MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • மிதுன ராசிக்காரர்களின் கர்ம வினை எப்படி இருக்கும்? தப்பிக்க எளிய பரிகாரங்கள்.!

மிதுன ராசிக்காரர்களின் கர்ம வினை எப்படி இருக்கும்? தப்பிக்க எளிய பரிகாரங்கள்.!

மிதுன ராசிக்காரர்களின் கர்ம பலன் மற்றும் அதன் அடிப்படையில் அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பற்றி ஜோதிட ரீதியாக இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Jun 20 2026, 10:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மிதுன ராசி கர்ம பலன் Mithuna Rasi Karma Palan
Image Credit : ChatGPT

மிதுன ராசி கர்ம பலன் - Mithuna Rasi Karma Palan

மிதுன ராசிக்காரர்கள் தங்கள் முற்பிறவியில் பேச்சுத் திறன் அல்லது புத்திசாலித்தனத்தை தவறாக பயன்படுத்தி இருந்தால், இந்த பிறவியில் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். நீங்கள் பேசும் வார்த்தைகளுக்கு அதிக சக்தி உண்டு. கர்ம பலன்படி நீங்கள் பிறரை பற்றி தவறாக பேசுதல் அல்லது புறம் பேசுதல் ஆகியவை உங்களுக்கு எதிர்மறை கர்மாவாக மாறும். மேலும் மிதுனம் ஒரு இரட்டை ராசியாகும். இதனால் வாழ்க்கையில் பல நேரங்களில் இதைச் செய்யலாமா? அதைச் செய்யலாமா? என்கிற மனக் குழப்பமும், கர்ம ரீதியான தடுமாற்றங்களும் ஏற்படும்.

இதையும் படியுங்கள்:  Venus Ketu Conjunction: கடக ராசியில் சந்திக்கும் பரம எதிரிகள்.! சுக்கிர கேது சேர்க்கையால் 4 ராசிகளுக்கு பெரும் சிக்கல்.! உங்க ராசி இருக்கா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தொழில் மற்றும் கர்ம ஸ்தானம்
Image Credit : Pixabay

தொழில் மற்றும் கர்ம ஸ்தானம்

மிதுன ராசியின் பத்தாம் வீட்டின் அதிபதியாக குரு பகவான் விளங்கி வருகிறார். மிதுன ராசி கர்ம பலன் படி பிறருக்கு வழிகாட்டும் ஆலோசனைகள் உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். எழுத்து, தகவல் தொடர்பு, கல்வி, கணிதம் ஆகிய துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிட்டும். பத்தாம் வீடு குரு பகவானின் வீடாக இருப்பதால், வாழ்க்கையில் ஒரே தொழிலில் நீடிப்பது சிலருக்கு கடினமாக இருக்கலாம். கர்மாவின் படி மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் உங்களுக்கு இயல்பாகவே இருக்கும்.

இதையும் படியுங்கள்:  Mercury Transit 2026: வடதிசை நோக்கி நகரும் புதன் பகவான்.! அம்பானியாக மாறப்போகும் 5 ராசிகள்.! தொழிலில் கொடி கட்டி பறக்கப்போறீங்க.!

Related Articles

Related image1
Venus Ketu Conjunction: கடக ராசியில் சந்திக்கும் பரம எதிரிகள்.! சுக்கிர கேது சேர்க்கையால் 4 ராசிகளுக்கு பெரும் சிக்கல்.! உங்க ராசி இருக்கா?
Related image2
Mercury Transit 2026: வடதிசை நோக்கி நகரும் புதன் பகவான்.! அம்பானியாக மாறப்போகும் 5 ராசிகள்.! தொழிலில் கொடி கட்டி பறக்கப்போறீங்க.!
35
வாழ்க்கை முறை மற்றும் சவால்கள்
Image Credit : Asianet News

