- Home
- Astrology
- Numerology : இந்த தேதியில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்!! இவர்களுக்கு எல்லாம் முன்கூட்டியே தெரியும்
Numerology : இந்த தேதியில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்!! இவர்களுக்கு எல்லாம் முன்கூட்டியே தெரியும்
எண் கணிதத்தின் படி, சில குறிப்பிட்ட தேதியில் பிறந்தவர்களால் முன்கூட்டி நடப்பதை உணர முடியும். உங்கள் பிறந்த தேதி இதில் இருக்கிறதா? என்று தெரிந்து கொள்ளுங்கள்

எண் கணிதம்..
எண் கணிதத்தின் படி, நாம் பிறந்த தேதியானது நம்முடைய ஆளுமை, வாழ்க்கை முறை மற்றும் உள்ளார்ந்த சக்தியை பாதிக்கும். அந்த வகையில், குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்தவர்கள் ஆன்மீக நுண்ணறிவு, மன சக்தி, அசாதாரண நாள் உள்பார்வைக்கு பெயருடையவர்கள். அதாவது இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஒரு சக்தி இருக்கும். அந்த சக்தியால் அவர்களால் நடக்கப்போவது முன்கூட்டியே உணர முடியும். ஆகவே நீங்கள் பிறந்த தேதி இந்த லிஸ்டில் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படியுங்கள்.
எண் 2
எண் கணிதத்தின் படி, 2ஆம் தேவியின் பிறந்தவர்கள், மூளையால் அல்ல மனதால் சிந்திக்கும் திறன் உடையவர்கள். இந்த நபர்களுக்கு மனரீதியாக பதில் அளிக்கும் சக்தி உண்டு. இவர்கள் மற்றவர்களில் தேவைகள் மற்றும் உணர்வுகளை சொல்லாமலேயே புரிந்து கொள்ள முடியும். இத்தகையவர்கள் கேட்காமல் பிறருக்கு உதவி செய்யும் நல்ல உள்ளம் கொண்டவர்கள். மனிதநேயத்துடன் நடந்து கொள்வார்கள். குறிப்பாக, இவர்களுக்கு விபத்து ஏதாவது நடக்கப்போகிறது என்றால் முன்கூட்டியே தெரிந்துவிடும்.
எண் 9
எண் கணிதத்தின் படி, 9ம் தேதியில் பிறந்தவர்கள் ரொம்பவே கருணையுடைவர்கள். இந்த நபர்கள் ஆன்மீகத்தில் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். பிறருக்கு சேவை செய்வதில் இவர்கள் எப்போதுமே முன்னிலையில் தான் இருப்பார்கள். இவர்களுக்கு மனிதாபிமானம் ரொம்பவே அதிகம். மேலும் பிறருக்கு சேவை செய்வதிலும், வழிக்காட்டுவதிலும் தங்களது வாழ்க்கையை அர்ப்பணிப்பார்கள். முக்கியமாக இவர்களுக்கு நடக்க போகக்கூடிய விஷயங்கள் முன்கூட்டியே தெரிந்துவிடும்.
எண் 16
எண் கணிதத்தின் படி, 16ம் தேதியில் பிறந்தவர்கள் ஆன்மீக ரீதியில் ரொம்பவே வளர்ச்சி அடைந்து இருப்பார்கள். இவர்கள் தங்களது வாழ்க்கையில் முக்கிய பாதை மாற்றங்களை காண்பார்கள். இவர்களுக்கு கனவு மூலமாக எதிர்காலத்தில் நடக்கும் விஷயங்கள் தெரியும்.
எண் 25
எண் கணிதத்தின் படி, 25ம் தேதியில் பிறந்தவர்களுக்கு ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் இருக்கும். இவர்கள் தொழில்நுட்ப சுதந்திரம் மற்றும் உள் உணர்வுக்கு இடையே சமநிலையை கொண்டிருப்பார்கள். ஏதாவது ஒரு நல்ல அல்லது கெட்ட காரியம் நடக்கப் போகிறது என்றால் அதுகுறித்து இவர்களுக்கு முன்னமே தெரிந்துவிடும்.