2025ல் சனி பெயர்ச்சியால் எந்த ராசிக்கு கர்ம சனி ஏற்படும்? ஜாலியா இருக்கலாமா? சனி ஆப்பு வைக்குமா?
Karma Sani Palan 2025 in Tamil: 2025 மார்ச் 19ல் சனி பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் எந்தெந்த ராசிக்கு கர்ம சனி உண்டாகிறது, அதனால் என்ன நன்மைகள் ஏற்படும் என்பது பற்றி பார்க்கலாம்
Mithuna Rasi Karma Sani Palan 2025 in Tamil, Astrology
Karma Sani Palan 2025 in Tamil: சனி பகவானை நீதிமான் என்றும் ஆயுள் காரகன் என்றும் அழைப்பார்கள். தப்பு தண்டா செய்பவர்களை தண்டிக்க கூடிய வேலையை செய்பவர் சனி பகவான். ஜாதகத்தில் கர்ம வினையால் பாதிக்கப்பட்ட ராசியினருக்கு அவர்கள் செய்த கர்ம வினையின் பலன்களை முழுமையாக அனுபவிக்க செய்பவர். சனி பகவானை மந்தக்காரகன் என்றும் சொல்வார்கள்.
Sani Transit 2025, Horoscope, Sani Peyarchi
ராசியில் அதிக காலம் சஞ்சரிப்பவர் சனி பகவான் மட்டுமே. இரண்டரை ஆண்டுகாலம் ஒரு ராசியில் நீடிப்பார். ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் வீதம் 12 ராசிகளையும் சுற்றி முடிக்க 30 ஆண்டு காலமாகும். இதில், ஏழரை சனி, அஷ்டமத்து சனி மற்றும் கண்ட சனி என்று சஞ்சாரம் செய்வார். இந்த இரண்டரை ஆண்டுகாலம் சனி பகவான் தான் நின்ற ராசியிலிருந்து சுப மற்றும் அசுப பலன்களை கொடுப்பார். இதன் காரணமாக ஒவ்வொரு ராசியினரும் ஏழரை சனியில் வாழ்க்கையில் கஷ்ட நஷ்டங்களை சந்திக்கும் நிலை ஏற்படும்.
Mithuna Rasi Karma Sani Palan 2025 in Tamil, Sani Transti 2025
சனி பெயர்ச்சி 2025:
2025 ஆம் ஆண்டு சனி பெயர்ச்சியானது வரும் மார்ச் 19ஆம் தேதி கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறது. இந்த பெயர்ச்சி மேஷ ராசிக்கு ஏழரை சனியாக ஆரம்பமாகிறது. அதோடு முதல் இரண்டரை வருடம் விரையச் சனியாக மாறுகிறது. மீன ராசிக்கு இதுவரையில் நடைபெற்று வந்த விரையச் சனி அடுத்த இரண்டரை காலம் ஜென்ம சனியாக மாறுகிறது.
2025 Sani Peyarchi, Saturn Transit Palan in Tamil
2025 சனி பெயர்ச்சி:
கும்ப ராசிக்கு இரண்டரை ஆண்டுகள் பாத சனி ஆரம்பமாகிறது. மேலும், இதுவரையில் ஏழரை சனியால் அவதிப்பட்டு வந்த மகர ராசிக்கு முழுமையாக ஏழரை விலகி விடிவுகாலம் பிறக்க போகிறது. 2025 சனி பெயர்ச்சி மிதுன ராசிக்கு கர்ம சனியாக வருகிறது. கர்ம சனி என்றால் என்ன, அதனால் ஏற்படும் நன்மை தீமைகளை இந்தப் பதிவு அலசி ஆராய்கிறது.
Zodiac Signs, Astrology, Mithuna Rasi Karma Sani Palan 2025 in Tamil
கர்ம சனி:
சனி பகவான் ஜீவ காரகன் மற்றும் கர்ம அதிபதி. ஆதலால் கர்மாவை நிர்ணயிப்பதில் சனி பகவானுக்கும் முக்கிய பங்கு உண்டு. ஒரு ராசிக்கு 10ஆம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்வது கர்ம சனி என்று அழைக்கப்படும். 10ஆவது இடம் என்பது கர்ம ஸ்தானம். இந்த சனி பெயர்ச்சியில் மிதுன ராசிக்கு சனி 10ஆவது இடத்திற்கு வருவதால் கர்ம சனியாக மாறுகிறது.
Karma Sani Palan Tamil, Astrology, Zodiac Signs, Sani Peyarchi 2025
கர்ம சனி பலன்கள்:
கர்ம சனியைப் பொறுத்த வரையில் நன்மைகள் பெரும்பாலும் நடக்காது. அதிகளவில் தீமைகள் மட்டுமே கர்ம சனி கொடுக்கும். தடை, தாமதங்களைத் தாண்டி தான் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பதே இருக்கும். வெற்றியும் அப்படித்தான். தடை தாமதங்களுக்கு பிறகு தான் நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிக்கும் வெற்றி கிடைக்கும். அடிமையாக இருக்க கூடிய சூழல் கூட உருவாகலாம். திடீரென்று வேலை போகும்.
உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். ஜீவனத்தில் பிரச்சனை கூட வரலாம். பொருளாதார பற்றாக்குறை ஏற்படலாம். நிதி நெருக்கடியால் கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் குழப்பம். பிரச்சனை மேல் பிரச்சனை வரலாம். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கணவன் மனைவிக்கிடையில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
Sani Peyarchi 2025 Palan, Saturn Transit 2025, Astrology
கர்ம சனி பரிகாரம்:
ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வடமாலை சாற்றி வழிபாடு செய்வது நல்லது.
ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 8 மணி முதல் 9 மணிக்குள்ளாக அரச மரத்தடியில் இரும்பு விளக்கில் நல்லெண்ணெய் தீபம் வழிபட்டு வர எல்லா நன்மையும் உண்டாகும்.
சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபாடு செய்யலாம்.
நாள்தோறும் காகத்திற்கு சாதம் வைக்கலாம். நல்லெண்ணெய் மற்றும் கருப்பு எண்ணெய் கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி காகத்திற்கு வைக்கலாம்.