பார்கள். குடும்பத்தின் கௌரவத்தை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். மனைவி வீட்டைத் தன் சொந்த வீடாக நினைத்து, மாமனார், மாமியாரைத் தன் சொந்தத் பெற்றோர் போலப் பார்த்துக்கொள்ளும் குணம் இவர்களிடம் அதிகம் இருக்கும்.
இதையும் படியுங்கள்: Venus Transit 2026: ஜூலையில் இந்த 3 ராசிக்காரங்க கோடீஸ்வரர் ஆவது உறுதி.! சுக்கிரன் தரும் ஜாக்பாட்.!
எண் 9 (தேதிகள்: 9, 18, 27) – தைரியமான மற்றும் தியாக மனப்பான்மை கொண்ட மருமகன்
செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற இந்த எண்களில் பிறந்த ஆண்கள், வெளிப்படைத்தன்மையும், அதே சமயம் குடும்பத்திற்காக எதையும் செய்யும் தியாக மனப்பான்மையும் கொண்டவர்கள். குடும்பத்திற்கு ஒரு கஷ்டம் என்றால் இவர்கள்தான் முதலில் முன்னின்று அதைத் தீர்ப்பார்கள். மாமனார், மாமியாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால் தாயைப் போலப் பணிவிடை செய்வார்கள். இவர்களிடம் சூது வாது தெரியாது. மனதில் பட்டதை நேடியாகப் பேசுவார்களே தவிர, பின்னால் பேச மாட்டார்கள். குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகத் தன் சொந்த நலனைக்கூட தியாகம் செய்யத் தயங்க மாட்டார்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

