- Home
- Astrology
- Pratiyuti Drishti Yog 2026: ஜனவரி 2026-ல் குரு-சூரியன் உருவாக்கும் சிறப்பு சேர்க்கை.! ஒரே இரவில் கோடீஸ்வரனாகப் போகும் 5 ராசிகள்.!
Pratiyuti Drishti Yog 2026: ஜனவரி 2026-ல் குரு-சூரியன் உருவாக்கும் சிறப்பு சேர்க்கை.! ஒரே இரவில் கோடீஸ்வரனாகப் போகும் 5 ராசிகள்.!
Pratiyuti Yog Rasi Palangal: 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் குரு மற்றும் சூரியன் இணைந்து ஒரு சிறப்பு சேர்க்கையை உருவாக்குகின்றனர். இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் நன்மைகளை அனுபவிக்க உள்ளனர். அந்த ராசிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

பிரதியுதி யோகம் 2026
வேத ஜோதிடத்தில் சூரியன் மற்றும் சுக்கிரன் இருவரும் மங்களகரமான கிரகமாக அறியப்படுகின்றனர். இந்த இரண்டு கிரகங்களின் இணைப்பும் சில ராசிக்காரர்களுக்கு சுப யோகங்களை அளிக்கும். அந்த வகையில் ஜனவரி 10, 2026 சூரியன் மற்றும் குருவுக்கு இடையே 180 டிகிரி இடைவெளி இருக்கும். அத்தகைய சூழலில் பிரதியுதி திருஷ்டி யோகம் உருவாகும். இந்த யோகம் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசியை சூரிய பகவான் ஆள்கிறார். எனவே சூரியன் மற்றும் குரு இணைந்து உருவாக்கும் பிரதியுதி யோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மைகளைத் தரும். இந்த யோகம் சிம்ம ராசியின் ஏழாவது வீட்டில் உருவாகும். ஏழாவது வீடு திருமணம் மற்றும் கணவன் மனைவி ஆகியோரை குறிக்கும் இடமாகும்.
எனவே இந்த காலகட்டத்தில் குடும்ப உறவுகள் சிறப்பாக இருக்கும். குழந்தைகளிடமிருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள், தகராறுகள் தீர்க்கப்பட்டு கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். முதலீட்டிற்கும் நல்ல நேரமாகும்.
துலாம்
குரு மற்றும் சூரியன் இணைந்து உருவாக்கும் பிரதியுதி யோகம் துலாம் ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மை தரும். நிதி ரீதியாக கஷ்டப்பட்டு வந்த துலாம் ராசிக்காரர்கள் ஜனவரி 10ஆம் தேதி முதல் நிவாரணம் பெற இருக்கின்றனர். புதிய வருமானத்திற்கான ஆதாரம் திறக்கப்படும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
கூட்டாண்மை மூலம் செய்யப்படும் வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் ஆளுமைத் திறன் மேம்படும். குரு பகவானின் அருளால் மாணவர்கள் கல்வியில் வெற்றிகளைப் பெறுவார்கள். வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறும். பல காரணங்களால் திருமணம் ஆகாமல் தடைபட்டு வந்தவர்கள், திருமணம் குறித்து சுப செய்திகளைக் கேட்பீர்கள்.
தனுசு
தனுசு ராசியின் அதிபதியாக குரு பகவான் விளங்கி வருகிறார். சூரியனுடன் குருவின் சேர்க்கை என்பது தனுசு ராசிக்காரர்களுக்கு புதிய உற்சாகத்தையும், சக்தியையும், முன்னேற்றத்தையும் அளிக்க உள்ளது. வெளிநாடு செல்ல காத்திருப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும்.
நீண்ட நாள் நோயால் அவதிப்பட்டு வந்தவர்கள் அதிலிருந்து நிவாரணம் பெற இருக்கிறீர்கள். உங்கள் தந்தை மூலம் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரலாம். தொழில் ரீதியாக நீண்ட பயணம் மேற்கொள்ள நேரிடலாம். புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்களின் கனவு இந்த காலகட்டத்தில் நிறைவேறும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு ஜனவரி 10ஆம் தேதி முதல் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படத் தொடங்கும். இந்த காலகட்டம் உங்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய கதவுகளை திறக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். சம்பளம் அதிகரிக்கக்கூடும். முடிவெடுக்கும் திறன் மேம்படும்.
பணியிடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். சுயமாக தொழில் செய்து வருபவர்களுக்கு லாபம் இரட்டிப்பாகும். எதிர்பாராத பண வரவு கிடைக்கும். பழைய கடன்களை அடைக்கும் சூழல் உருவாகும். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் தள்ளிப் போனவர்களுக்கு இந்த மாதம் நல்ல செய்தி வரும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

