- Home
- Astrology
- Astrology: குரு பகவானுக்கு மிகவும் பிடித்த 5 ராசிகள் எது தெரியுமா? இவர்களுக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்கும்.!
Astrology: குரு பகவானுக்கு மிகவும் பிடித்த 5 ராசிகள் எது தெரியுமா? இவர்களுக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்கும்.!
ஜோதிட சாஸ்திரங்களில் படி குரு பகவான் மிக முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். இவர் சில ராசிகள் மீது கூடுதல் அன்பையும், ஆசியும் பொழிவதாக கூறப்படுகிறது. அந்த ராசிகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Lord guru bhagavan favourite zodiac signs
ஜோதிட சாஸ்திரங்களின்படி குரு பகவான் தேவ குரு என்று அழைக்கப்படுகிறார். இவர் ஞானம், செல்வம், நிதி, ஆன்மீகம் மற்றும் சுப காரியங்களுக்கு அதிபதி ஆவார். குருவின் அருளும், அவருடைய பார்வையும் ஒருவரின் ஜாதகத்தில் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடம் பிரகாசமாக இருக்கும் என்பது நம்பிக்கை. “குரு பார்க்க கோடி நன்மை” என்கிற நம்பிக்கை மக்களிடையே இருந்து வருகிறது. ஒருவரின் ஜாதகத்தில் குருவின் நிலை சிறப்பாக இருந்தால் அவர்களின் வாழ்க்கை மிகவும் முன்னேற்றம் நிறைந்திருக்கும் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது. குரு பகவான் ஒரு ராசியில் சஞ்சரிக்கும் பொழுது அந்த ராசிகளுக்கு பல நன்மைகளை வழங்குவார்.
குரு பகவானுக்குப் பிடித்த ராசிகள்
ஜோதிடத்தில் குரு சுப கிரகமாக கருதப்படுகிறார். அவர் செல்வத்தின் காரகர். கல்வியின் ஆதாரம். ஆன்மீகத்தின் வழிகாட்டி. குரு ஒரு ராசியில் சுமார் ஒரு வருடம் தங்கி அந்த ராசிக்காரர்களுக்கு பல வகையான நன்மைகளை வழங்குகிறார். குறிப்பாக குரு பலமாக இருக்கும் பொழுது அல்லது சுப வீடுகளில் அமரும் பொழுது கோடீஸ்வர யோகத்தை உருவாக்கி செல்வம் மற்றும் வெற்றியை அள்ளித் தருகிறார். குரு பகவானுக்கு சில ராசிகள் மிகவும் பிடித்தவையாக கருதப்படுகிறது. இந்த ராசிகளில் சஞ்சரிக்கும் பொழுது அவர் முழு ஆற்றலுடன் செயல்படுவார். இவை பொதுவாக அவருடைய உச்ச ராசிகள், நட்பு ராசிகள், சொந்த ராசிகளாக இருக்கின்றன. இந்த பதிவில் குரு பகவானுக்கு பிடித்த ராசிகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
தனுசு
தனுசு குருவின் சொந்த ராசியாகும். இந்த ராசியில் குரு மிகவும் பலமாக இருப்பார். தனுசு ராசிக்காரர்களுக்கு குரு செல்வம், அறிவு மற்றும் ஆன்மீக வளர்ச்சியை வழங்குவார். குரு தனுசு ராசியில் இருக்கும் பொழுது அவருடைய பார்வை 5,7,9 ஆகிய வீடுகளில் விழுவதால் இந்த வீடுகளில் உள்ள கிரகங்களுக்கு பலம் சேர்க்கப்படுகிறது. இது செல்வ யோகத்தை உருவாக்கி தொழில், வணிகம் மற்றும் முதலீடுகளில் பெரும் வெற்றியைத் தரும். தனுசு ராசிக்காரர்களுக்கு குருவின் சுப பார்வையால் எதிர்பாராத செல்வம், வணிகத்தில் லாபம் மற்றும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம், வாழ்க்கையில் உயர்நிலை, செல்வ வளம், ஆன்மீக வளர்ச்சி, நிதி நிலைமை மேம்பாடு, புதிய வருமான ஆதாரங்கள் ஆகியவை உருவாகும்.
மீனம்
மீனமும் குருவின் சொந்த ராசியாகும். இந்த ராசியில் குரு பகவான் ஆன்மீகம், இரக்க குணம் மற்றும் செல்வத்தை வளர்க்கிறார். இந்த ராசிக்காரர்களுக்கு குருபகவான் உணர்ச்சி நிறைந்த மனதையும், ஆன்மீகப் பயணத்தையும், செல்வத்தையும் பெருக்கும் வாய்ப்புகளையும் வழங்குவார். மீனராசிக்காரர்கள் குருவின் அருளால் வணிகத்தில் வெற்றி, சொத்து சேர்க்கை மற்றும் சமூகத்தில் மரியாதை பெறுகின்றனர். மீன ராசியில் குரு இருக்கும்பொழுது 2,5,11 ஆகிய செல்வ வீடுகளை பார்க்கிறார். இது குடும்ப செல்வம், முதலீடுகள், லாபம், சொத்து சேர்க்கை ஆகியவற்றை உருவாக்குகிறது. குருவின் ஆதிக்கத்தால் மீன ராசிக்காரர்கள் கலை, ஆன்மீகம் அல்லது சேவைத் தொழில்கள் மூலம் பெரும் செல்வத்தை அடைகின்றனர்.
