- Home
- Astrology
- Jan 07 Kanni Rasi Palan: கன்னி ராசி நேயர்களே, தடைபட்ட எல்லா காரியமும் இன்று முதல் வேகம் எடுக்கப்போகுது.!
Jan 07 Kanni Rasi Palan: கன்னி ராசி நேயர்களே, தடைபட்ட எல்லா காரியமும் இன்று முதல் வேகம் எடுக்கப்போகுது.!
January 07, 2026 Kanni Rasi Palangal: ஜனவரி 07, 2026 கன்னி ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

கிரக நிலைகள்:
கன்னி ராசி நேயர்களே, சந்திரன் பன்னிரெண்டாம் வீட்டிலும், ராசிநாதன் புதன் தனுசு ராசியிலும், சூரிய பகவான் தனுசு ராசியிலும் உள்ளனர். செவ்வாய் மற்றும் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு சாதகமாக உள்ளது.
பொதுவான பலன்கள்:
நாளின் தொடக்கத்தில் சற்று மந்த நிலை இருந்தாலும், மதியத்திற்கு மேல் உற்சாகம் பிறக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் பெரியவர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. தேவையற்ற அலைச்சல்கள் குறையும். திட்டமிட்ட காரியங்கள் ஓரளவுக்கு கைகூடும்.
நிதி நிலைமை:
இன்றைய தினம் பணவரவு சீராக இருக்கும். எதிர்பாராத பயணங்கள் அல்லது மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. கொடுத்த கடன்கள் திரும்பி வருவதற்கான அறிகுறிகள் உண்டாகும்.
தனிப்பட்ட வாழ்க்கை:
வாழ்க்கைத் துணையுடன் சிறு கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வார்த்தைகளில் கவனம் மற்றும் நிதானம் தேவை. கண் எரிச்சல், கால் வலி போன்ற சிறிய உபாதைகள் வரலாம். போதுமான ஓய்வு அவசியம். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நாளாகும்.
பரிகாரம்:
மகாவிஷ்ணு அல்லது நரசிம்மரை வழிபடுவது மிகுந்த நன்மைகளைத் தரும். புதன்கிழமை என்பதால் அருகில் உள்ள நவக்கிரகஙழ ஆலயங்களுக்குச் சென்று புதன் பகவானுக்கு பச்சைபயிறு நைவேத்யம் செய்து வழிபடவும். பசுவிற்கு அருகம்புல் அல்லது பச்சை காய்கறிகளை வழங்குவது தடைபட்ட காரியங்களை வெற்றியாகும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

