- Home
- Astrology
- Guru Peyarchi 2025: 12 ஆண்டுகளுக்குப் பின் உச்ச ராசிக்கு செல்லும் குரு.. தீபாவளிக்கு முன் இந்த 3 ராசிக்காரர்கள் கோடீஸ்வரரா மாறப்போறீங்க.!
Guru Peyarchi 2025: 12 ஆண்டுகளுக்குப் பின் உச்ச ராசிக்கு செல்லும் குரு.. தீபாவளிக்கு முன் இந்த 3 ராசிக்காரர்கள் கோடீஸ்வரரா மாறப்போறீங்க.!
12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசிக்கு செல்ல இருக்கிறார். இதன் காரணமாக சில ராசிகள் நல்ல பலன்களை பெற உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

குரு பெயர்ச்சி 2025
ஜோதிட சாஸ்திரங்களில் படி குரு பகவான் மங்களகரமான கிரகமாக அறியப்படுகிறார். இவர் அக்டோபர் மாதத்தில் தனது உச்ச ராசியான கடக ராசிக்குள் நுழைகிறார். இந்த நிகழ்வு 12 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற உள்ளது. குரு பகவான் அறிவு, செல்வம், கௌரவம் மற்றும் அதிர்ஷ்டத்தின் அதிபதியாக கருதப்படுகிறார். குருவின் இந்த பெயர்சியால் சில ராசிகளின் தலைவிதியே மாற இருப்பதாக கூறப்படுகிறது. அந்த ராசிக்காரர்கள் யார் என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி நல்ல பலன்களைத் தரவுள்ளது. குருபகவான் உங்கள் கர்ம ராசிக்குள் நுழைய இருக்கிறார். எனவே வேலையில் பதவி உயர்வு, புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. குரு பெயர்ச்சி காலகட்டத்தில் நீங்கள் வணிகத்தில் நல்ல லாபத்தை பெறுவீர்கள். சொந்தமாக தொழில் செய்து வருபவர்களுக்கு லாபம் இரட்டிப்பாகும். இந்த குரு பெயர்ச்சி மதம், ஆன்மீகம் மற்றும் கல்வி தொடர்பான வாய்ப்புகளை வழங்க இருக்கிறது. தீபாவளிக்கு முன்பு திடீர் நீதி ஆதாயங்கள் அல்லது மதிப்பு மிக்க பரிசுகளை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி அதிர்ஷ்டகரமானதாக இருக்கும். இத்தனை நாட்களாக தடைபட்டு வந்த வேலைகள் முடிவடையலாம். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் திறக்கப்படலாம். இந்த காலகட்டத்தில் சிறிய அல்லது பெரிய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அது உங்களுக்கு நிதி ஆகாயங்கள் போன்ற பல நன்மைகளை பெற்று தரும். புதிய வீடு, மனை, நிலம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் குழந்தைகளிடமிருந்து நல்ல செய்திகளை கேட்பீர்கள். நிலவையில் இருந்து வந்த பணிகள் முடிவடையும். குடும்ப வாழ்க்கையில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும்.
கடக ராசி
12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு தனது உச்ச ராசிக்கு திரும்புவதால் கடக ராசிக்காரர்களுக்கு சிறப்பு நன்மைகள் கிடைக்க உள்ளன. குருவின் சஞ்சாரத்தால் சமூகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உங்கள் புகழ் கூடும். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலை மற்றும் தொழிலில் அதிர்ஷ்டம் கிடைக்கும். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பயணம் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். திருமணம் ஆகாமல் இருந்து வருபவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். பூர்வீக சொத்துக்கள் உங்கள் கைக்கு வந்து சேரலாம். எதிர்பாராத பண வரவுகள் மூலம் உங்கள் சேமிப்பை அதிகப்படுத்த சிறந்த காலமாகும்.
(குறிப்பு: இந்த தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் ஜோதிட கருத்துக்களில் அடிப்படையிலானது மட்டுமே. இதன் விளைவுகள் மற்றும் நம்பகத் தன்மைக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. ஒவ்வொருவரின் ஜாதகம் மாறுபடும் என்பதால் அனுபவம் மிக்க ஜோதிடரை அணுகி கலந்தாலோசிப்பது நல்லது)