- Home
- Astrology
- Birth Date: பிறந்த தேதி போதும்!! காதல் திருமணமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமானு கணிக்கலாம்!!
Birth Date: பிறந்த தேதி போதும்!! காதல் திருமணமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமானு கணிக்கலாம்!!
எண் கணிதத்தின் படி, உங்கள் பிறந்த தேதியை வைத்து உங்களுக்கு காதல் திருமணம் நடக்குமா? அல்லது நிச்சயக்கப்பட்ட திருமண நடக்குமா? என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Love or Arranged Marriage Numerology
திருமணம் என்பது நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையின் ஒரு முக்கியமான பகுதியாகும். ஏனெனில், பெரியவர்களால் நிச்சயக்கப்பட்ட திருமணமா? அல்லது காதல் திருமணமா? என இந்த இரண்டு வகைகளிலும் நடக்க வாய்ப்பு அதிகமுள்ளது. ஆகவே, உங்களுக்கு காதல் திருமணம் நடக்குமா? அல்லது நிச்சயக்கப்பட்ட திருமண நடக்குமா? என்று நீங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? எண் கணிதம் உங்களுக்கு உதவும். ஆம், ஒருவரது பிறந்த தேதியை வைத்து அவரது குணநலன்கள், எதிர்கால வாழ்க்கை, ஆளுமை, குறைபாடுகள் ஆகியவற்றை எண் கணிதம் மூலம் கணித்துவிட முடியும். எனவே, எண் கணிதத்தின் படி உங்களது திருமண வாழ்க்கை எப்படி அமையும் என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
எண் 1 (1, 10, 19 மற்றும் 28)
எண் 1 என்பது சூரிய பகவானின் அம்சமாக கருதப்படுகிறது. எனவே, எந்த மாதத்திலும் இந்த நான்கு தேதிகளில் பிறந்தவர்கள் சிறந்த ஆளுமை திறன் உடையவர்கள் என்று எண் கணிதம் சொல்லுகின்றது. இவர்கள் உறவுகள் விஷயத்தில் சிறப்பான முடிவுகளை மட்டுமே எடுப்பார்கள். முக்கியமாக இவர்கள் திருமணம் மற்றும் தொழில் விஷயத்தில் தங்கள் கூட்டாளர்களை ஆதிக்கம் செலுத்துவார்கள். எதிலும் சமரசம் செய்யவே மாட்டார்கள். இவர்களை வெகு நாளாக புரிந்து கொண்ட நபர்களால் மட்டுமே இவர்களை சமாளிக்க முடியும். எனவே இத்தகையவர்கள் தங்களது குழந்தை பருவ காதலி/ காதலனை திருமணம் செய்து கொள்வது தான் சிறப்பு. அப்போது தான் அவர்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் மற்றும் தாம்பத்திய சுகத்தையும் நீண்ட நாள் அனுபவிக்க முடியும்.
எண் 2 (2, 11, 20 மற்றும் 29)
எண் 2 இன் கிரகம் சந்திரன் ஆகும். எனவே இந்த நான்கு எண்களில் பிறந்த நபர்கள் ரொம்பவே உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருப்பார்கள் என்று எண் கணிதம் சொல்லுகின்றது. இவர்களிடம் நிலையற்ற மனம் அதிகமாக இருப்பதால் இவர்கள் தங்களது துணையை காயப்படுத்தாமல் இருப்பது தான் நல்லது. மேலும் இவர்கள் உணர்வுபூர்வமான உறவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், இவர்கள் காதல் திருமணம் செய்ய வாய்ப்பு அதிகம் உள்ளன.
எண் 3 (3, 12, 21 மற்றும் 30)
குரு பகவான் தான் எண் 3க்கு அதிபதி. இந்த எண்ணில் பிறந்த நபர்கள் பொதுவாக அதிகமாகவே பேசுவார்கள். பிறரிடம் அன்பாக பழகுவார்கள். இவர்களிடம் இருக்கும் ஆர்வம், மகிழ்ச்சி மற்றும் அன்பான செயல் காரணமாக உறவுகளை எளிதில் ஈர்த்துவிடுவார்கள். மேலும் இவர்களிடம் இருக்கும் சிறப்பான ஆளுமை காரணமாக பிறர் இவர் மீது எளிதில் காதலை விழுந்து விடுவார்கள். இதனால்தான் என்னவோ பெரும்பாலும் இவர்கள் காதல் திருமணம் தான் செய்வார்கள்.
