MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • கார்த்திகை மாத ராசி பலன், பரிகாரங்கள் – 9 கிரகங்களின் சப்போர்ட் கிடைக்குமா? யாருக்கெல்லாம் பண மூட்டை வரும்?

கார்த்திகை மாத ராசி பலன், பரிகாரங்கள் – 9 கிரகங்களின் சப்போர்ட் கிடைக்குமா? யாருக்கெல்லாம் பண மூட்டை வரும்?

Karthigai Matha Rasi Palan in Tamil : சிறப்பு வாய்ந்த கார்த்திகை மாதம் எந்தெந்த ராசிகளுக்கு என்ன மாதிரியான பலன்களை அள்ளி தர போகிறது என்பதை இந்த பதிவு ஆராய்கிறது…!

7 Min read
Rsiva kumar
Published : Nov 14 2024, 07:00 PM IST| Updated : Nov 15 2024, 09:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
114
கார்த்திகை மாத ராசி பலன்கள், Karthigai Matha Rasi Palan Tamil

கார்த்திகை மாத ராசி பலன்கள், Karthigai Matha Rasi Palan Tamil

Karthigai Matha Rasi Palan in Tamil : கார்த்திகை மாதம் ஐயப்பன் மற்றும் முருகனுக்கு உகந்த மாதம். இந்த மாதம் பக்தர்கள் மாலை அணிவது வழக்கம். திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்படும். அப்படிப்பட்ட இந்த கார்த்திகை மாதங்களில் யாருக்கெல்லாம் நன்மைகள் நடக்க போகிறது, எந்த ராசியினர் கவனமாக இருக்க வேண்டும்? யாருக்கு பண வரவு அதிகமாக இருக்கும் என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

விருச்சிகத்தில் சூரியன் – காட்டாறு போல பட்டய கிளப்பும் ராசிக்காரங்க யார் தெரியுமா? கதவ தட்டும் அதிர்ஷ்டம்!
 

214
12 ராசிகளுக்கான கார்த்திகை மாத ராசி பலன், Karthigai Month Rasi Palan

12 ராசிகளுக்கான கார்த்திகை மாத ராசி பலன், Karthigai Month Rasi Palan

மேஷம் ராசி:

எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். யாருக்கும் வாக்கு கொடுக்க கூடாது. கொடுத்த வாக்கை உங்களால் காப்பாற்ற முடியாது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நிதானமாக இருக்க வேண்டும். இந்த மாதங்களில் ஆடம்பரம் தேவையில்லை. பொறுமை ரொம்பவே அவசியம். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். வண்டி, வாகனம், வீடு வாங்கும் யோகம் தேடி வரும். எதிரிகள் உங்களை விட்டு விலகி செல்வார்கள்.

2025 சனி பெயர்ச்சி: பட்டி டிங்கரிங் செய்ய போகும் சனி; மேஷ ராசிக்கு ஏழரை சனி ஆரம்பம்; என்னென்ன பலன் கிடைக்கும்?

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண முயற்சிகள் கை கூடும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். மருத்துவம், இராணுவம், தீயணைப்பு துறையில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்ட வேண்டும். போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைத்து பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்தில் சில பிரச்சனைகள் வந்து செல்லும்.

பரிகாரம்:

வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

சனி பெயர்ச்சி 2024; பாவம் பாக்கும் சனி – பட்ட கஷ்டத்துக்கு பலன்; யாரெல்லாம் சல்யூட் அடிக்கணும் தெரியுமா?

314
2024 Karthigai Rasi Palan Tamil, கார்த்திகை ராசி பலன் பரிகாரம்

2024 Karthigai Rasi Palan Tamil, கார்த்திகை ராசி பலன் பரிகாரம்

ரிஷபம் ராசி:

கார்த்திகை மாதத்தை பொறுத்த வரையில் ரிஷப ராசியினருக்கு முன்னேற்றமான மாதமாக இருக்கும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். தொழில் மற்றும் பிஸினஸ் செய்பவர்களுக்கு வெற்றி வீடு தேடி வரும். குடும்பத்தில் வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்களின் உதவி கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டத்தால் பண வரவு உண்டாகும்.

அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். வெளிநாட்டு யோகம் தேடி வரும். செலவுகளும் அதிகரிக்கும். சிக்கமாக இருப்பது அவசியம். மாணவர்கள் படிப்பில் கஷ்டப்பட்டு படித்தால் அதற்கான பலன் கிடைக்கும்.

