- Home
- Astrology
- Astrology: 18 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் ராகு-சுக்கிரன்.! 4 ராசிகளின் தலையெழுத்தே மாறப்போகுது.!
Astrology: 18 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் ராகு-சுக்கிரன்.! 4 ராசிகளின் தலையெழுத்தே மாறப்போகுது.!
Rahu Shukra Yuti 2026: 2026 ஆம் ஆண்டில் கும்ப ராசியில் சுக்கிரன் மற்றும் ராகுவின் சேர்க்கை நிகழவுள்ளது. இதன் முக்கியத்துவம் குறித்தும், பலன்பெறும் ராசிகள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.

ராகு சுக்கிரன் சேர்க்கை 2026
ராகு மற்றும் சுக்கிரன் சேர்க்கை என்பது ஜோதிட ரீதியாக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த கிரகச் சேர்க்கை சில ராசிகளுக்கு சிறப்பான பலன்களையும், சில ராசிகளுக்கு சவால்களையும் கொடுக்கலாம்.
ராகு பகவான் மே 2025 முதல் ஜனவரி 2027 வரை கும்ப ராசியில் சஞ்சரிப்பார். இந்த காலகட்டத்தில் சுக்கிர பகவானும் ராகுவுடன் இணையும் பொழுது அதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.
ராகு சுக்கிரன் சேர்க்கையின் முக்கியத்துவம்
சுக்கிர பகவான் காதல், செல்வம், ஆடம்பரம், சுகபோகங்கள், ஆடை அணிகலன்கள் ஆகியவற்றின் காரகராவார். ராகு பகவான் ஆசை, எதிர்பாராத நிகழ்வுகள், மாயை, எல்லை மீறிய சிந்தனை ஆகியவற்றின் காரகராவார்.
இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை நிகழும் பொழுது சுகபோகங்கள், ஆடம்பர வாழ்க்கை மீதான ஆசை அதிகரிக்கும். எதிர்பாராத வழிகளில் பண வரவு, முதலீடுகளில் அதிக லாபம் கிடைக்கும். ஆடம்பர செலவுகள் அதிகமாகும். சுக்கிரன் ராகு சேர்க்கையால் அதிகபட்ச நன்மைகளை பெறப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்கு 11 வது வீடான லாப ஸ்தானத்தில் இந்த சேர்க்கை நிகழவுள்ளது. எனவே மேஷ ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டு நடக்கும் ராகு சுக்கிரன் சேர்க்கும்போது அனைத்து வழிகளிலும் லாபத்தைப் பெறுவீர்கள். உங்களின் விருப்பங்கள், கனவுகள் நிறைவேறுவதற்கான வழிகள் பிறக்கும். நிதி நிலைமை மேம்படும். முதலீடுகளில் நல்ல வருமானம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் மூத்த சகோதரர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். சமூகத்தில் கௌரவம் கூடும். நீண்ட நாள் ஆசைகள் மற்றும் கனவுகள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
துலாம்
துலாம் ராசிக்கு இந்த சேர்க்கையானது பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் நிகழ்வுள்ளது. சுக்கிரன் உங்கள் ராசிநாதன் என்பதால் இந்த காலகட்டம் உங்களுக்கு சிறப்பான பலன்களைக் கொடுக்கும். காதல் உறவுகள் இனிமையாகவும், தீவிரமானதாகவும் மாறும். பொழுதுபோக்கு மற்றும் கலைத்துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். திடீர் முதலீடுகள் லாபத்தை அளிக்கும். சகோதரர் வழி உறவுகள் வலுப்படும். பூர்வீக சொத்துக்களில் உள்ள தகராறுகள் தீர்ந்து, சொத்துக்கள் கைக்கு வரும்.
கும்பம்
கும்ப ராசிக்கு சுக்கிரன் மற்றும் ராகு சேர்க்கை ஜென்ம ராசியான ஒன்றாம் வீட்டில் நிகழ்கிறது. ராகு ஏற்கனவே உங்கள் ராசியில் இருப்பதால் சுக்கிரனின் வருகை பெரிய மாற்றத்தை தரவுள்ளது. உங்கள் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். தோற்றம் மற்றும் பேச்சால் மற்றவர்களை ஈர்ப்பீர்கள். ஆடம்பர வாழ்க்கை, புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாராத பண வரவு அல்லது அதிர்ஷ்டம் கூடும். ராகுவின் ஆதிக்கத்தால் அதிக பேராசை, அகங்காரம் மற்றும் உறவுகளில் தவறான முடிவுகளை எடுக்க நேரிடலாம். எனவே கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்கு சுக்கிரன் மற்றும் ராகு சேர்க்கை மூன்றாவது வீடான தைரிய ஸ்தானத்தில் நடக்க இருக்கிறது. இந்த இடமானது சகோதரர்களை குறிக்கும் வீடாகவும் இருக்கிறது. தனுசு ராசிக்காரர்கள் இந்த சேர்க்கையால் முயற்சிகளில் வெற்றியைக் காண்பீர்கள். உங்களின் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குழப்பமான முடிவுகளில் இருந்து விடுபட்டு தைரியமான முடிவுகளை எடுத்து, வெற்றியைக் காண்பீர்கள். எழுத்து, ஊடகம், விளம்பரம் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு இது சாதகமான காலமாகும்.
கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் இந்த சேர்க்கை நடைபெற இருப்பதால் கடக ராசியினர் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். திடீர் நிதி இழப்புகள், உடல்நலக் கோளாறுகள் அல்லது உறவுகளில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
விருச்சிகம்: விருச்சக ராசிக்காரர்களுக்கு இந்த சேர்க்கை நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் ஏற்படுகிறது. இந்த வீடு தாய், வீடு, வாகனம் போன்ற இடங்களை குறிக்கும் என்பதால் இந்த விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். வீடு, வாகனம் தொடர்பான விஷயங்களில் குழப்பங்கள், தாயாரின் ஆரோக்கியத்தில் குறைபாடுகள் போன்றவற்றால் மன அமைதியின்மை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

