- Home
- Astrology
- Guru Vakra Nivarthi: 2026-ல் வக்ர நிவர்த்தியடையும் குரு பகவான்.! இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக் கதவுகள் திறக்கப்போகுது.! உங்க ராசி இருக்கா?
Guru Vakra Nivarthi: 2026-ல் வக்ர நிவர்த்தியடையும் குரு பகவான்.! இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக் கதவுகள் திறக்கப்போகுது.! உங்க ராசி இருக்கா?
Guru Vakra Nivarthi 2026: மார்ச் 2026-ல் குரு பகவான் வக்ர நிவர்த்தியடைந்து நேர்கதிக்கு திரும்புகிறார். இதனால் பலன்பெறும் ராசிகள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

குரு வக்ர நிவர்த்தி
ஜோதிடத்தில் குரு பகவான் சக்தி வாய்ந்த கிரகமாவார். தற்போது மிதுன ராசியில் வக்ர நிலையில் உள்ள குரு, மார்ச் முதல் நேர்கதியில் பயணிக்க உள்ளார். இந்த மாற்றம் சில ராசிகளுக்கு முக்கிய திருப்புமுனையாக அமையவுள்ளது. வேத பஞ்சாங்கத்தின்படி, வக்ர கதியில் பயணித்து வரும் குரு மார்ச் 11, 2026-ல் முழுமையாக நேர்கதிக்கு மாறுகிறார். இருப்பினும், மார்ச் தொடக்கத்திலிருந்தே இதன் நேர்கதி பயணத்தின் தாக்கம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேஷம்
மேஷ ராசிக்கு 3-ம் இடமான தைரிய ஸ்தானத்தில் குரு வக்ர நிவர்த்தி அடைவதால், கடந்த சில மாதங்களாக இருந்த குழப்பங்கள் நீங்கும். புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். முதலீடுகளில் லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு குருவின் நேர்கதி நல்ல பலன்களைத் தரும். வியாழன் 2-ம் வீடான தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வருமானம் உயரும். பணப் பிரச்சனைகள் தீரும். உங்கள் பேச்சிற்கு மதிப்பு கூடும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும். குடும்பத்தில் இருந்த சண்டைகள் மறைந்து ஒற்றுமை பிறக்கும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மன அழுத்தம் குறையும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கு குருவின் நேர்கதி சிறப்புப் பலன்களைத் தரும். 11-ம் வீடான லாப ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதால் வருமானம் பெருகும். புதிய வருமான வழிகள் திறக்கும். முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். வங்கி இருப்பு வேகமாக உயரும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் மற்றும் திட்டங்கள் நிறைவேறும்.
தனுசு
தனுசு ராசிக்கு 7-ம் இடமான களத்திர ஸ்தானத்தில் குரு வக்ர நிவர்த்தி பெறுகிறார். இதன் காரணமாக திருமணத் தடைகள் நீங்கி நல்ல வரன் அமையும். கூட்டுத்தொழில் செய்து வருபவர்களுக்கு கூட்டாளிகளுடன் இருந்த மனக்கசப்பு நீங்கி தொழில் விரிவடையும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள். அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
மீனம்
மீன ராசிக்கு குருவின் நேர்கதி சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும். 4-ம் வீடான சுக ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் வசதிகள் பெருகும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வேலையில் புதிய பொறுப்புகள் வரும். புதிய தொழில் தொடங்க இது சரியான நேரம். நீண்ட கால உடல் உபாதைகள் குறையத் தொடங்கும். ஆரோக்கியம் சிறப்பாக மாறும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