பரிகாரம்:

சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயர் வழிபாடு செய்ய வேண்டும். அவருக்கு துளசி மாலை சாற்றி வழிபாடு செய்ய நல்லதே நடக்கும். மகாலட்சுமியையும் வழிபாடு செய்ய வேண்டும்.

2025 சனி பெயர்ச்சி பலன்கள்: 12 ராசிகளுக்கும் எப்படி?

414
Karthigai Rasi Palan, கார்த்திகையில் அதிர்ஷ்டசாலி ராசி, Karthigai 2024 Matha Rasi Palan

Karthigai Rasi Palan, கார்த்திகையில் அதிர்ஷ்டசாலி ராசி, Karthigai 2024 Matha Rasi Palan

மிதுனம் ராசி:

மிதுன ராசியைப் பொறுத்த வரையில் கார்த்திகை மாதத்தில் ஏற்ற இறக்கம் நிறைந்த மாதமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். அலுவலகத்தில் இட மாற்றம் கிடைக்க பெறலாம். எதிரிகளின் தொல்லை இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். கணவன் மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.

2025ல் சனி பெயர்ச்சியால் எந்த ராசிக்கு கர்ம சனி ஏற்படும்? ஜாலியா இருக்கலாமா? சனி ஆப்பு வைக்குமா?

சுப செலவுகள் கூடும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கடன் கட்டுக்குள் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க பெறலாம். ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை உண்டு. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.

பரிகாரம்:

கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும். முருகன் வழிபாடு, ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்ள எல்லாமே நல்லதாக நடக்கும்.

மிதுன ராசிக்கான 2025 புத்தாண்டு ராசி பலன்: வெளிநாட்டு யோகம் தேடி வரும்; 2025ல் அதிர்ஷ்டசாலி ராசி நீங்களா?
 

514
Karthikai Month Rasipalan, டாப் 5 அதிர்ஷ்டசாலி ராசிகள், தனுசு ராசி கார்த்திகை மாத ராசி பலன்

Karthikai Month Rasipalan, டாப் 5 அதிர்ஷ்டசாலி ராசிகள், தனுசு ராசி கார்த்திகை மாத ராசி பலன்

கடகம் ராசி:

கார்த்திகை மாதத்தை பொறுத்த வரையில் கடக ராசிக்கு மந்தமான மாதமாக இருக்கும். வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றமும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். குழந்தைகள் மூலமாக சந்தோஷம் உண்டாகும். அலுவலகத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி வரும்.

தொழில், வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். பண வரவும் இருக்கும், செலவுகளும் அதிகரிக்கும். சிக்கனமாக இருப்பது அவசியம். உங்களுக்கு உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி படிப்பது அவசியம்.

பரிகாரம்:

புதன் கிழமை தோறும் பெருமாள் வழிபாடு செய்ய வேண்டும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

2025 புத்தாண்டு கடக ராசி பலன் – உங்களுக்கான ஆண்டா? ராஜயோகம் அமையுமா? ஜாப், பிஸினஸ் எப்படி?

614
கார்த்திகை மாத ராசி பலன் 2024, Astrology, Horoscope, Zodiac Signs

கார்த்திகை மாத ராசி பலன் 2024, Astrology, Horoscope, Zodiac Signs

சிம்மம் ராசி:

சிம்ம ராசிக்கு பண வரவு இருந்து கொண்டே இருக்கும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். பொன், பொருள், ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க பெறுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவும் கிடைக்கும். படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்களின் பாராட்டு கிடைக்கும். வீண் பழி பாவங்களுக்கு ஆளாவீர்கள். எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

பரிகாரம்:

ஒவ்வொரு திங்கள் கிழமையும் சிவபெருமானுக்கு வில்வம் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

714
Top 5 Zodiac Signs in Karthigai, கார்த்திகை 2024 ராசி பலன்

Top 5 Zodiac Signs in Karthigai, கார்த்திகை 2024 ராசி பலன்

கன்னி ராசி:

கார்த்திகை மாதம் கன்னி ராசிக்கு ஓரளவு சிறப்பான மாதமாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு அனுகூலமான மாதம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். அரசு வழியில் ஆதாயம் கிடைக்க பெறுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆலோசனை கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க பெறுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வண்டி, வாகனம், வீடு வாங்கும் யோகம் உண்டாகும். வெளிநாட்டு யோகமும் தேடி வரும். சிறு சிறு தடைகள் ஏற்படும்.

