- Home
- Astrology
- Astrology: 100 ஆண்டுகளுக்குப் பின் தீபாவளியில் குரு உருவாக்கும் ராஜயோகம்.! சொத்துக்களை குவிக்கப் போகும் 3 ராசிகள்.!
Astrology: 100 ஆண்டுகளுக்குப் பின் தீபாவளியில் குரு உருவாக்கும் ராஜயோகம்.! சொத்துக்களை குவிக்கப் போகும் 3 ராசிகள்.!
Hans Rajyog: தீபாவளி நாளில் குரு பகவான் ஹன்ஸ் ராஜயோகத்தை உருவாக்க இருக்கிறார். 100 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் இந்த ராஜயோகத்தால் பல ராசிகள் நன்மைகளை குவிக்க உள்ளனர்.

ஹன்ஸ் ராஜயோகம் 2025
வேத ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நகர்ந்து, பிற கிரகங்களுடன் இணைந்து யோகங்களை உருவாக்குகின்றன. இந்த யோகங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் சுப அல்லது அசுப பலன்களை வழங்குகின்றன. அந்த வகையில் இந்த வருடம் தீபாவளிக்கு முன்பாக குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு செல்ல இருக்கிறார். இதன் காரணமாக ஹன்ஸ் ராஜயோகம் உருவாக உள்ளது.
சுமார் 100 ஆண்டுகளுக்குப் பின்னர் தீபாவளி நாளில் இந்த ராஜயோகம் உருவாகிறது. மங்களகரமான இந்த யோகத்தால் மூன்று ராசிகள் சிறப்பான பலன்களை அனுபவிக்க உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு ஹன்ஸ் ராஜயோகம் மிகவும் மங்களகரமானதாகவும், சிறந்த பலன்களை அளிக்கும் என்றும் கருதப்படுகிறது. இந்த ராஜயோகம் உங்கள் ராசியின் லக்ன வீட்டில் உருவாகிறது. இதன் காரணமாக இந்த நேரத்தில் உங்கள் தன்னம்பிக்கை, மரியாதை, கௌரவம் ஆகியவை அதிகரிக்கும். நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றி பெறும். தொழில் செய்து வருபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பெரிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
கூட்டாக தொழில் செய்து வருபவர்கள் இந்த காலகட்டத்தில் நல்ல பலன்களை அனுபவிப்பார்கள். பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் விலகி சொத்துக்கள் உங்கள் கைக்கு வந்து சேரலாம். சட்ட ரீதியாக போராட்டம் நடத்தி வருபவர்கள் அதில் வெற்றி பெறுவீர்கள்.
துலாம்
துலாம் ராசியின் பத்தாவது வீடான கர்ம ஸ்தானத்தில் குருவின் சஞ்சாரம் நடைபெற இருக்கிறது. கர்ம ஸ்தானம் என்பது தொழில், வேலை, சமூக அந்தஸ்து, நற்பெயர் மற்றும் பொது வாழ்வில் ஒருவரின் சாதனைகளை குறிக்கும் வீடாகும். எனவே இந்த காலத்தில் துலாம் ராசிக்காரர்கள் தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் பதவி உயர்வு, புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
வணிகம் செய்து வருபவர்கள் நல்ல லாபம் பெறுவீர்கள். நிதி நிலையில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். இதன் காரணமாக பணத்தை சேமிக்க துவங்குவீர்கள். நல்ல திட்டங்களில் முதலீடு செய்வீர்கள். புதிய வாகனம், வீடு, நிலம் வாங்கும் யோகமும் உண்டு.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஹன்ஸ் ராஜயோகம் மிகவும் நன்மைகளைத் தரும். குருவின் சஞ்சாரம் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் நடைபெற இருக்கிறது. ஒன்பதாவது வீடு என்பது நீதி, தர்மம், ஆன்மீகம், தத்துவம், உயர்கல்வி, தந்தையின் உறவுகள், அதிர்ஷ்டம் மற்றும் வெளிநாட்டு பயணங்களை குறிக்கும் வீடாகும். எனவே விருச்சிக ராசிக்காரர்கள் இந்த காலக் கட்டத்தில் நல்ல நிதி முன்னேற்றத்தை அனுபவிக்க இருக்கிறீர்கள்.
உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை தொடர்பாக நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள நேரலாம். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தினருடனான உறவு இனிமையாக இருக்கும். தொழிலதிபர்கள் கடின உழைப்புக்கான பலன்களைப் பெறுவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)