MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Karthigai Deepam 2025: கார்த்திகை தீபம் 2025 தேதி, நேரம், வழிபாட்டு முறைகள்.! செல்வம் பெருக எத்தனை தீபம் ஏற்ற வேண்டும்?

Karthigai Deepam 2025: கார்த்திகை தீபம் 2025 தேதி, நேரம், வழிபாட்டு முறைகள்.! செல்வம் பெருக எத்தனை தீபம் ஏற்ற வேண்டும்?

Karthigai Deepam 2025 Date and Time: இந்த ஆண்டு தீபத்திருநாள் குறித்தும், தீபம் ஏற்ற வேண்டிய நேரம், எத்தனை தீபம் ஏற்ற வேண்டும், வழிபாட்டு முறைகள் ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

3 Min read
Author : Ramprasath S
Published : Dec 02 2025, 12:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
கார்த்திகை தீபம் 2025
Image Credit : Asianet News

கார்த்திகை தீபம் 2025

இந்துக்களின் முக்கிய பண்டிகையாக கார்த்திகை தீபம் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தீப ஒளியின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் ஒரு பண்டிகையாகும். சிவன் மற்றும் திருமால் இருவருக்கு இடையே யார் பெரியவர் என்கிற சர்ச்சை ஏற்பட்டபோது சிவன் ஜோதிப் பிழம்பாக நின்ற நாளே கார்த்திகை தீபமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீப ஒளியானது நம் வாழ்வில் உள்ள இருளை நீக்கி, ஞானம் மற்றும் செல்வத்தை கொண்டு வரும் என்கிற நம்பிக்கையுடன் இந்த பண்டிகையானது கொண்டாடப்பட்டு வருகிறது.

கார்த்திகை தீபம் 2025 தேதி மற்றும் நேரம்

குறிப்பாக தமிழ்நாட்டில் இது சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். இந்த ஆண்டு கிருத்திகை நட்சத்திரம் டிசம்பர் 3 மாலை 04:48 மணிக்கு தொடங்கி டிசம்பர் 4ஆம் தேதி பிற்பகல் 03:08 வரை நீடிக்கிறது. எனவே தீபம் ஏற்றுவதற்கு டிசம்பர் 3 ஆம் தேதி மாலை 6:00 மணி என்பது பொருத்தமான நேரமாகும். சில பஞ்சாங்கங்களின்படி கார்த்திகை நட்சத்திரம் நீடிப்பதன் அடிப்படையில் டிசம்பர் 4 வியாழக்கிழமை அன்றும் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. இருப்பினும் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படுவது டிசம்பர் 3 என்பதால் இந்த நாளே தீபத்திருநாள் கொண்டாடுவதற்கு உகந்த நாளாகும்.

கார்த்திகை தீபம் வழிபாட்டு முறைகள்

திருக்கார்த்திகை தினத்தன்று காலையில் நீராடி, உபவாசம் இருந்து மாலையில் தீபம் ஏற்றிய பிறகு உணவருந்துவது சிறந்தது. நாள் முழுவதும் சிவபெருமான் அல்லது முருகப்பெருமானை நினைத்து விரதம் இருக்கலாம். பொதுவாக மாலை வேளையில் சூரியன் மறைந்த பின்னர் ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் தீபம் ஏற்றுவது உகந்தது. திருவண்ணாமலைகில் தீபம் ஏற்றிய பிறகு நம் வீடுகளில் தீபம் ஏற்றலாம். தீபம் ஏற்றிய பின்னர் முருகப் பெருமான் விநாயகரை மனதார வழிபடலாம். கந்த சஷ்டி கவசம், சிவபுராணம் உள்ளிட்ட பக்திப் பாடல்களை பாடுவது சிறந்தது. பொரி உருண்டை, அப்பம், அவல், பாயாசம் போன்றவற்றை தயார் செய்து இறைவனுக்குப் படைத்து குடும்பத்தாருக்கும், அண்டை வீட்டாருக்கும் கொடுக்கலாம்.

தீப தினத்தன்று எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்?

