- Home
- Astrology
- Surya Nakshatra Parivartan 2026: ராகுவின் வீட்டில் குடியேறும் சூரிய பகவான்.! 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டமும், பண மழையும் கொட்டப் போகுது.!
Surya Nakshatra Parivartan 2026: ராகுவின் வீட்டில் குடியேறும் சூரிய பகவான்.! 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டமும், பண மழையும் கொட்டப் போகுது.!
Surya Nakshatra Parivartan 2026: ஜூன் 22 ஆம் தேதி சூரிய பகவான், மிருகசீரிஷத்தில் இருந்து விலகி, ராகுவின் ஆதிக்கப் பெற்ற திருவாதிரை நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சி ஆகிறார். இதனால் பலன் பெறப்போகும் 4 ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Surya Nakshatra Parivartan 2026
ஜோதிட சாஸ்திரத்தின்படி, சூரியன் ஒரு ராசியில் அல்லது நட்சத்திரத்தில் மாறும்போது உலகளாவிய ரீதியிலும், தனிமனித வாழ்க்கையிலும் பெரிய தாக்கங்கள் ஏற்படும். நவக்கிரகங்களின் தலைவனும் ஆன்ம காரகனுமான சூரிய பகவான், ராகுவின் நட்சத்திரமான திருவாதிரைக்கு சூரியன் செல்லும்போது சில ராசிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்களும், தொட்டதெல்லாம் துலங்கும் யோகமும் உண்டாகப் போகிறது. இந்த சூரிய பெயர்ச்சியால் அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் முக்கிய ராசிகள் மற்றும் அதன் விரிவான பலன்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்: Numerology: முன் ஜென்மத்தில் நீங்கள் என்னவாக பிறந்தீர்கள்? பிறந்த தேதியை வைத்தே தெரிஞ்சிக்கலாம் வாங்க.!
மேஷம்
மேஷ ராசிக்கு சூரிய பகவானின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சி மூன்றாம் வீடான தைரிய வீரிய ஸ்தானத்தில் நடக்கிறது. இதனால் உங்களின் தன்னம்பிக்கை பல மடங்கு அதிகரிக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன் தொகைகள் கைக்கு வந்து சேரும். இளைய சகோதர வழி ஆதரவு பெருகும். புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
இதையும் படியுங்கள்: Shiv Yog 2026: ஜூன் மாத இறுதியில் 'சிவ யோகம்'.! 3 ராசிகள் மீது பொழியப்போகும் சிவபெருமான் அருள்.! அடிக்கும் பம்பர் லாட்டரி.!
மிதுனம்
மிதுன ராசியிலேயே சூரிய பகவானின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சி நிகழ்வதால், உங்களுக்கு இது மிகச் சிறந்த காலகட்டமாக அமையப் போகிறது. உங்கள் பேச்சிற்கு சமுதாயத்திலும் குடும்பத்திலும் மதிப்பு கூடும். முகத்தில் ஒரு பொலிவும், ஈர்ப்பும் உண்டாகும். புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். தொழில் ரீதியான பயணங்கள் பெரிய லாபத்தைத் தரும். ராகுவின் நட்சத்திரம் என்பதால், கோபத்தைக் குறைத்து நிதானமாகப் பேசுவது உறவுகளை பலப்படுத்தும்.
இதையும் படியுங்கள்: Chanakya Niti: 30 வயசுக்குள்ள இந்த 5 விஷயங்களை கத்துக்கோங்க.! சாணக்கியர் கூறும் அறிவுரை.!
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதியாக சூரிய பகவான் விளங்கி வருகிறார். சூரியனின் இந்த நட்சத்திரப் இந்த பெயர்ச்சி சிம்ம ராசியின் 11-ம் வீடான லாப ஸ்தானத்தில் அமைகிறது. தொழிலில் இதுவரை இருந்த முட்டுக்கட்டைகள் விலகி, அபரிமிதமான லாபம் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கும். மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம் இது. திடீர் பணவரவிற்கு வாய்ப்பு உண்டு.
இதையும் படியுங்கள்: Numerology: உங்கள் பிறந்த தேதியை சொல்லுங்க.! நீங்க ராமாயணத்தில் எந்த கதாப்பாத்திரம்ன்னு சொல்றோம்.!
கன்னி
கன்னி ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சூரியன் நுழைகிறார். வேலை தேடுபவர்களுக்கும், பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சுப செய்தி கிடைக்கும். தனியார் துறையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கலாம். மேலதிகாரிகளின் முழு ஆதரவு உங்களுக்கு இருக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
இதையும் படியுங்கள்: Jupiter Saturn Transit: சனி மீது விழும் குருவின் 9 ஆம் பார்வை.! 5 ராசிகளுக்கு மகா பாக்கியம்.! கஷ்டங்களில் இருந்து மீண்டு வரப்போகும் அதிர்ஷ்ட ராசிகள்!
தனுசு
தனுசு ராசிக்கு 7-ம் வீடான களத்திர ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிக்கிறார். புதிய பார்ட்னர்கள் மூலம் தொழில் பலமடையும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தடைப்பட்டுக் கொண்டிருந்த சுபகாரியங்கள் கைகூடும். கணவன்-மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி நெருக்கம் கூடும். குடும்பத்தில் அடுத்தடுத்த சுப நிகழ்வுகள் நடைபெறும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

