- Home
- Astrology
- Rahu Peyarchi: சொந்த நட்சத்திரத்திற்கு செல்லும் ராகு பகவான்.! 3 ராசிகளின் வாழ்க்கையே அடியோடு மாறப் போகுது.!
Rahu Peyarchi: சொந்த நட்சத்திரத்திற்கு செல்லும் ராகு பகவான்.! 3 ராசிகளின் வாழ்க்கையே அடியோடு மாறப் போகுது.!
Rahu Peyarchi 2025: ஜோதிடத்தின் படி ராகு பகவான் சதய நட்சத்திரத்தில் நுழைய இருக்கிறார். இதன் காரணமாக மூன்று ராசிக்காரர்கள் நிதி ஆதாயங்கள் மற்றும் முன்னேற்றத்தைக் காண உள்ளனர். அவர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ராகு நட்சத்திரப் பெயர்ச்சி 2025
வேத ஜோதிடத்தில் ராகு பகவான் நிழல் கிரகமாக அறியப்படுகிறார். கடுமையான பேச்சு, சூதாட்டம், திருட்டு, தீய செயல்கள், தோல் நோய்கள் போன்ற பலவற்றின் காரகராக விளங்கும் இவர், குறிப்பிட்ட இடைவெளியில் தனது ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுகிறது.
வருகிற நவம்பர் மாதம் ராகு பகவான் சதய நட்சத்திரத்திற்குள் நுழைய இருக்கிறார். இந்த நட்சத்திரத்தை ராகு பகவான் ஆள்கிறார். ராகு பகவான் தனது சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதன் காரணமாக மூன்று ராசிக்காரர்கள் நல்ல பலன்களை அனுபவிக்க உள்ளனர். அவர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மகரம்
- மகர ராசிக்காரர்களுக்கு ராகுவின் மாற்றம் பல வழிகளில் நன்மையைத் தரவுள்ளது.
- நவம்பர் மாதத்தில் வேலை மற்றும் தொழிலில் குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெறுவீர்கள்.
- நீங்கள் இதுவரை எட்டாத புதிய உயரங்களை எட்டுவீர்கள்.
- உங்களை புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்லும் தொழில் வாய்ப்புகளையும் பெறுவீர்கள்.
- இதுவரை எதிர்பார்த்து வந்த நிதி வரவுகளைப் பெறுவீர்கள்.
- நிறுவனங்களில் பணியாற்றி வருபவர்கள் உயர் பதவிகள் அல்லது தலைமைத்துவப் பதவிகளைப் பெறுவீர்கள்.
- வெளிநாட்டுப் பயணம் அல்லது வெளிநாடு தொடர்பாக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.
- திடீர் பண வரவால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும்.
மிதுனம்
- ராகுவின் நட்சத்திர மாற்றம் மிதுன ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மையைத் தரும்.
- ராகு பகவான், மிதுன ராசியின் வருமானம் மற்றும் லாப வீட்டில் பெயர்ச்சி அடைவதால், மிதுன ராசிக்காரர்கள் வருமானம் கணிசமாக அதிகரிக்கும்.
- புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும்.
- தொழில் தொடங்க நினைப்பவர்கள் அல்லது சிறிதாக தொழில் நடத்தி வருபவர்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும்.
- இதன் காரணமாக லாபம் அதிகரிக்கும். நிதி நிலைமை வலுப்படும்.
- முதலீடுகளில் இருந்தும் பலன் கிடைக்கும்.
- புதிய வணிக கூட்டாளிகள் அல்லது ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
- இத்தனை நாட்களாக முடிக்கப்படாமல், நிலுவையில் இருந்த வேலைகள் வேகம் எடுக்கும்.
ரிஷபம்
- ராகு பகவான் ரிஷப ராசியின் கர்ம பாவத்திற்கு பெயர்ச்சி அடைவதால் அவரது நட்சத்திர மாற்றம் உங்களுக்கு சாதகமாக இருக்கலாம்.
- நீங்கள் அவ்வப்போது எதிர்பாராத நிதி ஆதாயங்களை அனுபவிப்பீர்கள்.
- வேலை இடத்தில் உங்களுக்கு எதிராக நடந்து வந்த சதிகளை வெற்றிகரமாக முறியடிப்பீர்கள்.
- இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
- தொழில் வாழ்க்கையில் ஸ்திரத்தன்மை ஏற்படும்.
- புதிய தொழில் தொடங்க விரும்புவர்களுக்கு இது நல்ல நேரமாக இருக்கும்.
- ஐடி, செயற்கை நுண்ணறிவு, இணையம் தொடர்பான வேலை செய்து வருபவர்களுக்கு நல்ல காலம் தொடங்க இருக்கிறது.
- தந்தை வழி உறவுகளுடனான உறவு நன்றாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)