கார்த்திகை தினத்தில் 27 நட்சத்திரங்களை குறிக்கும் வண்ணம் குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்றலாம். தீபம் ஏற்றுவதற்கு அகல் விளக்குகள் மிகவும் சிறந்தது. கடைகளில் கிடைக்கும் செயற்கையான விளக்குகளை விடுத்து, மண் விளக்குகளை வாங்கி அதை சுத்தம் செய்ய வேண்டும். முதல் நாளே விளக்குகளை வாங்கி வந்து அதை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் சுத்தப்படுத்தி காயவிட வேண்டும். பின்னர் அவற்றிற்கு மஞ்சள் குங்குமம் வைத்து நல்லெண்ணெய் தீபமிட்டு வீடு முழுவதும் விளக்குகளை ஏற்றலாம். சமையலறை, படுக்கையறை, மொட்டை மாடி, நிலை வாசல் என்று அனைத்து இடங்களிலும் தீபம் வைக்க வேண்டும்.

விளக்கேற்றும் முறை

தீபத்திருநாளன்று இத்தனை விளக்குகள் தான் ஏற்ற வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. உங்களால் எத்தனை தீபம் ஏற்ற முடியுமோ அத்தனை தீபங்கள் ஏற்றலாம். பூஜை அறை, வாசல், கொல்லைப்புறம், துளசி மாடம், ஜன்னல்கள் என அனைத்து இடங்களிலும் 5,7,9,11 என்று ஒற்றைப்படை எண்ணிக்கையில் தீபம் ஏற்றலாம். வாசலின் இருபுறமும் தலா ஒன்று, வீட்டின் நடுப்பகுதியில் ஒன்று, துளசி மாடத்தில் ஒன்று, பூஜை அறையில் மூன்று அல்லது ஐந்து தீபங்கள் ஏற்றுவது சிறப்பு. அனைத்து தீபத்திற்கும் நெய் இட முடியாதவர்கள் ஒன்று அல்லது இரண்டு தீபங்களுக்கு மட்டும் நெய்யை பயன்படுத்தலாம். விளக்கிற்கு அடியில் வாழை இலை, பூவரச இலை அல்லது தட்டு போன்றவற்றை பயன்படுத்துவது சிறந்தது.

அறுகோண தீபம்

கிருத்திகை நட்சத்திரம் என்பது முருகப்பெருமான் அவதரித்த நட்சத்திரம் என்பதால் அறுகோண தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பானதாகும். மாலை 6 மணிக்கு திருவண்ணாமலை தீபம் ஏற்றப்படும் காட்சியை பார்த்து முடித்த பின்னர் வீட்டு வாசலில் நட்சத்திரம் வரைந்து அதன் ஆறு முனைகளிலும் அறுகோண தீபம் ஏற்றி ‘சரவணபவ’ என்று எழுதி வழிபடலாம். அறுகோண தீபம் ஏற்றி வழிபடுவது குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியத்தையும், திருமணமாகாதவர்களுக்கு திருமண வரத்தையும் நல்கும் என்று கூறப்படுகிறது.

இறைவனின் அருளைப் பெறுங்கள்.!

வீட்டில் பூஜைகளை முடித்த பின்னர் கோயில்களில் நடக்கும் திருக்கார்த்திகை சிறப்பு பூஜைகளிலும், சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளலாம். சொக்கப்பனை நிகழ்வு என்பது இறைவன் மனிதர்களுக்கு மட்டுமல்ல உலகில் வாழும் நாய், பூனை போன்ற அனைத்து ஜீவராசிகளுக்கும் மோட்ச பாதை கிடைக்க வேண்டும் என்று இறைவன் காட்டும் ஒளிப் பாதையை குறிக்கும் நிகழ்வாகும். இந்த புனித நாளில் முறையாக விரதம் இருந்து தீபமேற்றி வழிபட்டு இறைவன் அருளை முழுமையாகப் பெறுங்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
ஆன்மீகம்
தமிழ்நாடு
திருவிழாக்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சனி நட்சத்திரப் பெயர்ச்சி.! அடுத்த 146 நாட்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்.!
Recommended image2
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களுக்கு 30 வயதுக்கு மேல் கோடீஸ்வர யோகம் கிடைக்கும்.! நீங்க பிறந்த மாதம் இருக்கா?
Recommended image3
சுக்கிர பகவான் உருவாக்கும் மாளவ்ய ராஜயோகம்.! 4 ராசிகளுக்கு சொத்துக்கள் குவியும்.! தங்கம், வெள்ளி, பொன், பொருள், நகை சேரும்.!
Related Stories
Recommended image1
Astrology: 18 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் ராகு-சுக்கிரன்.! 4 ராசிகளின் தலையெழுத்தே மாறப்போகுது.!
Recommended image2
Astrology: 2026-ல் சூரிய பகவானால் நடக்கும் மாற்றம்.! 5 ராசிக்காரர்கள் அம்பானியாக மாறப்போறீங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved