Astrology

2025 சனி பெயர்ச்சி பலன் – 12 ராசிக்காரர்களுக்கு எப்படி?

Image credits: freepik

2025 சனி பெயர்ச்சி பலன் – 12 ராசிக்காரர்களுக்கு எப்படி?

2025ஆம் ஆண்டில் சனி பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. மார்ச் 29 ஆம் தேதி மீனத்திற்கு சனி பெயர்ச்சி ஆகிறார். எந்தெந்த ராசியினருக்கு நல்ல பலன் என்று பார்க்கலாம்.

Image credits: freepik

மேஷ ராசிக்கு சனி பெயர்ச்சி எப்படி?

மேஷ ராசிக்கு ஏழரை சனி ஆரம்பமாகிறது. இது முதல் இரண்டரை ஆண்டுகள் என்பதால், விரையச் சனி நடைபெற போகிறது. இது 70 சதவிகிதம் நல்ல பலன் கொடுக்கும்.

Image credits: freepik

ரிஷப ராசிக்கு சனி பெயர்ச்சி பலன்

ரிஷப ராசிக்கு லாப சனி. எல்லா வகையிலும் நன்மை தேடி வரும். தொழில், வியாபாரம், வேலை என்று கொடி கட்டி பறக்கும் காலம் வந்து விட்டது. 95 சதவிகிதம் நல்ல பலன் கிடைக்கும்.

Image credits: freepik

மிதுனத்திற்கு சனி பெயர்ச்சி 2025 எப்படி இருக்கு

மிதுன ராசிக்கு கர்ம சனி நடக்கும். இது 80 சதவிகிதம் நன்மை அளிக்கும். தடை, தாமதங்களைக் கடந்து வெற்றி பெறுவீர்கள்.

Image credits: freepik

கடக ராசிக்கு சனி பெயர்ச்சி என்ன பலன் கொடுக்கும்?

கடக ராசிக்கு இந்த சனி பெயர்ச்சி பாக்கிய சனியாக வருகிறது. இது உங்களுக்கு 90 சதவிகிதம் நன்மை அளிக்கும். ரிஷபத்திற்கு பிறகு 2ஆவது அதிர்ஷ்டசாலி நீங்க தான்.

Image credits: freepik

சிம்மத்திற்கு சனி பெயர்ச்சி நன்மை செய்யுமா?

சிம்ம ராசிக்கு அஷ்டம சனியாக இந்த சனி பெயர்ச்சி வருகிறது. பண விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். 76 சதவிகிதம் உங்களுக்கு நன்மை அளிக்கும்.

Image credits: freepik

கன்னி ராசிக்கு சனி பெயர்ச்சி 2025 எப்படி இருக்கும்?

கன்னி ராசிக்கு சனி பெயர்ச்சி கண்டக சனியாக மாறுகிறது. யோசிக்கும் பக்குவத்தை கொடுப்பார். எதையும் யோசித்து செய்தால் நன்மை என்று புரிய வைப்பார். 70 சதவிகிதம் நன்மை அளிக்கும்.

Image credits: freepik

துலாம் ராசிக்கு 2025 சனி பெயர்ச்சி பலன்

துலாம் ராசிக்கு ரோக சனியாக சனி பெயர்ச்சி வருகிறது. இது 95 சதவிகிதம் நன்மை அளிக்கும். அதிக நன்மைகளை பெறக் கூடிய ராசிகளில் நீங்களும் ஒன்று.

Image credits: freepik

விருச்சிகம் ராசிக்கு 2025 சனி பெயர்ச்சி பலன்

விருச்சிக ராசிக்கு பஞ்சம சனியாக சனி பெயர்ச்சி 2025 வருகிறது. இது 91 சதவிகிதம் நன்மை அளிக்கும்.

Image credits: freepik

தனுசு ராசிக்கு சனி பெயர்ச்சி பலன் 2025

ஏழரை முடிந்து நல்லது நடக்கவில்லை என்று கவலைப்படும் தனுசு ராசிக்கு இது அஷ்டம சனி. உங்களுக்கு 80 சதவிகிதம் நன்மை அளிக்கும்.

Image credits: freepik

மகரம் ராசி ஏழரை சனி முடிந்தது

ஏழரை முடிந்து நிம்மதி பெருமூச்சு விடும் மகர ராசிக்கு இது சகாய சனி. பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைக்கும் காலம். 80 சதவிகிதம் நன்மை உண்டாகும்.

Image credits: freepik

கும்பம் ராசி பாத சனி காலம்

கும்பம் ராசிக்கு பாத சனி. ஊர் விட்டு ஊரு செல்லும் நிலை. வெளியூர், வெளிநாடு செல்வீர்கள். 65 சதவிகிதம் நன்மை உண்டாகும்.

Image credits: freepik

மீன ராசிக்கு ஜென்ம சனி காலம்

ஏழரை சனியின் பிடியில் இருக்கும் மீனம் ராசிக்கு இது ஜென்ம சனி காலம். ஒவ்வொரு அடியையும் மெது மெதுவா எடுத்து வைக்க வேண்டும். 50 சதவிகிதம் நன்மை நடக்கும்.

Image credits: freepik

தீபாவளி 2024 : லட்சுமி பூஜையின் போது 'இந்த' 1 பூ வச்சி வழிபடுங்க!

தீபாவளிக்கு உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: 5 ராசிகளுக்கு ஜாக்பாட்!

2025 ராசிபலன்: 3 ராசிகளுக்கு வேலை, காதல் வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

அக்டோபர் 27, இன்று நீங்க ஒரு அன்லக்கி - பணம் பறிபோகும்!