எண் 4 (4, 13, 22 மற்றும் 31)
எண் 4 க்கு அதிபதி ராகு ஆகும். எனவே இந்த நான்கு செய்திகளை பிறந்தவர்கள் மீது ராகுவின் ஆதிக்கம் நிறைந்திருக்கும். இந்த தேதிகளில் பிறந்தவர்களிடம் நம்பகத்தன்மை மற்றும் பொது அறிவு சிறப்பாக இருக்கும். இத்தகையவர்கள் பாரம்பரியத்தை அதிகமாக விரும்புவதாலும், உறவுகளை மிகவும் மதிப்பதாலும், காதலிக்க விரும்பினாலும் கூட இவர்கள் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை தான் செய்து கொள்வார்கள்.
எண் 5 (5, 14 மற்றும் 23)
எண் 5 இன் கிரகம் புதன். என் கணிதத்தின் படி இவர்கள் சுதந்திரமாகவே வாழ விரும்புவார்கள். இவர்களின் இந்த குணத்தால் பெரும்பாலும் இவர்கள் காதல் திருமணம்தான் செய்து கொள்வார்கள்.
எண் 6 (6, 15 மற்றும் 24)
எண் 6 இன் கிரகம் சுக்கிரன். இந்த தேதியில் பிறந்தவர்கள் ரொம்பவே பொறுப்புள்ளவர்களாக இருப்பார்கள். தங்கள் குடும்பத்தின் மீது அன்பு அக்கறை அதிகமாக இருக்கும். இவர்கள் தங்களது உறவில் அன்பை கடைபிடிக்க நினைப்பதால், இவர்கள் காதல் திருமணத்தின் மீதுதான் அதிகம் ஆர்வமாக இருப்பார்கள்.
எண் 7 (7, 16 மற்றும் 25)
எண் 7 இன் கிரகம் கேது. எனவே இந்த தேதிகளில் பிறந்தவர்கள் லட்சியமான சிந்தனை உள்ளவர்களாக இருப்பார்கள் என்று எண் கணிதம் சொல்லுகிறது. இவர்கள் சக்தி வாய்ந்த ஆளுமை உடையவர்கள் இவர்கள் பிறரிடம் அதிகமாக பேச மாட்டார்கள். தனக்கு என்ன தேவையோ அதை மட்டுமே பேசுவார்கள். இவர்கள் தங்களது விருப்பத்தை அடைய அதிக ஆர்வமாக செயல்படுவார்கள். திருமண உறவில் இவர்களுக்கு புரிதல் தவறாக இருப்பதால் காதல் திருமணம் தான் இவர்களுக்கு சிறந்தது.
எண் 8 (8, 17 மற்றும் 26)
எண் 8 இன் கிரகம் சனி பகவான். எண் கணிதத்தின்படி, இவர்கள் ரொம்பவே சிறப்பானவர்கள். இவர்கள் தங்களது வேலை மற்றும் வாழ்க்கையில் சிறப்பான லக்குகளை கொண்டவர்கள். இதனால் இவர்கள் செழிப்பு நிறைந்தவர்களாக இருப்பார்கள். ஆனால், இவர்கள் வேலையில் அதிக கவனம் செலுத்துபவர்களாக இருப்பதால் காதலிக்க நேரம் குறைவாக இருக்கும். எனவே இவர்களுக்கு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான் சிறந்தது.
எண் 9 (9, 18 மற்றும் 27)
எண் 9 இன் கிரகம் செவ்வாய். என் கணிதத்தின் படி இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ரொம்பவே ஆக்ரோஷமாக செயல்பட்டாலும், அன்பிற்காக அதிகமாக இயங்குவார்கள். மேலும் இவர்கள் தொழில், வேலை, காதல் உறவு என எதுவாக இருந்தாலும் குடும்பத்துடன் தான் அதிக நெருக்கமாக இருப்பார்கள். எனவே இவர்கள் காதல் அல்லது நிச்சயிக்கப்பட்ட நல்ல ஒரு வாழ்க்கை துணையை திருமணம் செய்து கொள்வது தான் இவர்களுக்கு நல்லது.