Birth Date: இந்த தேதில பிறந்தவரா நீங்க? இவங்க தொழில் தொடங்குனா கண்டிப்பா நஷ்டம்தான்!!
எண் கணிதத்தின் படி உங்களது பிறந்த தேதியை வைத்து தொழிலா? அல்லது வேலையா? இவை இரண்டில் எது உங்களது எதிர்காலத்திற்கு நல்லது என்று கணிக்க முடியும்.

Career or Business Path With Numerology
எண் கணிதம் என்பது நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் பெருமளவில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது நம்முடைய ஆளுமையை மட்டுமல்ல நாம் எதிர்காலத்தில் என்ன துறையில் சிறந்து விளங்குவோம் என்பதையும் கணிக்கிறது. அந்த வகையில் உங்களது பிறந்த தேதியை வைத்து தொழிலா? அல்லது வேலையா? இவை இரண்டில் எது உங்களது எதிர்காலத்திற்கு நல்லது என்று எண் கணிதம் சொல்லுகின்றது. அது குறித்து நீங்கள் அறிய விரும்புகிறீர்கள் என்றால் இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.
எண் 1
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 1, 10, 19 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எண் 1இன் கீழ் வருவார்கள். இந்த 4 தேதிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே தலைமைத்துவம் குணம் கொண்டவர்கள் என்பதால், இவர்களுக்கு மற்றவர்களுக்கு கீழ் வேலை செய்வது பொருந்தாது. ஒருவேளை அப்படி செய்தாலும், அதில் அவர்கள் ரொம்பவே சோம்பேறித்தனமாக இருப்பார்கள். ஆர்வமின்றி வேலை செய்வார்கள். ஆனால் இவர்கள் ஒரு தொழிலை செய்தால் அவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும். அவர்கள் செய்யும் தொழிலில் அவர்கள் சிறந்து விளங்குவார்கள். அத்தகைய திறமை அவர்களிடம் உண்டு.
எண் 2
எண் கணிதத்தின்படி எந்த மாதத்திலும் 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எண் 2 இன் கீழ் வருவார்கள். இந்த நான்கு தேதிகளில் பிறந்தவர்கள் ரொம்பவே மென்மையானவர்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையில் எந்தவொரு மாற்றம் நடந்தாலும் அதற்கெற்ப மாறிவிடுவார்கள். இந்த குணத்தால், இவர்கள் ஒரு தொழிலை தொடங்குவதற்கு பதிலாக ஒரு நல்ல வேலையை தேர்ந்தெடுப்பது தான் அவர்களுக்கு சிறந்தது. மேலும் அவர்கள் செய்யும் வேலை மூலம் அவர்கள் நல்ல நிலைக்கு செல்வார்கள்.
எண் 3
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 3, 12, 21 மற்றும் 30 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் எண் 3 இன் கீழ் வருவார்கள். இவர்கள் குரு கிரகத்தால் ஆளப்படுவதால் இந்த தேதியில் பிறந்தவர்கள் ரொம்பவே புத்திசாலியாக இருப்பார்கள். இவர்கள் ரொம்பவே கடின உழைப்பாளிகள் என்பதால் வேலை மற்றும் வணிகம் இவை இரண்டில் எதை தேர்ந்தெடுத்தாலும் வெற்றியை காண்பது உறுதி.
எண் 4
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 4, 13 22 மற்றும் 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எண் 4 இன் கீழ் வருவார்கள். இவர்கள் மீது ராகு செல்வாக்கு வலுவாக இருக்கும். இவர்கள் வேலை செய்வதற்கு பதிலாக ஏதும் தொழில் செய்தால் வாழ்க்கையில் நல்ல நிலைமையை அடைவார்கள்.
எண் 5
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 5,14 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எண் 5 இன் கீழ் வருவார்கள். இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் மீது புதனின் செல்வாக்கு வலுவாக இருப்பதால் இவர்கள் ரொம்பவே சுறுசுறுப்பாக இருப்பார்கள் மேலும் இவர்களுக்கு நல்ல தகவல் தொடர்பு திறன் உள்ளதால், இவர்கள் தங்கள் வார்த்தைகளால் அனைவரையும் சுலபமாக கவர்ந்து விட முடியும். எனவே இவர்கள் ஒரு நல்ல வேலையை தேர்ந்தெடுப்பது தான் சிறந்தது. ஒருவேளை தொழில் தொடங்க விரும்பினால் அதற்கான சரியான திட்டமிடல் அவசியம்.
எண் 6
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 6, 15 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எண் 6 இன் கீழ் வருவார்கள். இவர்கள் வீனஸ் கிரகத்தால் ஆளப்படுவதால் வசீகரம் மற்றும் திறமைக்கு பெயர் பெற்றவர்கள். இவர்கள் எந்த துறையில் சென்றாலும் அதில் அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். அதிலும் குறிப்பாக அவர்கள் ஏதேனும் ஒரு தொழிலை செய்தால் அதில் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள் மற்றும் நல்ல பெயரை பெறுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.
எண் 7
எண் கணிதத்தின் படி எந்த மாதத்திலும் 7, 16 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எண் 7 இன் கீழ் வருவார்கள். இவர்கள் மீது கேதுவின் செல்வாக்கு வலுவாக இருப்பதால் இவர்கள் எல்லாவற்றையும் மிக நெருக்கமாக ஆராயும் திறமை கொண்டவர்கள். இவர்கள் வேகத்தை விட நிலைத்தன்மை தான் விரும்புவதால், இவர்களுக்கு தொழிலை விட ஏதேனும் ஒரு நல்ல வேலை செய்வது தான் சிறந்த தேர்வு.
எண் 8
எண் கணிதத்தின் படி எந்த மாதத்திலும் 8, 17 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எண் 8 இன் வருவார்கள். சனியின் செல்வாக்கு இவர்கள் மீது மிகவும் வலுவாக இருப்பதால் இவர்கள் கடினமான உழைப்பாளி. இவர்கள் தைரியமாக தொழில் தொடங்கினால் அதில் அவர்கள் பெரிய வெற்றியை காண்பார்கள்.
எண் 9
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 9, 18 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எண் 9 இன் கீழ் வருவார்கள். செவ்வாய் கிரகத்தால் இவர்கள் ஆளப்படுவதால் இவர்களுக்குள் சண்டையிடு குணம் அதிகமாகவே இருக்கும். மேலும் பொறுமையான குணமும் இருக்கும். எனவே இவர்கள் ஒரு தொழிலை தேர்ந்தெடுத்தால் அதில் மிகவும் சிறப்பாக செயல்படுவார்கள். அந்த துணிச்சல் இவர்களுக்கு அதிகம் உண்டு.