- Home
- Astrology
- Astrology: தீபாவளிக்குப் பிறகு உருவாகும் லட்சுமி நாராயண யோகம்.! கோடிகளில் புரளப் போகும் 3 ராசிகள்.!
Astrology: தீபாவளிக்குப் பிறகு உருவாகும் லட்சுமி நாராயண யோகம்.! கோடிகளில் புரளப் போகும் 3 ராசிகள்.!
Lakshmi Narayan Yog: ஜோதிடத்தின் படி சுக்கிரன் மற்றும் புதன் பகவான் இருவரும் இணைந்து சக்தி வாய்ந்த லட்சுமி நாராயண யோகத்தை உருவாக்க உள்ளனர். இது சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அளிக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

லட்சுமி நாராயண யோகம் 2025
வேத நாட்காட்டியின்படி இந்த ஆண்டு தீபாவளிக்குப் பிறகு பல கிரக பெயர்ச்சிகள் மற்றும் ராஜயோகங்கள் உருவாக உள்ளன. அந்த வகையில் புதன் மற்றும் சுக்கிரன் இருவரும் விருச்சக ராசியில் இணைய உள்ளனர். இதன் காரணமாக ‘லட்சுமி நாராயண யோகம்’ உருவாக உள்ளது. இந்த யோகமானது மங்களகரமானதாக அறியப்படுகிறது. இது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். தொழில் முன்னேற்றம் மற்றும் வருமான வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
புதன் சுக்கிரன் இணைவு
நவகிரகங்களில் புதன் மற்றும் சுக்கிரன் இருவரும் மங்களகரமான கிரகமாக அறியப்படுகின்றனர். புதன் பகவான் பேச்சு, புத்திசாலித்தனம், வணிகம், படிப்பு ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். சுக்கிர பகவான் செல்வம், ஆடம்பரம், அழகு, பொன், பொருள், வசதிகள் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். இந்த இரண்டு சுப கிரகங்களின் இணைவு ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
விருச்சிகம்
- விருச்சிக ராசிக்காரர்களுக்கு லட்சுமி நாராயண ராஜயோகம் பல வழிகளில் நன்மை பயக்கும்.
- இந்த ராஜயோகம் உங்கள் ராசியின் முதல் வீடான லக்ன வீட்டில் உருவாகிறது.
- எனவே இந்த நேரத்தில் உங்கள் ஆளுமை மேம்படும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- குழப்பமான முடிவுகளை தவிர்த்து, தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
- நின்று போன திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.
- குடும்ப வாழ்க்கையில் நீண்ட காலமாக நிலவி வந்த தகராறு தீர்க்கப்படும்.
- உறவுகளில் இனிமையும், நம்பிக்கையும் அதிகரிக்கும்.
- திருமணமானவர்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக மாறும்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்.
சிம்மம்
- லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாவது சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும்.
- இந்த ராஜயோகம் உங்கள் ராசியின் நான்காவது வீட்டில் உருவாகிறது.
- எனவே நீங்கள் பொன், பொருள், வசதிகள், ஆடம்பரம் ஆகியவற்றை அனுபவிக்கலாம்.
- ஒரு வாகனம் அல்லது புதிய சொத்தையும் வாங்கலாம்.
- தொழிலதிபர்கள் எதிர்பார்த்து காத்திருந்த புதிய ஆர்டர்கள், அரசு ஒப்பந்தங்கள் கிடைக்கலாம்.
- கூட்டாக தொழில் செய்து வருபவர்கள் லாபத்தைப் பெறுவீர்கள்.
- ரியல் எஸ்டேட் மற்றும் சொத்து தொடர்பான வேலைகளில் இருப்பவர்களுக்கு வருமானம் இரட்டிப்பாகும்.
- மேலும் குடும்ப உறவுகளுடன் இருந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும்.
மேஷம்
- லட்சுமி நாராயண ராஜயோகம் மேஷ ராசிக்காரர்களுக்கும் நன்மை பயக்கும்.
- இந்த ராஜயோகம் உங்கள் ராசியின் அதிர்ஷ்ட வீட்டில் உருவாக இருக்கிறது.
- எனவே அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
- நாட்டிற்கு உள்ளேயோ அல்லது வெளிநாட்டிற்கோ பயணம் செல்ல நேரிடலாம்.
- மேலும் தொழிலில் விரைவான முன்னேற்றத்தையும் காண்பீர்கள்.
- அரசு வேலைகள் அல்லது போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு இந்த காலம் வெற்றியை பெற்றுத் தரும்.
- உங்கள் வீட்டில் அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
- வேலை அல்லது தொழில் சம்பந்தமாக வெளிநாடு அல்லது நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள நேரிடலாம்.
- இதன் மூலம் நிதி ஆதாயங்கள் பெருகி லாபம் இரட்டிப்பாகும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)