MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Nov 2025 Dhanusu Rasi Palangal: தனுசு ராசி நேயர்களே.! நவம்பர் மாதம் இத்தனை பிரச்சனைகள் ரவுண்டு கட்டி அடிக்கும்.! கவனமா இருங்க.!

Nov 2025 Dhanusu Rasi Palangal: தனுசு ராசி நேயர்களே.! நவம்பர் மாதம் இத்தனை பிரச்சனைகள் ரவுண்டு கட்டி அடிக்கும்.! கவனமா இருங்க.!

This Month Rasi Palan: நவம்பர் 2025 தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், கிரக நிலைகள், தொழில் மற்றும் வேலை, நிதி நிலைமை, ஆரோக்கியம், பரிகாரங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Oct 31 2025, 05:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
நவம்பர் மாத கிரக நிலைகள்:
Image Credit : Asianet News

நவம்பர் மாத கிரக நிலைகள்:

சூரியன்: நவம்பர் 16 வரை சூரியன் லாப ஸ்தானமான 11 ஆம் வீட்டில் சஞ்சரித்து, அதன் பின்னர் 12-ம் வீடான விரய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

செவ்வாய்: செவ்வாய் பகவான் இந்த மாதம் முழுவதும் உங்கள் 12 ஆம் வீடான விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருக்கிறார்.

புதன்: புதன் பகவான் நவம்பர் 23 வரை 12-ம் வீட்டில் சஞ்சரித்து, அதன் பிறகு 11-ம் வீடான லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

சுக்கிரன்: சுக்கிர பகவான் மாதத்தின் பெரும் பகுதி உங்களுக்கு சுபமான பலன்களை தர இருக்கிறார்.

சனி-ராகு: சகாய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கின்றனர்.

குரு: அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சற்று கூடுதல் கவனம் தேவைப்படலாம். குரு உச்சம் பெற்று அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் நன்மை கிடைக்கும் என்றும், ஆனால் அலைச்சல் அதிகரிக்கும் என்றும் ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

பொதுவான பலன்கள்:

நவம்பர் மாதம் தனுசு ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களை தரக்கூடிய மாதமாக இருக்கும். சுய பரிசோதனை செய்து கொள்ளும் மாதமாக இருக்கலாம். சில துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். 

சமூகத்தில் உங்கள் நிலை உயரும். சில எதிர்பாராத மாற்றங்களும், நீண்ட கால கனவுகள் நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகளும் உண்டு. இருப்பினும் அலைச்சல் மற்றும் வீண் பயணங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.

நிதி நிலைமை:

நிதி ரீதியாக இந்த மாதம் சாதகமாக இருக்கும். கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கான ஆதாரங்கள் உருவாகும். சுக்கிரனின் சஞ்சாரத்தால் பெரிய லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படலாம். 

விரய ஸ்தானத்தில் கிரகங்கள் சஞ்சரிப்பதால் சுப விரயங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்க நேரிடலாம். இதன் காரணமாக கடன் வாங்கும் சூழல் உருவாகலாம். கடன் சுமையால் மனக்கவலை ஏற்படலாம்.

தொழில் மற்றும் வேலை:

புதன் பகவான் 11-வது வீடான லாப ஸ்தானத்திற்கு மாறுவதால், தொழில் வாழ்க்கையில் மாற்றங்களைக் காண்பீர்கள். உங்கள் திட்டங்கள் சரியான திசையில் செல்லும். பழைய முயற்சிகள் பலனளிக்கத் தொடங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. 

மேலதிகாரிகள் அல்லது நிர்வாகத்தைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்க்கவும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றில் தாமதம் ஏற்படலாம்.

கல்வி மற்றும் ஆரோக்கியம்:

நீண்டகாலமாக இருந்து வந்த ஆரோக்கியப் பிரச்சனைகள் முடிவுக்கு வரலாம். வீண் பயணங்களால் உடல் சோர்வு அல்லது ஆரோக்கிய சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எந்திரங்கள், ஆயுதங்கள், நெருப்பு போன்றவற்றை கையாளும் தொழிலாளர்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். 

இந்த காலகட்டம் மாணவர்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளும் உண்டு.

குடும்ப உறவுகள்:

குடும்ப உறுப்பினர்களால் திடீர் பிரச்சனைகள் மற்றும் வாக்குவாதங்கள் உண்டாக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு கோபத்தையும், வேதனையையும் தரலாம். எனவே நிதானமாக செயல்பட வேண்டியது அவசியம். 

பிள்ளைகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர்களின் பகையால் மனக்கலக்கம் ஏற்படலாம். கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசி முடிவெடுப்பது நல்ல பலன்களைத் தரும்.

பரிகாரங்கள்:

உங்கள் ராசிநாதனான குரு பகவானை வழிபடுவது நல்லது. அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியைப் பெறுவதற்கு நரசிம்மரை வழிபடலாம். விஷ்ணு ஆலயங்களுக்கு சென்று துளசி மாலை சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நன்மை தரும். 

இறைவனுக்கு கற்கண்டு படைத்து அதை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கலாம். கோவிலுக்கு வெளியில் இருக்கும் யாசகர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Tri Ekadashi Yoga : பிரச்சனைகளை குஜிலிமஸ்து செய்யப்போகும் திரி ஏகாதசி யோகம்... சுக்கிரன் குரு அருளால் பலன் பெறும் 5 ராசிகள்!
Recommended image2
Trigrahi Raja Yoga: ஒரே ராசியில் 3 கிரகங்கள் சேர்க்கை! திரிகிரக ராஜயோகத்தால் பலன் பெறும் 4 ராசிகள்
Recommended image3
Diwali Astrology 2026: பல வருஷத்துக்கு பிறகு தீபாவளிக்கு வரும் சூப்பர் யோகம்.! இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட்!
Related Stories
Recommended image1
Nov 2025 Magara Rasi Palangal: மகர ராசி நேயர்களே.! இந்த மாதம் சூரிய பகவானால் அம்பானி ஆகப் போறீங்க.!
Recommended image2
Nov 2025 Kumba Rasi Palangal: கும்ப ராசி நேயர்களே.! நவம்பர் 16-க்கு பிறகு உங்க வாழ்க்கையே அடியோடு மாறும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved