Numerology : இந்த தேதியில் பிறந்தா செம்ம அதிர்ஷ்டம்; பண பிரச்சனையே வராது!!
எண் கணிதத்தின் படி, எந்தெந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு பண பிரச்சனையே வரவே வராது. லட்சுமி தேவியின் அருள் எப்போதும் கிடைக்கும் என்று இங்கு காணலாம்.

எண் கணிதம்
எண் கணிதத்தின்படி, ஒவ்வொரு எண் மற்றும் அந்த எண்ணில் பிறந்த நபரின் ஆளுமை மற்றும் செயல்பாடு தனித்துவமாகவே இருக்கும். மேலும் ஒருவர் பிறந்த எண்ணை வைத்து அவரது குண நலன்களை சொல்லிவிட முடியும். நாம் பிறந்த எண் மற்றும் அந்த எண்ணுக்குரிய கிரகங்களை வைத்து அதற்குரிய பலன்கள் பற்றி அறிந்து கொள்ள முடியும். அந்த வகையில் 6,15,24 என்ற எண்ணில் பிறந்தவர்களின் ஆளுமை மற்றும் பலன்கள் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
எண் 6
எந்த மாதத்திலும் 6 ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கு லட்சுமி தேவியின் அருள் எப்போதுமே கிடைக்கும். இதனால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் வசதியாக இருப்பார்கள். பணப் பற்றாக்குறையை ஒருபோதும் சந்திக்கவே மாட்டார்கள். இந்த எண்ணில் பிறந்தவர்கள் இயல்பிலே கண்ணியமானவர்கள் மற்றும் அன்பானவர்கள். இவர்களிடம் இருக்கும் இனிமையான பேச்சு காரணமாக மற்றவர்கள் ஈர்க்கப்படுவார்கள். இவர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் நேர்மையானவர்கள் என்பதால் வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடைவார்கள்.
எண் 15
எந்த மாதத்திலும் 15 ஆம் தேதியில் பிறந்தவர்கள் ரொம்பவே அதிர்ஷ்டசாலிகள். இவர்கள் சொத்து மற்றும் செல்வங்களுடன் ஆடம்பரமாக வாழ்வார்கள். சுக்கிரனின் அருளால் இவர்களுக்கு பணப்பற்றாக் குறைய வரவே வராது. லட்சுமி தேவியின் அருளும் இவர்களுக்கு கிடைக்கும். இவர்கள் வாழ்க்கை வரும் சவால்களை சுலபமாக எதிர்கொள்வார்கள். முக்கியமாக தங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிப்பார்கள்.
எண் 24
எந்த மாதத்திலும் 24 ஆம் தேதி பிறந்தவர்கள் வசதியாக வாழ்வார்கள். அதுமட்டுமின்றி இவர்கள் பார்க்கவும் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருப்பார்கள். மகாலட்சுமி தேவியின் அருள் இவர்கள் மீது நிரம்பியிருக்கும். இவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் ஒருபோதும் பண பிரச்சனையை எதிர்கொள்ள மாட்டார்கள். இவர்கள் கடின உழைப்பாளி மற்றும் நேர்மையானவர்கள் என்பதால் வெற்றியின் கதவு எப்போதுமே தெரிந்திருக்கும். மேலும் இவர்களது திருமண வாழ்க்கை ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கும்.