பரிகாரம்:

செவ்வாய்க்கிழமை தோறு முருகப் பெருமானுக்கு செவ்வரளி மாலை சாற்றி வழிபாடு செய்ய நன்மை உண்டாகும்.

12 ராசிகளுக்கான 2025 புத்தாண்டு பலன் - ஷார்ட் அண்ட் ஸ்வீட் ஒன் லைன் பலன் - யாருக்கு நல்லது நடக்கும்?

814
Tamil Matha Rasi Palan Tamil, Sagittarius Karthigai Rasi Palan

Tamil Matha Rasi Palan Tamil, Sagittarius Karthigai Rasi Palan

துலாம் ராசி:

துலாம் ராசிக்காரர்கள் இந்த மாதம் முழுவதும் பொறுமையாக இருப்பது அவசியம். குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்படக் கூடும் என்பதால் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. பொன், பொருள், ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை உண்டு. கணவன் மற்றும் மனைவிக்கிடையில் காதல் வெளிப்படும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நன்மை அளிக்கும். மன அழுத்தம் ஏற்படக் கூடும். அலுவலகத்தில் கடினமாக உழைக்க வேண்டி வரும். அரசு வழி ஆதாயம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். படிப்பில் ஆர்வம் கூடும். மாணவர்களுக்கு வெற்றிகரமான மாதம்.

பரிகாரம்:

நாள்தோறும் விநாயகப் பெருமானை அருகம்புல் மாலை சாற்றி வழிபாடு செய்வது நன்மை அளிக்கும்.

ராகு கேது, சனி, குரு சஞ்சாரம்: 2025 புத்தாண்டு 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், ராஜ வாழ்க்கை கொடுக்குமா?

914
Karthigai Matha Rasi Palan Tamil, கார்த்திகை ராசி பலன் பரிகாரம்

Karthigai Matha Rasi Palan Tamil, கார்த்திகை ராசி பலன் பரிகாரம்

விருச்சிகம் ராசி:

விருச்சிக ராசியைப் பொறுத்த வரையில் கார்த்திகை மாதம் யோகமான மாதம். ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள். வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பங்கு வர்த்தகத்தில் லாபம் வரும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

பரிகாரம்:

குரு பகவானுக்கு உகந்த மஞ்சள் நிற மலர் கொண்டு வழிபாடு செய்ய வேண்டும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்ள வேண்டும்.

விருச்சிக ராசிக்கான 2025 புத்தாண்டு பலன் – Love மேரேஜ் நடக்குமா? லச்சாதிபதி யோகம் இருக்கா? வருமானம், வேலை?

1014
Sagittarius Karthigai Rasi Palan, கார்த்திகை மாத ராசி பலன்கள்

Sagittarius Karthigai Rasi Palan, கார்த்திகை மாத ராசி பலன்கள்

தனுசு ராசி:

ஒருவேளை சாப்பாடு சாப்பிடவே கஷ்டப்படும் தனுசு ராசிக்கு கார்த்திகை மாதம் சிறப்பான பலனை கொடுக்க போகிறது. நவக்கிரகங்களே பரிதாப்படும் அளவிற்கு உங்களுக்கு கஷ்ட காலம் இருந்துள்ளது. இதுவரையில் எதில் எல்லாம் கஷ்டங்களை அனுபவித்தீர்களோ அதிலெல்லாம் கூடுதலான பலன் கிடைக்க போகிறது. பணப்புழக்கம் அதிகரிக்கும். வாழ்க்கையில் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு வழி பிறக்கும்.

கடன் மேல் கடன் வாங்கிய தனுசு ராசியினருக்கு கடன் அடைபடும் சூழல் உருவாகும். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. திருமணமான தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். பொன், பொருள், ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை உண்டு. ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

பரிகாரம்:

வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும். நாள்தோறும் விநாயகப் பெருமானை வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும்.

தனுசு ராசிக்கான 2025 புத்தாண்டு பலன் – ஒரு காலத்துல ஓஹோனு வாழ்ந்த ராசி - வேலை போகுமா? சம்பளம் கூடுமா?

