- Home
- Astrology
- Nov 2025 Viruchiga Rasi Palangal: விருச்சிக ராசி நேயர்களே.! செவ்வாய் பகவான் அருளால் இந்த மாதம் உங்களுக்கு ராஜவாழ்க்கை கிடைக்கும்.!
Nov 2025 Viruchiga Rasi Palangal: விருச்சிக ராசி நேயர்களே.! செவ்வாய் பகவான் அருளால் இந்த மாதம் உங்களுக்கு ராஜவாழ்க்கை கிடைக்கும்.!
This Month Rasi Palan: நவம்பர் 2025 விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், கிரக நிலைகள், தொழில் மற்றும் வேலை, நிதி நிலைமை, ஆரோக்கியம், பரிகாரங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

நவம்பர் மாத கிரக நிலைகள்:
சூரியன்: நவம்பர் 16 ஆம் தேதி வரை சூரியன் உங்கள் 12 ஆம் வீட்டில் பலவீனமான நிலையில் சஞ்சரித்து, அதன் பின்னர் உங்கள் ராசிக்கு மாறுகிறார்.
செவ்வாய்: இந்த மாதம் முழுவதும் உங்கள் ராசியின் முதல் வீட்டில் சஞ்சரிக்கிறார். இதன் காரணமாக வலிமை, துணிச்சல், வேகத்தைப் பெறுவீர்கள்.
புதன்: நவம்பர் 23 வரை உங்கள் ராசியின் முதல் வீட்டில் சஞ்சரித்து, அதன் பிறகு 12-ம் வீட்டிற்கு மாறுகிறார்.
சுக்கிரன்: நவம்பர் 2 வரை லாப வீட்டிலும், நவம்பர் 2 முதல் 26 வரை 12-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கிறார். இதன் காரணமாக பெரும்பாலான நேரம் சாதகமான பலன்களை எதிர்பார்க்கலாம்.
சனி: சனி பகவான் ஐந்தாம் வீட்டில் குருவின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்க இருக்கிறார். நவம்பர் 28 வரை வக்கிர நிலையில் இருக்கிறார். இது கலவையான பலன்களை தரக்கூடும்.
குரு: குருபகவான் நவம்பர் 11 வரை சிறப்பான முடிவுகளையும், அனுகூலமான பலன்களையும் தருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
பொதுவான பலன்கள்:
ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியில் இருப்பதால் அதிக தைரியத்துடனும், ஆற்றலுடனும் செயல்படுவீர்கள். கடின உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் நிலை உயரும். துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள்.
இருப்பினும் அவசர முடிவுகளை தவிர்த்து நிதானமாக இருக்க வேண்டியது நல்லது. சில சமயங்களில் கவனச் சிதறல்கள் ஏற்படலாம். எனவே மனதை ஒருமுகப்படுத்த வேண்டியது அவசியம்.
நிதி நிலைமை:
நிதி நிலைமை ஸ்திரத்தன்மையை அடையும். முதலீடுகளில் இருந்து நேர்மறையான பலன்கள் கிடைக்கும். குருவின் வக்ர நிலை காரணமாக புதிய முதலீடுகளை தவிர்த்து, பழைய முதலீடுகளை ஆய்வு செய்வது நல்லது.
ஆடம்பரம் அல்லது ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதற்கு செலவு செய்ய தூண்டப்படலாம். வருமானத்திற்கு ஏற்ற செலவு செய்ய வேண்டியது அவசியம். இந்த மாதம் முழுவதும் தேவையான அளவிற்கு வருமானம் கிடைக்கும்.
தொழில் மற்றும் வேலை:
பணியிடத்தில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சக ஊழியர்களுடன் எச்சரிக்கையுடன் பேசுவது நல்லது. உங்களுடைய திட்டங்கள் குறித்து சக ஊழியர்களுடன் பேச வேண்டாம். உங்கள் முயற்சிக்கு பலன்கள் கிடைக்க தாமதம் ஏற்பட்டாலும், உரிய மரியாதை கிடைக்கும்.
தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். ரியல் எஸ்டேட் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். மாத தொடக்கத்தில் சில பணப் பிரச்சனைகள் இருக்கலாம். இருப்பினும் பல வழிகளில் இருந்து பணம் வரும்.
கல்வி மற்றும் ஆரோக்கியம்:
ஆரோக்கியத்தில் சராசரியான அல்லது பலவீனமான பலன்களையே எதிர்பார்க்கலாம். செவ்வாய் ராசியில் இருப்பதால் ஆரோக்கியம் மேம்படும். இருப்பினும் கவனக் குறைவாக இருக்கக்கூடாது. பெற்றோர்கள் குறிப்பாக தாயாரின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.
மேலாண்மை துறை படிக்கும் மாணவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. வெளிநாட்டில் படிக்க முயற்சிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
குடும்ப உறவுகள்:
குடும்ப வாழ்க்கை இந்த மாதம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் பிரச்சனைகள் நீங்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் பொறுமையும் இரக்கமும் தேவை. கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் பலன்களைத் தரும்.
பிள்ளைகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. நவம்பர் 23க்கு பிறகு புதன் வக்ரம் அடைவதால் உறவுகளில் தவறான புரிதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே எச்சரிக்கையுடன் செயல்படவும்
பரிகாரங்கள்:
செவ்வாய்க்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு சிகப்பு மலர்கள் அர்ப்பணித்து வணங்குவது நன்மைகளைத் தரும். முருகன் அல்லது துர்க்கை அம்மனை வழிபடுவது தைரியத்தையும், ஆற்றலையும் அதிகரிக்கும். யாசகர்கள் அல்லது தேவைப்படுபவர்களுக்கு அன்னதானம் அளிப்பது நேர்மறை பலன்களை அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)