Birth Date: இந்த தேதில பிறந்தவங்க திருமண வாழ்க்கைல பிரச்சினை நிறைய இருக்கும்!
எண் கணிதத்தின் படி, எந்த எண்ணில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கையில் பிரச்சினை மற்றும் பதட்டம் நிறைந்திருக்கும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Numerology Number 7 Personality & Married Life
எண் கணிதத்தின்படி, எண்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு குறிப்பிட்ட குண நலன்கள் மற்றும் பலன்கள் இருக்கும். அந்த எண்ணில் பிறந்தவர்கள் தங்களது வாழ்க்கையில் அதை அனுபவிப்பார்கள். அந்த வகையில், எந்த மாதத்திலும் எண் 7, 16 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் தங்களது வாழ்க்கையில் பலவிதமான பலன்களை அனுபவித்தாலும், அவர்களது திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் நிறைந்திருக்கும்.
மேலும் இந்த எண்கள் அனைத்தும் எண் 7 இன் கீழ் வருவார்கள். எண் 7- ஐ கேது ஆளுவதால் இந்த எண்களில் பிறந்தவர்கள் தங்களது வாழ்க்கையில் ஏமாற்றத்தை மட்டுமே காண்பார்கள். அதாவது இவர்கள் தங்களது குழந்தைப் பருவம் முதல் திருமண வாழ்க்கை வரை பல சிக்கல்களை தாண்டி தான் முன்னேற்றத்தை காண்பார்கள். சரி இப்போது 7, 16 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பலன்கள் மற்றும் பிரச்சனைகள் குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம்.
எண் 7
எண் கணிதத்தின் படி, எண் 7 க்கு பல்வேறு சிறப்புகள் இருக்கும். எந்த மாதத்திலும் இந்த தேதியில் பிறந்தவர்கள் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் அறிந்திருப்பார்கள். இந்த இந்த எண்ணின் மீது கேதுவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இவர்களது திருமண வாழ்க்கை பிரச்சனைகள் நிறைந்ததாகவே இருக்கும். சில சமயங்களில் அது பெரிய பிரச்சனையாக கூட மாற வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த எண் கொண்டவர்கள் தங்களது குடும்பம் மற்றும் வேலை செய்யும் இடத்தில் தங்களின் விஷயங்களை ஒரு பொது வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளவே மாட்டார்கள்.
எண் 16
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் இந்த தேதியில் பிறந்தவர்கள் தங்களது காதல் வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்திப்பார்கள். இவர்கள் எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் தங்களது கருத்தை பேச ஒருபோதும் தயங்கவே மாட்டார்கள். இவர்களின் இந்த வெளிப்படையான பேச்சால் பிறரது கோபத்திற்கு ஆளாவார்கள். இவர்களது திருமண வாழ்க்கையில் பல கருத்து வேறுபாடுகள் ஏற்படும். மேலும் இவர்கள் தங்களது மனதில் தோன்றும் விஷயங்களை வெளிப்படையாக துணையுடன் பகிர்ந்து கொண்டால் பிரச்சனைகள் வருவதை தவிர்க்கலாம். இவர்களது திருமண வாழ்க்கையில் அன்பு மற்றும் நெருக்கம் அதிகரிக்க தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்.
எண் 25
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் ரொம்பவே கம்மி. இவர்கள் புத்திசாலித்தனமாக செயல்படுவது மட்டுமல்லாமல், பணம் சம்பாதிப்பதில் வெற்றியை காண்பார்கள். நிதி நெருக்கடி பிரச்சனை எப்போதாவது தான் இவர்களுக்கு வரும். ஆனால் இவர்களது திருமண வாழ்க்கையில் பல பிரச்சினைகள் நிறைந்திருக்கும்.