1114
Karthigai 2024 Matha Rasi Palan, 12 ராசிகளுக்கான கார்த்திகை மாத ராசி பலன்

Karthigai 2024 Matha Rasi Palan, 12 ராசிகளுக்கான கார்த்திகை மாத ராசி பலன்

மகரம் ராசி:

கார்த்திகை மாதத்தை பொறுத்த வரையில் மகர ராசியினருக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பண வரவு இருக்கும். கணவன் மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். வாழ்க்கை முன்னேற்ற பாதையில் செல்லும்.

பெண்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்களின் பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

பரிகாரம்:

கால பைரவர் வழிபாடு செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெமானுக்கு செவ்வரளி மாலை சாற்றி வழிபட வேண்டும்.

மகர ராசிக்கான 2025 புத்தாண்டு பலன் – விடிவுகாலம் பிறக்குமா? முடிய போகுது ஏழரை, அள்ளி கொடுக்கும் சனி!

1214
டாப் 5 அதிர்ஷ்டசாலி ராசிகள், Top 5 Zodiac Signs in Karthigai

டாப் 5 அதிர்ஷ்டசாலி ராசிகள், Top 5 Zodiac Signs in Karthigai

கும்பம் ராசி:

கும்பம் ராசியினருக்கு ஏராளமான நன்மைகளை கொண்ட மாதமாக கார்த்திகை மாதம் இருக்கும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். பணவரவு அதிகமாகவே இருக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிரிகளின் தொல்லை விலகும். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பது நல்லது.

பரிகாரம்:

செவ்வாய்க்கிழமைகளில் முருகன் வழிபாடும், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை வழிபாடும் செய்ய வேண்டும்.

சனி அருளால் 2025ல் உச்சத்துக்கு செல்லும் ராசிக்காரங்க யாரெல்லாம்? ஜாக்பாட், வசதி வாய்ப்பு எல்லாமே இருக்குமா?
 

1314
Karthikai Month Rasipalan, கார்த்திகை ராசி பலன் பரிகாரம்

Karthikai Month Rasipalan, கார்த்திகை ராசி பலன் பரிகாரம்

மீனம் ராசி:

கார்த்திகை மாதத்தை பொறுத்த வரையில் மீன ராசியினருக்கு எல்லா வேலையிலும் வெற்றி உண்டாகும். ஆனால், தடை தாமதங்களுக்கு பிறகு தான் வெற்றி கிடைக்கும். பொறுமை காப்பது நல்லது. குடும்பத்தில் மனைவியிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. அடிக்கடி பிரச்சனை வரக் கூடும். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். யாருடைய ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்காது. தொழில், வியாபாரம் மந்தமாக இருக்கும். கவலைப்பட தேவையில்லை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

பரிகாரம்:

ஞாயிறுதோறும் சூரியனுக்கு செம்பருத்தி மாலை சாற்றி வழிபட வேண்டும்.

1414
Karthigai Special Days, Astrology, Zodiac Signs, Horoscope

Karthigai Special Days, Astrology, Zodiac Signs, Horoscope

கார்த்திகை மாத சிறப்புகள்:

நவம்பர் 16 – சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை நடை திறப்பு

நவம்பர் 18 – சங்கடஹர சதுர்த்தி விரதம்

நவம்பர் 22 – அஷ்டமி, கால பைரவர் பூஜை

நவம்பர் 26 – ஏகாதசி விரதம், வைதரணி விரதம்

நவம்பர் 28- பிரதோஷம்

நவம்பர் 29 – மாத சிவராத்திரி

டிசம்பர் 1- அமாவாசை

டிசம்பர் 2 – சோமவார விரதம், சந்திர தரிசனம்,

டிசம்பர் 5 – சதுர்த்தி விரதம்

டிசம்பர் 6 – திருவோண விரதம், சஷ்டி விரதம்

டிசம்பர் 7 – சஷ்டி

டிசம்பர் 11 – ஏகாதசி விரதம்

டிசம்பர் 13 – பிரதோஷம், பரணி தீபம், கார்த்திகை விரதம், திருக்கார்த்திகை தீபம்.

டிசம்பர் 15 – பௌர்ணமி விரதம், தனுசு சங்கராந்தி

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஜோதிடம்
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved