MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • இந்த ராசிக்காரர்களுடன் வாழ்வது ரொம்ப கஷ்டம்.. உங்க துணையின் ராசியும் இருக்கான்னு செக் பண்ணுங்க..

இந்த ராசிக்காரர்களுடன் வாழ்வது ரொம்ப கஷ்டம்.. உங்க துணையின் ராசியும் இருக்கான்னு செக் பண்ணுங்க..

ராசிகளின் அடிப்படையில் பார்க்கும் போது, இந்த 5 ராசிக்காரர்களுடன் வாழ்வது கடினம்

2 Min read
Ramya s
Published : Aug 23 2023, 10:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

ஒருவருடன் சேர்ந்து வாழ்வது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. ஏனெனில் ஆளுமைகள், தகவல் தொடர்பு பாணிகள் மற்றும் தனிப்பட்ட விருப்பத்தேர்வுகள் போன்ற பல விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில் ராசிகளின் அடிப்படையில் பார்க்கும் போது, இந்த 5 ராசிக்காரர்களுடன் வாழ்வது கடினம். எனவே அவர்களுடன் தங்க விரும்பினால், நீங்கள் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். உங்கள் நண்பர், துணை அல்லது ரூம்மேட் அவர்களில் ஒருவரா? என்று தெரிந்துகொள்ள தொடர்ந்து படிங்க..

27
மேஷம்

மேஷம்

தீவிர வலுவான உணர்ச்சி மற்றும் உறுதியான இயல்புக்கு பெயர் பெற்றவர்கள் மேஷ ராசிக்காரர்கள். இந்த குணம் சிலருக்கு ஊக்கமளிக்கும், ஆனால் மற்றவர்களின் கண்ணோட்டத்தை கருத்தில் கொள்ளாமல் அவர்கள் தங்கள் வழியை வலியுறுத்தும் போது இது மோதல்களுக்கு வழிவகுக்கும். எனவே மேஷ ராசிக்காரர்களின் தூண்டுதல் போக்குகள் கணிக்க முடியாத வாழ்க்கைச் சூழலை உருவாக்கலாம். மேஷ ராசிக்காரர்களுடன் வாழும்போது அவர்களின் ஆற்றல் மற்றும் பிடிவாதத்தை போக்க பொறுமை மிக அவசியம்.

37
ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் பொதுவாக பிராக்டிக்கலான நபர்களாகவும், நிலையானவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் வழக்கமான செயல்கள் மற்றும் பொருள் உடைமைகள் மீதான அவர்களின் வலுவான இணைப்பு மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே இடங்களை பகிர்ந்து கொள்ளும் போதோ அல்லது முடிவுகளை எடுக்கும் போதோ அவர்கள் சமரசம் செய்வதில் சிரமம் இருக்கலாம். அவர்களின் பிடிவாதம் மோதல்களுக்கு வழிவகுக்கும், குறிப்பாக அவர்களின் கம்ஃபர்ட் ஸோனுக்கு பிரச்சனை வந்தால், அவர்களின் பிடிவாதம அதிகரிக்கும்.

47
மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் பொதுவாக இரட்டை இயல்புக்காக அறியப்படுகின்றனர். , இது அவர்களை உற்சாகமான மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய தோழர்களாக மாற்றும். இருப்பினும், அவர்களின் மனநிலை மற்றும் ஆர்வங்கள் பின்பற்ற கடினமாக இருக்கலாம். அவர்களின் அன்பு சில நேரங்களில் தனியுரிமை மற்றும் தனிமையின் தேவையை மறைத்துவிடும், மேலும் அவர்களுடன் இருக்கும் நண்பர்கள் அல்லது துணையுடன் மோதல் ஏற்படலாம்.

 

57
சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை மற்றும் மற்றவர்களை கவரும் தன்மை கொண்டவர்கள், ஆனால் அவர்களின் கவனம், அவர்களின் துணை மீது அதிகமாக இருக்கும். சிம்மராசிக்காரர்கள் தற்செயலாக உரையாடல்களிலும் முடிவுகளிலும் ஆதிக்கம் செலுத்தலாம், தங்களின் அங்கீகாரத்திற்கான தேவையை மற்றவர்களின் தேவைகளுடன் சமநிலைப்படுத்துவது சிம்ம ராசிக்கார்களுக்கு ஒரு சவாலாக இருக்கலாம்.

67
விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் தீவிரமான வலுவான உணர்ச்சிகளைக் கொண்டுள்ளனர். ஆம், அவற்றின் ஆழம் அர்த்தமுள்ள இணைப்புகளை வளர்க்கும், ஆனால் அவர்களின் இரகசிய இயல்பு மற்றும் வெறுப்புணர்வை வைத்திருக்கும் போக்கு அவநம்பிக்கையின் சூழ்நிலையை உருவாக்கலாம். அவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படையாகத் தெரிவிக்க போராடலாம், இது தவறான புரிதல்கள் மற்றும் தீர்க்கப்படாத சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

77

கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகியவை மிகவும் உணர்திறன் அல்லது மிகவும் நடைமுறைக்குரியவை என்பதால் இந்த ராசிக்காரர்களுடன் வாழ்வது கடினமாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் செய்திகள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Weekly Rasi Palan: மீன ராசி நேயர்களே, சனியின் வக்ர நிவர்த்தியால் அடிக்கப்போகும் ஜாக்பாட்.!
Recommended image2
Weekly Rasi Palan: கும்ப ராசி நேயர்களே, தொழில் ஸ்தானத்தில் சூரிய பகவான்.! வியாபாரம் பிச்சிக்க போகுது.!
Recommended image3
Weekly Rasi Palan: மகர ராசி நேயர்களே, இந்த வாரம் அடித்து ஆடப்போறீங்க.! வெற்றி உங்கள் பக்கம் தான்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved