- Home
- Astrology
- Jan 22 Kumba Rasi Palan: கும்ப ராசி நேயர்களே, இன்று அதிர்ஷ்டமும் இருக்கு, ஆபத்தும் இருக்கு.! கவனமா இருங்க.!
Jan 22 Kumba Rasi Palan: கும்ப ராசி நேயர்களே, இன்று அதிர்ஷ்டமும் இருக்கு, ஆபத்தும் இருக்கு.! கவனமா இருங்க.!
Jan 22 Kumba Rasi Palan: ஜனவரி 22, 2026 தேதி கும்ப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

கிரக நிலைகள்:
ராசி நாதனான சனி பகவான் ஜென்ம சனியாக உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். குரு பகவானின் பார்வை காரணமாக இன்று சாதகமான சூழல் ஏற்படும்.
பொதுவான பலன்கள்:
ஜென்ம சனியின் நிலை காரணமாக உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி நிதானமாக செயல்பட வேண்டிய நாளாகும். குருவின் பார்வையால் தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். வெளியூர் பயணங்களின் பொழுது விழிப்புணர்வு தேவை. உடமைகளில் கவனத்துடன் இருக்கவும்.
நிதி நிலைமை:
வருமானம் சீராக இருந்தாலும் தேவையற்ற செலவுகளும் வரிசை கட்டி நிற்கும். பழைய கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் பிறக்கும். முதலீடுகளைப் பொறுத்தவரை பெரிய தொகையை முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும்.
தனிப்பட்ட வாழ்க்கை:
குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை இன்று சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வரலாம். எனவே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தேவையற்ற வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும். நண்பர்கள் வழியாக நிதி ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
பரிகாரங்கள்:
இன்று வியாழக்கிழமை என்பதால் தட்சிணாமூர்த்தியையும் குலதெய்வத்தையும் வணங்குவது சிறந்தது. அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடலாம். ஆதரவற்றவர்களுக்கு உணவை தானமாக வழங்கவும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

