- Home
- Astrology
- Mercury Transit 2026: வடதிசை நோக்கி நகரும் புதன் பகவான்.! அம்பானியாக மாறப்போகும் 5 ராசிகள்.! தொழிலில் கொடி கட்டி பறக்கப்போறீங்க.!
Mercury Transit 2026: வடதிசை நோக்கி நகரும் புதன் பகவான்.! அம்பானியாக மாறப்போகும் 5 ராசிகள்.! தொழிலில் கொடி கட்டி பறக்கப்போறீங்க.!
Mercury Uttarayan Benefits: ஜோதிட சாஸ்திரத்தின்படி, புதன் கிரகம் 2026-ல் வடதிசை நோக்கி நகர இருக்கிறார். புதன் பகவானின் உத்தராயணம் 5 ராசிகளுக்கு சுப பலன்களை அள்ளித் தரப்போகிறது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Mercury Transit 2026
ஜோதிட சாஸ்திரத்தின்படி, நவகிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன் பகவான், ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நகர்வதும், அவரது திசை மாற்றங்களும் அனைத்து ராசிகளுக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 2026-ஆம் ஆண்டில் புதன் பகவான் வடதிசை நோக்கி பயணிக்கும் உத்தராயண காலம் சில ராசிகளுக்கு மிகப்பெரிய யோகங்களையும், எதிர்பாராத அதிர்ஷ்டங்களையும் அள்ளித்தரப் போகிறது. புதனின் இந்த திசை மாற்றத்தால் 2026-ல் அமோக பலன்களைப் பெறப்போகும் அந்த 5 அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை விரிவாகக் கீழே காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் அதிபதி புதன். அதனால், இந்த ராசிக்காரர்களுக்கு இது ரொம்பவே நல்ல நேரம். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் புதிய வாய்ப்புகள் உருவாகும். தொழில் செய்பவர்களுக்கு புதிய தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள்.
Numerology: உங்கள் பிறந்த தேதியை சொல்லுங்க.! நீங்க ராமாயணத்தில் எந்த கதாப்பாத்திரம்ன்னு சொல்றோம்.!
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு புதனின் இந்த நிலை, வேலையில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு கிடைக்கும், திட்டங்கள் வெற்றி பெறும். உங்கள் மேலாண்மை மற்றும் பேச்சுத் திறமையால் முன்னேறுவீர்கள். மீடியா, கல்வி, எழுத்துத் துறையில் இருப்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
கன்னி
கன்னி ராசிக்கும் புதன்தான் அதிபதி. புதனின் இந்த வலுவான நிலை, உங்கள் பொருளாதாரம் மற்றும் தொழில் வாழ்க்கைக்கு சாதகமாக அமையும். பதவி உயர்வு அல்லது புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் தொழில் திட்டங்கள் வெற்றி பெறும். முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் அதிக அதிர்ஷ்டத்தைத் தரும். புதிய வாய்ப்புகளுக்கான கதவுகள் திறக்கும். உயர்கல்வி, வெளிநாட்டுப் பயணம், புதிய திறமைகளைக் கற்றுக்கொள்வது போன்றவற்றுக்கு இது நல்ல நேரம். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். உங்கள் சமூக வட்டம் விரிவடையும், தொடர்புகள் மூலம் நன்மை உண்டாகும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு பார்ட்னர்ஷிப் மற்றும் தொழில் விஷயங்களில் புதனின் இந்த நிலை சாதகமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் மற்றும் கூட்டமைப்புகள் உருவாகலாம். பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகள் தீரும். ஆனாலும், பெரிய நிதி முடிவுகளை எடுக்கும் முன் கவனமாக இருப்பது முக்கியம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