வாழ்க்கை முறை மற்றும் சவால்கள்

புதனின் ஆதிக்கம் இருப்பதால் எதையும் வேகமாக செய்ய வேண்டும் என்கிற ஆசை இருக்கும். மிதுன ராசி கர்ம பலன் உங்களைச் சில இடங்களில் நிதானமாக செயல்பட வைக்கும். தேவையில்லாத பதற்றமும், கவலையும் உங்கள் கர்ம வினையைத் தூண்டும் காரணிகளாக அமையும். மிதுன ராசிக்காரர்கள் உறவு சார்ந்த விஷயங்களில் விரைவாக ஈர்க்கப்படுவார்கள். அதே சமயம் நிறைவாக சலிப்பும் அடைவார்கள். கர்மாவின்படி மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது உங்கள் வாழ்க்கையை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல உதவும்.

இதையும் படியுங்கள்: Astrology By Date Of Birth: இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு நீண்ட ஆயுளும், நோய் நொடியில்லாத வாழ்க்கையும் கிடைக்குமாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?

45
கர்ம தோஷ நிவர்த்தி பரிகாரங்கள்
Image Credit : Pixabay

கர்ம தோஷ நிவர்த்தி பரிகாரங்கள்

கர்ம பலன்களை நல்ல பலன்களாக மாற்றுவதற்கு நீங்கள் பின்வரும் சில ஆலோசனைகளைச் செய்யலாம். யாருக்கும் பொய் வாக்குறுதி அளிக்க வேண்டாம். உங்கள் பேச்சால் யாரையும் புண்படுத்தாமல் இருப்பது உங்களின் பாதி கர்ம தோஷத்தை குறைக்கும். புதனின் ஆதிக்கம் பெற்றவர்கள் என்பதால் புதன் கிழமைகளில் பெருமாள் வழிபாடு செய்வது கர்ம வினைகளின் தீவிரத்தை குறைக்கும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுவது, புத்தகம் வாங்கித் தருவது மிதுன ராசிக்காரர்களின் கர்மாவை தூய்மைப்படுத்த மிகச் சிறந்த வழியாகும்.

இதையும் படியுங்கள்:  Numerology: இந்த தேதிகளில் பிறந்த ஆண்கள் தலைசிறந்த மருமகனாக இருப்பார்களாம்.! உங்க சொந்த மகன் மாதிரி நடந்துக்குவாங்களாம்.!

55
முக்கிய குறிப்பு
Image Credit : Pixabay

முக்கிய குறிப்பு

மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கை என்பது சிந்தனை மற்றும் பேச்சு ஆகிய இரண்டு கர்ம வினைகளை சுற்றி சுழல்கிறது. மிதுன ராசி கர்ம பலன் படி நேர்மையான எண்ணமும், நிதானமான பேச்சும் இருப்பவர்கள் வாழ்க்கையில் மிக உன்னத நிலையை அடைவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
ராசி பலன்
ஆன்மீகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Name Astrology: இந்த 4 எழுத்துல உங்க பெயர் தொடங்குதா? அப்போ பணம் குற்றால அருவி போல் கொட்டுமாம்..!
Recommended image2
Horoscope Today: ஜூன் 20 செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருங்கள்... இல்லையெனில் சிக்கல்!
Recommended image3
Venus Transit 2026: சுக்கிரன் பெயர்ச்சியால் 3 ராசிகளுக்கு அசுர வளர்ச்சி.. தொட்டதெல்லாம் தங்கமாக மாறப்போகுது!
Related Stories
Recommended image1
Venus Ketu Conjunction: கடக ராசியில் சந்திக்கும் பரம எதிரிகள்.! சுக்கிர கேது சேர்க்கையால் 4 ராசிகளுக்கு பெரும் சிக்கல்.! உங்க ராசி இருக்கா?
Recommended image2
Mercury Transit 2026: வடதிசை நோக்கி நகரும் புதன் பகவான்.! அம்பானியாக மாறப்போகும் 5 ராசிகள்.! தொழிலில் கொடி கட்டி பறக்கப்போறீங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved