- Home
- Astrology
- Oct 17 Today Rasi Palan: மீன ராசி நேயர்களே, மனக்கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி பெருகும்.!
Oct 17 Today Rasi Palan: மீன ராசி நேயர்களே, மனக்கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி பெருகும்.!
Today Rasi Palan: அக்டோபர் 17, 2025 தேதி மீன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

அக்டோபர் 17, 2025 மீன ராசிக்கான பலன்கள்:
மீன ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான பலன்களை வழங்கும் நாளாக இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும். உங்கள் செயல்களில் வேகம் அதிகரிக்கும். வெற்றிகள் எளிதாகும். ஆன்மீக விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். பிற்பகலுக்கு மேல் புதிய திட்டங்கள் அல்லது முயற்சிகளை தொடங்க நல்ல நேரமாகும்.
நிதி நிலைமை:
இன்றைய தினம் பணம் தாராளமாக கிடைக்க வாய்ப்புள்ளது. சலுகைகள், ஊக்கத்தொகைகள் வாயிலாக பண ஆதாயங்கள் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் கைக்கு வந்து சேரலாம். பழைய கடன்கள் வசூல் ஆகலாம். முதலீடுகள் மூலம் ஆதாயம் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
தனிப்பட்ட வாழ்க்கை:
கணவன் மனைவிக்கு இடையே இன்று நெருக்கம் அதிகரிக்கும். மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வீர்கள். துணையுடன் ஆழமான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான தொடர்பை ஏற்படுத்துவீர்கள். பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். எனவே அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்களால் சில சங்கடங்களை சந்திக்க நேரிடலாம். தந்தையுடன் ஏற்பட்ட மன வருத்தங்கள் நீங்கும்.
பரிகாரங்கள்:
இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாடு நம்மை தரும். பலன்களை அதிகரிக்க விஷ்ணுவை வழங்கலாம். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவதற்கு உளுத்தம் பருப்பை தானம் செய்யலாம். உறவுகள் மேம்படுவதற்கு வெல்லம் அல்லது மசூர் பருப்பு தானம் செய்வது நன்மைகள் தரும். இயலாதவர்கள், ஏழை, எளியவர்களுக்கு உதவுவது நற்பலன்களைக் கூட்டும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

