- Home
- Astrology
- Sani Peyarchi: 27 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த வீட்டில் சனி பகவான்.! 4 ராசிகளுக்கு பணம், புகழ், பதவி தேடி வரப்போகுது.!
Sani Peyarchi: 27 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த வீட்டில் சனி பகவான்.! 4 ராசிகளுக்கு பணம், புகழ், பதவி தேடி வரப்போகுது.!
Sani Peyarchi Palangal 2026 in Tamil: சனி பகவான், ஜனவரி 20 ஆம் தேதி உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழைந்துள்ளார். இந்த நட்சத்திர மாற்றம் சில ராசிகளுக்கு எதிர்பாராத பலன்களைத் தரும். அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம்.

சனி பெயர்ச்சி 2026
சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதிக்குள் நுழைந்து இருக்கிறார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு அளவற்ற பலன்கள் கிடைக்க உள்ளது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
சனி நட்சத்திர மாற்றம் ரிஷப ராசிக்கு மிகவும் சாதகமாக இருக்கும். திடீர் பண ஆதாயம் உண்டாகும். தொழில் ரீதியாக அனுகூலமாக இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை கூடும். கடன் தொல்லையிலிருந்து நிரந்தர விடுதலைப் பெறுவீர்கள்.
மிதுனம்
சனி நட்சத்திர மாற்றம் மிதுன ராசிக்கு அற்புதமாக இருக்கும். இந்த காலகட்டம் தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும். வேலையில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. மேலதிகாரிகளிடம் இருந்து அங்கீகாரம் கிடைக்கும். புதிய முதலீடுகளுக்கு இது சரியான நேரமாகும். அசையா சொத்துக்களின் சேர்க்கை நடைபெறும்.
துலாம்
துலாம் ராசிக்கு சனி பகவானின் நட்சத்திர மாற்றம் கவசம் போல செயல்படும். ஆரோக்கியம் மேம்படும், குடும்பத்தில் அமைதி நிலவும். புதிய வாகனம் வாங்கலாம். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தைகள் வழியாக நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். எதிர்பாராத தன வரவு மற்றும் தன யோகம் உண்டாகும்.
மகரம்
மகர ராசிக்கு சனியின் சஞ்சாரத்தால் தைரியம் அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் குறித்த நேரத்தில் முடியும். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் லாபம் உண்டாகும். வணிக ஒப்பந்தங்கள் இறுதியாகும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

