- Home
- Astrology
- Astrology: டிசம்பரில் நடக்கும் 6 கிரக பெயர்ச்சிகள்.! அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 4 ராசிகள்.! உங்க ராசி இருக்கா?
Astrology: டிசம்பரில் நடக்கும் 6 கிரக பெயர்ச்சிகள்.! அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 4 ராசிகள்.! உங்க ராசி இருக்கா?
December month Rasi Palangal: டிசம்பர் 2025 ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் நடக்க உள்ள கிரக பெயர்ச்சிகள் பற்றியும், அதனால் பலன் பெறும் ராசிகள் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.

டிசம்பர் மாத ராசி பலன்கள்
ஜோதிடத்தின்படி ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு மாதம் பிறக்கும் பொழுதும் கிரக நிலைகளின் அடிப்படையில் அந்த மாதத்தின் ஜோதிட பலன்கள் தீர்மானிக்கப்படுகின்றன.
அந்த வகையில் டிசம்பர் மாதத்தில் பல கிரகங்கள் தங்களுடைய நிலையை மாற்ற இருக்கின்றன. குறிப்பாக குரு பகவானின் சொந்த ராசியான தனுசு ராசியில் நான்கு சுப கிரகங்கள் ஒன்றிணைகின்றன. இது அரிய சதுர்கிரக யோகத்தை உருவாக்குகிறது.
டிசம்பர் மாத கிரக பெயர்ச்சிகள்
டிசம்பர் 7ஆம் தேதி செவ்வாய் பகவானும், டிசம்பர் 16ஆம் தேதி சூரிய பகவானும், டிசம்பர் 20ஆம் தேதி சுக்கிரனும், டிசம்பர் 29ஆம் தேதி புதனும் தனுசு ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளனர். டிசம்பர் 28ஆம் தேதி சுக்கிரன் மற்றும் சனி இருவரும் கும்ப ராசியில் ஒன்றிணைகின்றனர்.
இந்த சுப கிரகங்களின் சேர்க்கை காரணமாக டிசம்பர் மாதம் முழுவதும் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் பல வழிகளில் சிறப்பானதாக அமையும். உங்கள் அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் வெற்றியைத் தரும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். நிதிநிலை மேம்படும். பணம் ஈட்டுவதற்கான புதிய வழிகள் பிறக்கும். பங்குச் சந்தை முதலீடுகள் லாபகரமானதாக அமையும்.
பணியிடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். மூத்த அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். மாதத்தின் பிற்பகுதியில் ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே கவனத்துடன் இருக்க வேண்டும். ஒவ்வொரு சனிக்கிழமையும் சனி ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வது நன்மை தரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் சாதகமான பலன்களை அளிக்கும். மாதத்தின் முற்பகுதியில் வருமானம் அதிகரிக்கும். சூரியன் 11 ஆம் வீட்டில் சஞ்சரித்த பிறகு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை மாறுதலுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய யோசனைகள் தொழில் வாழ்க்கையில் முன்னேற்ற பாதையை திறக்கும். மாதத்தின் இறுதியில் உங்கள் ராசியில் சுக்கிரன் மற்றும் சனியின் சேர்க்கை நடைபெறுவதால் செல்வம், செழிப்பு, அதிர்ஷ்டம் ஆகியவை கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியில் சதுர்கிரக யோகம் உருவாவதன் காரணமாக தனுசு ராசிக்காரர்கள் பல வழிகளில் நன்மையை அடைவீர்கள். குரு பகவானின் சொந்த வீட்டில் நான்கு கிரகங்கள் இணைவதன் காரணமாக உண்டாகும் யோகம் புதிய அனுபவங்கள், பயணங்கள், கல்வி ஆகிய அனைத்திலும் வளர்ச்சியை கொண்டு வரும். உங்களின் பொருளாதார நிலை மேம்படும். டிசம்பர் மாதம் நிதி ரீதியாக நல்ல மாதமாக இருக்கும். பல வழிகளில் சிக்கிய பணத்தை நீங்கள் திரும்பப் பெறுவீர்கள். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உருவாகும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கைக்கும் இடையே இணக்கமான சமநிலையை அனுபவிப்பீர்கள். சுக்கிரனின் செல்வாக்கு உங்கள் உறவுகளை வலுப்படுத்தும். நீண்ட கால முதலீடுகளை திட்டமிடுவதற்கு ஏற்ற காலமாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கலாம். பெரிய நிறுவனத்தில் இருந்து வேலை கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல செய்திகள் கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன்கள் நிச்சயம் கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