கடகம்
கடகம் குருவின் உச்ச ராசியாகும். இந்த ராசியில் குரு பகவான் மிகவும் பலமாக செயல்படுவார். கடக ராசிக் காரர்களுக்கு செல்வம், குடும்ப நலன் மற்றும் சமூகத்தில் மரியாதை ஆகியவற்றை குரு வழங்குவார். கடகத்தில் இருக்கும் பொழுது அவர் செல்வத்தின் வீடான இரண்டாம் வீடு, கல்வி மற்றும் புத்தர பாக்கியத்திற்கான 5ஆம் வீடு, தொழிலுக்கு காரணமான பத்தாம் வீடு ஆகிய வீடுகளை பார்க்கிறார். இதன் காரணமாக தொழிலில் முன்னேற்றம், மாபெரும் செல்வம் உண்டாகும். கடக ராசிக்காரர்கள் குருவின் ஆதிக்கத்தால் சொத்து, நிலம் மற்றும் வணிக முதலீடுகளில் பெரும் லாபத்தை பெறுவார்கள்.
விருச்சிகம் மற்றும் சிம்மம்
விருச்சிகம் குருவின் நட்பு ராசியாகும். இந்த ராசியில் குரு மறைமுகமான செல்வம், ஆராய்ச்சி மற்றும் ஆன்மீகத்தில் வெற்றியை வழங்குவார். விருச்சிகத்தில் குரு இருக்கும் பொழுது அவர் ஆராய்ச்சி, மருத்துவம் அல்லது மறைமுகமான தொழில்களில் செல்வத்தை உருவாக்குவார். அவருடைய பார்வை செல்வ வீடுகளில் விழுவதால் எதிர்பாராத செல்வம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. விருச்சிக ராசிக்காரர்கள் குருவின் ஆதிக்கத்தால் பங்குச்சந்தைகள், பிற முதலீடுகள், ஆராய்ச்சி சார்ந்த தொழில்களில் பெரும் செல்வத்தை அடைகின்றனர். சிம்ம ராசிக்காரர்களுக்கும் குருபகவான் தலைமைப் பண்பு, செல்வம் மற்றும் சமூக அந்தஸ்தை வழங்குவார். குரு இந்த ராசியில் இருக்கும் பொழுது இவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம், புது தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
குரு பகவான் உருவாக்கும் யோகங்கள்
குருபகவான் ஒரு ராசியில் சஞ்சரிக்கும் பொழுது அவருடைய பார்வை மற்றும் இணைப்பு மூலம் பல வகையான செல்வ வாய்ப்புகளை உருவாக்குகிறார். குரு பத்தாம் வீட்டை பார்க்கும் பொழுது தொழிலில் முன்னேற்றம், பதவி உயர்வு, வணிகத்தில் லாபம் கிடைக்கும்.
தன யோகம்: குரு 2,5, 11ஆம் வீடு ஆகிய செல்வ வீடுகளில் அமர்ந்து சுப கிரகங்களுடன் இணைந்தால் தனயோகம் உருவாகும். இதனால் தொழில் முதலீடு மற்றும் குடும்ப செல்வம் பெருகும்.
கஜகேசரி யோகம்: குரு லக்னத்தில் இருந்து 1,4,7,10 வீடுகளில் சந்திரனுடன் இணைந்து அல்லது சந்திரனை பார்க்கும் பொழுது கஜகேசரி யோகம் உருவாகும். இது செல்வம், புகழ் மற்றும் மரியாதையை வழங்கும்.
வசுமதி யோகம்: குரு சுப வீடுகளான 3,6,10,11 ஆகிய வீடுகளில் அமர்ந்து செல்வ வீடுகளைப் பார்க்கும் பொழுது இந்த யோகம் செல்வ மலையை பொழியச் செய்யும்.
(குறிப்பு: குருபகவான் தனுசு, மீனம், கடகம், விருச்சிகம் மற்றும் சிம்மம் ஆகிய ராசிகளில் மிக பலமாக செயல்படுகிறார். இந்த ராசிக்காரர்களுக்கு அவர் கோடீஸ்வர யோகத்தையும், செல்வ மழையையும் வழங்குவார். இருப்பினும் ஒருவரின் ஜாதகத்தில் குருவின் அமைப்பு, பிற கிரகங்களின் இணைப்பு மற்றும் தசா புத்திகள் வேறுபடலாம். குருவின் ஆசியைப் பெற வியாழக்கிழமைகளில் குருவுக்கு விரதம் இருப்பது, குருவுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது மற்றும் தான தர்மங்கள் செய்வது ஆகியவை மிகுந்த பலனளிக்கலாம். இதன் மூலம் வாழ்க்கையில் செல்வ மற்றும் முன்னேற்றம் பெறலாம்)