- Home
- Astrology
- Astrology: நேருக்கு நேர் சந்திக்கும் குரு - செவ்வாய்.! 5 ராசிகளுக்கு டாப் கிளாஸ் யோகம்.! தொட்டதெல்லாம் ஹிட்டு தான்.!
Astrology: நேருக்கு நேர் சந்திக்கும் குரு - செவ்வாய்.! 5 ராசிகளுக்கு டாப் கிளாஸ் யோகம்.! தொட்டதெல்லாம் ஹிட்டு தான்.!
Mars Jupiter Conjunction 2026: குரு மற்றும் செவ்வாய் 60 டிகிரி கோணத்தில் இருக்கும்போது திரி ஏகாதச யோகம் உருவாகும். இந்த யோகம் ஜூன் 2026-ன் இறுதியில் அமையப் போகிறது. இதனால் எந்தெந்த ராசிகளுக்குப் பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.

Tri Ekadash Yog 2026
ஜூன் 28, 2026 அன்று காலை 10:16 மணி முதல், செவ்வாய் மற்றும் குரு கிரகங்கள் 60 டிகிரி கோணத்தை எட்டும்போது ‘திரி ஏகாதச யோகம்’ உருவாகிறது. சாஸ்திரங்களில், திரி ஏகாதச யோகம் ஒரு சுப யோகமாக பார்க்கப்படுகிறது. இது வாழ்க்கையில் நல்ல மற்றும் முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வரும். ஜூன் 2026 இறுதியில் இந்த யோகத்தால் பலன் பெறும் ஐந்து ராசிகள் எவை என இங்கே பார்க்கலாம்.
மேஷம்
வேலை மாற நினைப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். விரும்பிய சம்பளத்துடன் புதிய வேலை அமையலாம். படித்து முடித்து வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்புகள் வரும். இதுவரை நீங்கள் செய்த கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். வீட்டில் சூழல் இனிமையாக மாறும், பழைய சண்டைகள் முடிவுக்கு வரும். மேலும், உங்கள் ஆரோக்கியமும் மேம்படும்.
கடகம்
உங்கள் தந்தையின் உடல்நலம் மேம்படுவதால் மன நிம்மதி கிடைக்கும். பணப் பற்றாக்குறை இனி உங்களைத் தொந்தரவு செய்யாது. சம்பள உயர்வால் சேமிப்பு அதிகரிக்கும். வங்கி இருப்பு உயரும். நீங்கள் திட்டமிட்ட வேலைகள் சிறப்பாக நடக்கும். இந்த நேரத்தில் நீங்கள் பணி மாற்றம் அல்லது இட மாற்றம் குறித்தும் யோசிக்கலாம். குரு பகவானின் ஆசியால் வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும்.
கன்னி
குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பிள்ளைகளின் நடவடிக்கைகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். குடும்பத்தினருடன் இனிமையான தருணங்களை உருவாக்குவீர்கள். உங்கள் நிதி நிலையை வலுப்படுத்தும் முயற்சிகள் வெற்றி பெறும். நிலம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஈடேறும். இது எதிர்காலத்திற்கு நல்ல முதலீடாக அமையும்.
விருச்சிகம்
சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு லாபம் தரும் வகையில் ஆர்டர்கள் அல்லது ஒப்பந்தங்கள் கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணம் கைக்கு வரலாம். வீட்டின் சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த தகராறுகள் முற்றிலும் தீர்க்கப்படும். கடுமையான நோய்களிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள்.
மீனம்
நீண்ட காலமாக நிதி நெருக்கடியில் இருந்தவர்களுக்கு ஜூன் 2026-ன் இறுதியில் சற்று நிம்மதி கிடைக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும் உறவினர்களுடன் இருந்துவந்த தொடர் சண்டைகள் முடிவுக்கு வரும். தந்தை அல்லது தந்தை வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் தீரும். பூர்வீக சொத்துக்களில் பங்குகள் கிடைக்கும். பாகப்பிரிவினைகள் சுகமூகமாக நடக்கும். உங்களுக்கு வந்து சேர வேண்டிய பங்குகள் கைக்கு வரும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

