Astrology

அக்டோபர் 24 குரு புஷ்யம், இவற்றை வாங்காதீர்கள்

அக்டோபர் 24 குரு புஷ்யம்

Guru Pushya Yoga 2024: அக். 24 ஆம் தேதி குரு புஷ்ய யோகம் வருகிறது. குரு புஷ்யத்தில் பொருட்கள் வாங்குவதற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. சில பொருட்களை இந்த நாளில் வாங்கக் கூடாது.

கண்ணாடிப் பொருட்களை வாங்க வேண்டாம்

கண்ணாடி ராகு கிரகத்துடன் தொடர்புடையது. சுப நிகழ்வுகளில் கண்ணாடிப் பொருட்களை வாங்குவது நல்லதல்ல, இதனால் வீட்டில் ராகுவின் தாக்கம் அதிகரித்து, எதிர்மறை ஆற்றல் பரவும்.

ஒருமுறை பயன்படுத்தும் பொருட்களை வாங்க வேண்டாம்

அக்டோபர் 24 ஆம் தேதி குரு புஷ்ய யோகத்தில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பொருட்களை வாங்க வேண்டாம். இதுபோன்ற பொருட்களை வாங்குவது துரதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.

கூர்மையான பொருட்களை வாங்க வேண்டாம்

அக். 24 ஆம் தேதி குரு புஷ்ய யோகத்தில் கூர்மையான பொருட்கள் கத்தி, கத்தரிக்கோல், ஊசி போன்றவற்றை வாங்க வேண்டாம். ஜோதிட சாஸ்திரத்தின் படி, சுப நிகழ்வுகளில் இவற்றை வாங்குவது நல்லதல்ல.

இரும்புப் பொருட்களை வாங்க வேண்டாம்

குரு புஷ்ய யோகத்தில் இரும்புப் பொருட்களை வாங்குவதைத் தவிருங்கள். ஏனெனில் இரும்பின் காரக கிரகம் சனி. சனி தொடர்பான பொருட்களை வாங்குவது நல்லதல்ல. இது பிரச்சனைகளை அதிகரிக்கும்.

கருப்பு நிற ஆடைகளை வாங்க வேண்டாம்

குரு புஷ்ய யோகத்தில் துணிகள் வாங்குவது சுபம். ஆனால் இந்த நாளில் கருப்பு நிற ஆடைகளை வாங்க வேண்டாம், ஏனெனில் இந்த நிறம் எதிர்மறை ஆற்றலின் அடையாளம். மற்ற நிற ஆடைகளை வாங்கலாம்.

ஐப்பசி மாத ராசி பலன்கள் 2024: ஒன் லைனில் ஒரு மாசத்துக்கான பலன்கள்!

பணம், பாசிட்டிவ் எனர்ஜி, வெற்றி பெருக; இந்த ஒரு பொருள் போதும்!

படுக்கையில் ஏன் அமர்ந்து சாப்பிட கூடாது தெரியுமா?

வீட்டிற்கு கருப்பு எறும்பு வருவது அதிர்ஷ்டமா..?